தனது 89 வது வயதில் கலைஞர் கருணாநிதி குறும்பதிவு சேவையான டிவிட்டரில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.கலைஞர் 89 என்னும் டிவிட்டர் முகவரியில் அவர் டிவிட்டர் பக்கத்தை துவக்கியுள்ளார்.
கலைஞரின் அரசியலில் உடன்பாடு இருக்கிறதோ இல்லையோ டிவிட்டரில் அவரது வருகையை கைத்தட்டி வரவேற்கலாம்.
காரணம் கலைஞரை விட டிவிட்டர் போன்ற சேவையை பயன்படுத்த பொருத்தமான தலைவரை பார்ப்பது அரிது.
திமுக துவங்கிய காலம் தொட்டு கலைஞரின் எழுத்து தான் அக்கட்சியின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியிருக்கிறது.மேடை நாடகங்கள்,திரைப்பட வசனங்கள் என சுறுசுறுப்பாக செயல்பட்ட கலைஞரின் பேனா அவர் ஆட்சி நாற்காலியில் அமர்ந்த பிறகும் கூட தனது வேகத்தை இழந்து விடவில்லை.
எத்தனை வேலைகள் எத்தனை சுமைகள் இருந்தாலும் உடன்பிறப்பே என உரிமையோடு அவரது பேனா அழைக்காமல் இருந்ததில்லை.
பொது வாழ்க்கையில் கலைஞர் ஓய்வில்லாமல் உழைத்து வருகிறார்.இடைவிடாமல் கருத்து தெரிவித்து வருகிறார்.
கலைஞரின் எழுத்து சுறுசுறுப்பை கண்டு வியக்காமல் இருக்க முடியாது.
ஊடகத்தை பயன்படுத்தி கொள்வதில் ஆர்வமும் தேர்ச்சியும் மிக்க கலைஞர சமூக ஊடகம் என்று சொல்லப்படும் டிவிட்டருக்கு எப்போதோ வந்திருக்க வேண்டியவர்.
இப்போது கலைஞர் சார்பில் துவக்கப்பட்டுள்ள டிவிட்டர் பக்கத்தில் அறிமுக பகுதியில் அரசியல் தலைவர்,திமுக தலைவர் என்று மட்டுமே ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல் இரண்டு குறும்பதிவுகளாக டேசோ மாநாட்டு தீர்மானம் மற்றும் டெசோ மாநாடு வெற்றி என்னும் அறிவிப்பு இடம் பெற்றுள்ளன.இவையும் ஆங்கிலத்திலேயே உள்ளன.
இந்த பக்கம் கலைஞர் சார்பில் இயக்கப்படுபவையா அல்லது அவரே நேரடியாக இவற்றை வெளியிடுகிறாரா என்று தெரியவில்லை.
ஆனால் 140 எழுத்துக்களில் அவரது உடன்பிறப்புகளுக்கான குறும்பதிவுகளை படிப்பது சுவாரஸ்யமாகவே இருக்கும்.
மேலும் பேட்டிகளில் பளிச்சென பதில் அளிப்பதிலும் கேள்விகளை வைத்து கொண்டு சொற் சிலம்பம் ஆடுவதிலும் அவருக்கு நிகர் அவர் தான்.டிவிட்டரில் முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கும் அவர் இதே வேகத்தில் பதில் அளிக்கிறாரா என்று பார்ப்போம்.
ஆரம்பித்த வேகத்தில் அவருக்கு ஆயிரத்துக்குமான பின் தொடர்பாளர்கள் கிடைத்துள்ளனர்.பார்க்கலாம் உடன்பிறப்புகள் கழக மாநாட்டின் போது காட்டும் உற்சாகத்தை டிவிட்டரில் தங்கள் தலைவரை பின் தொடர்வதிலும் காட்டுகின்றனரா என்று!
கலைஞரின் டிவிட்டர் முகவரி;https://twitter.com/kalaignar89

0 Comments on “டிவிட்டரில் கலைஞர்!.”
திண்டுக்கல் தனபாலன்
சற்று முன் தான் அறிந்தேன்…
நன்றி… தொடர வாழ்த்துக்கள்…
radhakrishnan
Thalaivarai vazththa vayathillai.thalaiva neengal palland vaala vazththum ungal udanpirappu dubai radhakrishnan yadav..
radhakrishnan
thamil
K.Ramasamy
thangalin tweeter varkai ulaga thamizarkaLukku urchagaththai aliththulathu.ungal karuththukkalai ulaga thamizarkalukku udanadiyaga thriviththida ithu nalla murchi. vazga ungal sevai.
g thamizhselvan
சற்று முன் தான் அறிந்தேன்…
நன்றி… தொடர வாழ்த்துக்கள்