ஹாஷ்டேகுகள் என்பவை டிவிட்டரில் ஒருவருக்கு வேண்டிய குறும்பதிவுகளை அடையாளம் காட்டக்கூடிய பதமாக கருதப்படுகிறது.அவரவர் தேவைக்கேற்ப ஹாஷ்டேகுகளை உருவாக்கி கொள்ளலாம்.சில நேரங்களில் டிவிட்டரில் அதிர்வுகளை உண்டாக்கும் நிகழ்வுகள் அதற்கென ஹாஷ்டேகை உருவாக்ககூடும்.
இப்படி ஹாஷ்டேகுகள் உருவாகும்,பேச வைக்கும்,காணாமால் போகும்.ஆனால் என்றென்றும் பயன்படக்கூடிய சில நிரந்தர ஹாஷ்டேகுகள் இருக்கவே செய்கின்றன.அந்த ஷாஷ்டேகுகளை அறிந்து வைத்திருப்படும் பயன் தரக்கூடியதும் டிவிட்டர் உலகில் பயன்பதரக்கூடும்.
அப்படிப்பட்ட நிரந்தர ஹாஷ்டேகுகளை பார்க்கலாம்;
டிட்யூநோ!
உங்களுக்கு தெரியுமா என கேட்கும் இந்த ஹாஷ்டேகை இதே தெனியிலான குறும்பதிவுகளை வெளியிடும் போதெல்லாம் பயன்படுத்தலாம்.உங்களுக்கு தெரியுமா காபியை முதன் முதலில் பயன்படுத்தியது… என்பது போன்ற அரிய மற்றும் சுவாரஸ்யமான தகவல்களை குறும்பதிவாக வெளியிடும் போது அதனோடு டிட்யூநோ என்னும் பத்ததை சேர்த்து கொண்டால் இந்த வகையான தகவலில் ஆர்வம் உள்ளவர்கள் இதனை தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.எனவே உங்களிடம் வியக்க வைக்கும் தகவல்கள் இருந்தால் அதனை இந்த ஹாஷ்டேகுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.அல்லது இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ளும் விருப்பம் இருந்தால் டிட்யூநோ என்னும் ஹாஷ்டேகை கொண்டு தேடிப்பாருங்கள்!.
ஹவ்டு!
டீட்யூநோ போலவே தான் இந்த ஹாஷ்டேகும்.எப்படி என்ற கேள்விக்கு விளக்கம் அளிக்கும் குறும்பதிவுகள் என்றால் அவை இந்த ஹாஷ்டேக் மூலம் அடையாளப்படுத்தப்படுவது பொருத்தமானது.அவசியமானது.மெழுவர்த்தியை அதிகம் உருகாமல் இருக்க செய்வது எப்படி?பற்பசையை சரியாக பிதுக்குவது எப்படி?முட்டையை சரியாக வேக வைப்பது எப்படி? போன்ற வழிகாட்டி குறும்பதிவுகளை எல்லாம் இந்த அடையாளத்தோடு பகிர்ந்து கொள்ளலாம்.
ஹிஸ்டரி!
வரலாற்று விவரங்கள் அல்லது கால வரிசை தொடர்பான குறும்பதிவுகள் என்றால் அவை வரலாறு என குறிப்பிடப்படுவது வரலாற்றில் ஆர்வம் கொண்டவர்கள் அவற்றை தவற விடாமல் இருக்க உதவும்.
பண்டைய வரலாறு,தமிழர் வரலாறு என எந்த வரலாறு தொடர்பான குறும்பதிவாக இருந்தாலும் அவை வரலாற்றோடு வெளியாகட்டும்.ஏன நீங்களே கூட வரலாற்று தகவல்களை தேடி இந்த ஹாஷ்டேகுடன் இணைத்து பகிர்ந்து கொள்ளலாம்.
ஹோம்மேகிங்!
இல்ல பராமரிப்பு கலை தொடர்பான குறும்பதிவுகளை அதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு அடையாளப்படுத்த உதவும் ஹாஷ்டேக் இது.