டிவிட்டரால் வேலை கிடைத்திருக்கிறது. டிவிட்டரால் வேலை போய்
இருக்கிறது. இப்போது டிவிட்டரால் ஒரு நட்சத்திரக்காதல் முறிந்திருக்கிறது.
டிவிட்டர் மோகம் முதலில் பிரபலங்களை தான் பிடித்து ஆட்டுகிறது. டிவிட்டர் செய்வது பிரபலங்களுக்கு உள்ளபடியே எந்த அளவுக்கு பயனுள்ளது என்பது ஒருபுறம் இருக்க ,’டிவிட்டர் செய்கிறார்’ என் கூறப்படுவது நல்ல விளம்பரமாக அமைந்து விடுகிறது.
விளம்பரத்தை மீறி டிவிட்டரிடுவது நட்சத்திரங்களை பொருத்தவரை ரசிகர்களோடு தொடர்பு கொள்வதற்கான நல்ல வழி.
ஆனால் டிவிட்டர் என்பது இருபக்கமும் கூரான கத்தியைபோன்றது. அதனை கவனமாக கையாளவேண்டும். இல்லையென்றால் சிக்கலில் முடியலாம்.
ஹாலிவுட் நடிகை ஜெனிஃபர் அனிஸ்டனின் காதல் இப்ப்டி தான் டிவிட்டரால் முடிவுக்கு வந்திருக்கிறது.
அனிஸ்டன் தற்போது ஜோலியின் கணவராக இருக்கும் ராட் பிட்டின் மாஜி காதலி என்ற விஷயத்தை எல்லாம் விட்டுவிடுவோம்.
இப்போது அவர் பாப் பாடகரான ஜான் மேயர்ஸ் என்பவரின் காதலி. அதாவது மா காதலி. சமீபத்தில் அவர்கள் காதல் முறிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த முறிவுக்கு காரணம் மேயர்சின் டிவிட்டர் மோகம் என்று கூறப்படுகிறது.
மேயர்ஸ் சதசர்வ காலமும் டிவிட்டரே கதியென கிடப்பவராக கருதப்படுகிறார்.தனது ஒவ்வொரு நடவடிக்கையையும் அவர் டிவிட்டரில் பதிவு செய்வதை ரசிகர்கள் விரும்புகின்றனர். ஆனால் காதலி ஆனிஸ்டன் இதை விரும்பவில்லை போலிருக்கிறது.
அதிலும் மேயர்ஸ் தன்னிடம் போதிய கவனம் செலுத்தவில்லை என்னும் கோபம் அவருக்கு இருக்கிறது. மேயர்சும் அதற்கேற்ப காதலியிடம் பாராமுகம் காட்டி வந்திருக்கிறார்.
இந்த நிலையில் அனிஸ்டன் சமிபத்தில் மேயர்சின் டிவிட்டர் பக்கத்தை பார்த்து கொதித்துப்போயிருக்கிறார்.
இந்தமனிதருக்கு டிவிட்டரில் உபயோகமில்லாத தகவக்ல்களை பகிர மட்டும் நேரம் உள்ளது ஆனால் என்க்கு போன் செய்யவோ . ஒரு எஸ் எம் எஸ் அனுப்பவோ முடியவில்லையா என அவர் பொங்கியிருக்கிறார்.
எனவே அவர் டிவிட்டரை கட்டக்கொன்டு அழட்டும் நான் போகிறேன் என் காதலிக்கு விடை கொடுத்து விட்டார். மேயர்ஸோ தன் பங்குக்கு சமாதானம் சொல்ல்க்கூட முற்படவில்லையாம். அப்படிய சரி என கூறிவிட்டாராம்.
அந்த அளவுக்கு டிவிட்டரை விரும்புகிறாரா எனத்தெரியவில்லை.எப்படியோ டிவிட்டர் மோகத்தால் அவர் காதல் முறிந்துவிட்டது.
டிவிட்டரால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கு இது உதாரணம் போலும்.
நிற்க மேயர்ஸ் அனிச்டனுக்கு டிவிட்டர் மூலமே சமதானம் சொல்லியிருந்தால் பிரச்சனை தீர்ந்திருக்கலாம் அல்லவா?

0 Comments on “டிவிட்டர் விவாகரத்து”
யாத்ரீகன்
>> மேயர்ஸ் அனிச்டனுக்கு டிவிட்டர் மூலமே சமதானம் சொல்லியிருந்தால் பிரச்சனை தீர்ந்திருக்கலாம் அல்லவா <<<
:-))))))))))))))
கானா பிரபா
😉 கதை இப்படிப் போகுதா
கானா பிரபா
நிற்க மேயர்ஸ் அனிச்டனுக்கு டிவிட்டர் மூலமே சமதானம் சொல்லியிருந்தால் பிரச்சனை தீர்ந்திருக்கலாம் அல்லவா?//
வாஸ்தவம் தான்