டிவிட்டர் பதிவுகள் கிளர்ச்சிக்கும் புரட்சிக்கும் வித்திட்டுகின்றன.டிவிட்டர் பதிவுகள் புதிய செய்திகளை தெரிவிக்கின்றன.டிவிட்டர் செய்திகள் விவாதத்திற்கு வழி வகுக்கின்றன.டிவிட்டர் பதிவுகள் பங்குகளின் ஏற்ற இரக்கத்தை யூகிக்க உதவுகின்றன.
எனவே தான் டிவிட்டர் பதிவுகளையும் போக்குகளையும் ஆய்வு செய்வது புதிய ஜன்னல்களையும் வாயில்களையும் திறக்கின்றன.டிவிட்டர் ஆய்வில் பல்கலைகளும் பேராசிரியர்களும் தான் ஈடுபட வேண்டும் என்றில்லை நீங்களும் கூட டிவிட்டர் போக்குகளை ஆய்வு செய்யலாம்.
அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் டிவீட் ஆப் லைப் இணையதளம் பக்கம் செல்வது தான்.இந்த தளம் டிவிட்டர் பதிவுகளை ஆய்வு செய்ய உதவுகிறது.டிவிட்டரின் அறிவியல் என்னும் கோஷத்தோடு இந்த ஆய்வை முன வைக்கிறது.
ஆய்வு என்றால் பரந்து விரிந்த ஆய்வு அல்ல;இரண்டு முக்கிய காரணிகளை அடிப்படையாக கொண்டு இதில் ஆய்வு செய்யலாம்.ஒன்று பாலினம்.மற்றொன்று நேரம்.
அதாவது டிவிட்டர் பதிவுகள் ஆண்கள் பெண்கள் மத்தியில் அவ்வாறு வேறுபடுகின்றன என்றும் ,காலை,பதியம்,மாலை நேரங்களின் அடிப்படையில் எப்படி மாறுபடுகின்றன எனறும் தெரிந்து கொள்ளலாம்.
உதாரணத்திற்கு தொழில்நுட்பம் அல்லது அறிவியல் ஆகிய தலைப்புகளில் யார் அதிக டிவீட் செய்கின்றன என்று அறிய விரும்பினால் ,அந்த தளத்தில் அந்த சொல்லை சமர்பித்தால் போதும் டிவிட்டர் பதிவுகளில் அலசிப்பார்த்து ஆண்கள் அதனை அதிகம் பயன்படுத்தியுள்ளனரா பெண்கள் அதிகம் பயன்படுத்தியுள்ளனரா என்று வரைபடம் போட்டு காட்டிவிடுகிறது.இப்படி எந்த தலைப்பு குறித்தும் தகவல் பெற முடியும்.
மாதிரிக்கு பல சொற்களின் ஆய்வு விவரங்கள் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளன.
இதே போல குறிப்பிட்ட தலைப்பு குறித்து காலை அல்லது மாலை நேரங்களில் பதிவுகள் எந்த அளவு வெளியாகி உள்ளன என்டும் தெரிந்து கொள்ளலாம்.காலைஉணவு,மதிய உணவு,மற்றும் இரவு உணவு நேரங்களுக்கான பகுப்பு தரப்படுகிறது.
ஆய்வாளர்கள் மற்றும் மார்க்கெட்டிங் துறையினருக்கு இந்த சேவை மிகவும் பயன் தரக்கூடும்.டிவிட்டரின் போக்கு குறித்து அறிய விரும்பும் எவரும் இந்த சேவையை பயன்ப்டுத்தலாம்.அதன் மூலம் டிவிட்டர் வெளி தொடர்பாக பல சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.
இணையதள முகவரி;http://www.tweetolife.com

0 Comments on “டிவிட்டர் பதிவுகளை ஆய்வு செய்யும் இணையதளம்.”
கொச்சின் தேவதாஸ்
எனது இதயங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்