டிவிட்டரின் அடிப்படை புரியாமல் மத்திய அரசு தணிக்கை கத்தியை சுற்றி கொண்டிருக்கிறது.இதன் பலனாக இணைய சுதந்திரம் பாதிக்கப்பட்டிருப்பதோடு அதன் அமைச்சர் ஒருவரே தனது டிவிட்டர் பக்கத்தை இழக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
மத்திய அமைச்சரவைவில் இளமையானவரும் இணைய பயன்பாட்டில் துடிப்பு மிக்கவருமான மிலிந்த தியோராவின் டிவிட்டர் பக்கம் தான் முடக்கப்பட்டிருக்கிறது.
மத்திய அரசு இணைய தணிக்கையில் ஈடுபடவில்லை என்று தியோரா தனது டிவிட்டர் பக்கத்தில் குறும்பதிவு மூலம் வாதாடியிருந்த நிலையில் அவரது டிவிட்டர் பக்கமே தணிக்கைக்கு இலக்காகி இருக்கிறது.
ஆட்சேபனைக்குறிய டிவிட்டர் பக்கங்களை முடக்குமாறு இந்திய அரசு டிவிட்டர் நிர்வாகத்தை கேட்டு கொண்டதன் ஒரு பகுதியாக பிரதமர் மன்மோகன் சிங் போன்ற ஆறு போலி டிவிட்டர் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன.
வட கிழக்கு மாநிலத்தவர் மீதான தாக்குதலுக்கு தூண்டிய துவேஷ கருத்துக்கள் பேஸ்புக் மற்றும் டிவிட்டரின் ஒரு சில பக்கங்கள் இடம்பெற்றிருந்ததை அடுத்து சர்ச்சைக்குறிய பக்கங்களை நீக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தினாலும் பிரதமரின் போலி பக்கங்கள் முடக்க வேண்டும் என கோரப்பட்டது கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என்று விமர்சிக்கப்படுகிறது.
போலி பக்கங்களின் உண்மையான நோக்கம் வில்லங்கமானதாக இல்லாத போது அதில் உள்ள நகைச்சுவையை ஏற்றுக்கொள்ளாமல் தணிக்கை செய்வது ஆரோக்கியமானது தான் என்று கேள்வி முன் வைக்கப்படுகிறது.
டிவிட்டர் உலகில் டிவிட்டராளர்கள் அர்சின் இந்த செயலை தங்கள் பாணியில் விமர்சன ஹாஷ்டேக்களை உருவாக்கி பதம் பார்த்து கொண்டிருக்கிறனர்.டிவிட்டரில் பொங்கும் இந்த கோபம் ஒரு புறம் இருக்க அரசின் இந்த முடிவு அதன் அமைச்சர்களில் ஒருவரான மிலிந்த் தியோராவின் டிவிட்டர் பக்கத்தை முடக்க வைத்திருக்கிறது.
இன்று வெள்ளிக்கிழமை நிலவரப்படி மிலிந்த தியோராவின் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்திற்கு போனால் மன்னிக்கவும் இந்த பக்கம் முடக்கப்பட்டுள்ளது என்னும் அறிவிப்பு காணப்படுகிறது.
அமைச்சரின் டிவிட்டர் பக்கம் முடக்கப்பட்டது ஏன் என்னும் காரணம் உடனடியாக தெரியவில்லை.ஆனால் மிலின் தியோரா என்ற பெயரில் இருக்கும் அமைச்சரின் போலி பக்கத்தை முடக்குவதற்கு பதிலாக அவரது உண்மையான பக்கம் தவறுதலாக முடக்கப்பட்டு விட்டதாக ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது.
இன்னொரு காரணம் தியோராவின் போலி பக்க முகவரியை சமர்பித்த போது அதிகாரி ஒருவர் அதில் விடுபட்டிருந்த ஒரு எழுத்தை சேர்த்து எழுதியதன் பயனாக உண்மையான பக்கம் முடக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.(மிலிந்த்தியோரா என்பதற்கு பதில் போலு முகவரி மிலிந்தியோரா என்று மட்டுமே இருக்கும்)
இல்லை தொழில்நுட்ப கோளாறு அல்லது ஹேக்கிங் போன்ற காரணமும் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
காரணம் எதுவென்று தெரியவில்லை,ஆனால் மத்திய அமைச்சரின் டிவிட்டர் பக்கம் முடக்கப்பட்டிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.அது மட்டுமா ஒரு விதத்தில் அரசுக்கு ஏற்பட்ட அவமானமும் கூட!
அரசு இதனை உணருமா என்று தெரியவில்லை.
———–
https://twitter.com/account/suspended
————
அப்டேட்.
இதனிடையே தியோராவின் டிவிட்டர் பக்கம் மீண்டும் செயல்பட துவங்கியிருக்கிறது.தவறுதலாக பக்கம் முடக்கப்பட்டதற்கு இமெயில் மூலம் டிவிட்டர் மன்னிப்பு கேட்டுக்கொண்டு அந்த பக்கத்தை மீண்டும் செய்லபட வைத்திருப்பதாக தியோராவின் அலுலவகம் தெரிவித்துள்ளது.தியோராவின் டிவிட்டர் பக்கத்தை சரி பார்த்து அதிகார பூர்வ அந்தஸ்து வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டதை அடுத்து டிவிட்டர் செய்த தவறால் இந்த பக்கம் தற்காலிகமாக முடக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.
எடு எப்படியோ தணிக்கை என்பது அது உத்தேசித்ததற்கு மாறான விளைவுகளையே ஏற்படுத்தக்கூடும் என்பதற்கான உதாரணம் தான் இந்த சம்பவம்.
———–
வட கிழக்கு மாநில வதந்தி விவகாரம் வெடித்த நிலையில் சமூக ஊடகங்கள் மீதான தணிக்கை பற்றி அதன் இரு பக்க நியாயங்கள் பற்றி விரிவாக எழுத திட்டமிட்டுள்ளேன்.விரைவில் எழுதுகிறேன்.