Written by: "CyberSimman"

உக்ரைன் நெருக்கடியும், தேடியந்திர குழப்பமும்!

உக்ரைன் நெருக்கடிக்கு ஆதரவான தனது முடிவுக்கு கேப்ரியல் வெயின்பர்க் (Gabriel Weinberg ) கடுமையான எதிர்வினையை எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், டக்டக்கோ நிறுவனர் என்ற முறையில் இத்தகைய எதிர்வினையை அவர் எதிர்பார்த்திருக்க வேண்டும் என்றே அதன் பயனாளிகள் கருதுவதற்கு இடம் இருக்கிறது. எப்படி இருந்தாலும், உக்ரைன் நெருக்கடி தொடர்பான நடவடிக்கையால் டக்டக்கோ தேடியந்திரம் சர்ச்சையில் சிக்கி இருப்பது இணைய தணிக்கை தொடர்பான விவாதத்தை மீண்டும் முன்னுக்கு கொண்டு வந்துள்ளது. இந்த பிரச்சனையை கொஞ்சம் விரிவாக பார்க்கலாம். டக்டக்கோ, […]

உக்ரைன் நெருக்கடிக்கு ஆதரவான தனது முடிவுக்கு கேப்ரியல் வெயின்பர்க் (Gabriel Weinberg ) கடுமையான எதிர்வினையை எதிர்பார்த்த...

Read More »

வேர்ட்லே வெற்றிக்கதை- காதலிக்கான உருவாக்கப்பட்ட வார்த்தை விளையாடு.

இணையத்தை கலக்கி கொண்டிருக்கும் வேர்ட்லே (Wordle ) விளையாட்டு இன்னமும் பெரிதாக வளர்ந்து கொண்டே இருக்கிறது. வேர்ட்லே விளையாடும் பயனாளிகளின் எண்ணிக்கை பெருகி கொண்டே இருக்கிறது என்றால், இந்த விளையாட்டு ஏன் இத்தனை பிரபலமாக இருக்கிறது எனும் ஆய்வும், அலசமும் தீவிரமாகி கொண்டிருக்கிறது. இதனிடையே முன்னணி ஊடகமான நியூயார்க் டைம்ஸ் வேர்ட்லேவை விலை கொடுத்து வாங்கியிருக்கிறது. உலகப்புகழ் பெற்ற ஊடகமான நியூயார்க் டைம்ஸ் செய்திகளுக்காக மட்டும் அல்லாமல், அதன் குறுக்கெழுத்து புதிர்கள் மற்றும் ஸ்பெல்லிங் விளையாட்டிற்காகவும் அறியப்படுகிறது. […]

இணையத்தை கலக்கி கொண்டிருக்கும் வேர்ட்லே (Wordle ) விளையாட்டு இன்னமும் பெரிதாக வளர்ந்து கொண்டே இருக்கிறது. வேர்ட்லே விளைய...

Read More »

பிரபஞ்ச ரகசியத்தை அறிய ஆதி ஒளியை தேடும் தொலைநோக்கி

நவீன அறிவியலின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாக கருதக்கூடிய ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, விண்வெளியில் அதன் பூர்வாங்க பணிகளை முடித்துக்கொண்டு செயல்பாட்டிற்கு தயாராகி இருக்கிறது. இனி இந்த தொலைநோக்கி கண்டறிந்து சொல்லக்கூடிய விஷயங்கள் பிரபஞ்ச ரகசியம் தொடர்பான புதிரை விடுவிக்க கூடியதாக இருக்கும். நாம் எங்கிருந்து வந்தோம்? , நம்மைத்தவிர இந்த பிரபஞ்சத்தில் வேறு எங்கேனும் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியம் இருக்கிறதா? ஆகிய இரண்டு பிரதான கேள்விகளுக்கு பதில் தேடி ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. […]

நவீன அறிவியலின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாக கருதக்கூடிய ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, விண்வெளியில் அதன் பூர்வாங்க பணிகளை முடி...

Read More »

ஜே.ஜே. சில குறிப்புகளும், புதிய மொழி கற்றல் இணையதளமும் !

சுந்தர ராமசாமியின்,  ’ஜே.ஜே சில குறிப்புகள்’ படித்த காலத்தில் மிகவும் பிடித்திருந்தது. ஜேஜேவை லட்சிய நாயகனாக பார்க்கலாம். இத்தகைய அதிநாயக பிம்பத்தை மையமாக வைத்து நாவல் எழுதுவது குறித்த முக்கிய விமர்சனமும் இருக்கிறது. ஆனால், என் வாசக மனது ஜேஜேவின் ரசிகன் என்றே இன்னும் சொல்ல விரும்புவது ஒரு பக்கம் இருக்க, இந்த நாவலின் பலமாக நான் கருதுவது, இதில் வரும் ஜேஜேவின் கருத்துகளையும், பார்வைகளையும் மேற்கோள்களாக பயன்படுத்திக்கொண்டே இருக்கலாம் என்பது தான். இந்த நாவலில் ஜேஜே […]

சுந்தர ராமசாமியின்,  ’ஜே.ஜே சில குறிப்புகள்’ படித்த காலத்தில் மிகவும் பிடித்திருந்தது. ஜேஜேவை லட்சிய நாயகனாக பார்க்கலாம்...

Read More »

நீங்கள் ஏன் இணைய மலர் மின்மடலை வாசிக்க வேண்டும்’

புகைப்பட கலையில் ’ரூல் ஆப் தேர்ட்’ எனப்படும் மூன்றின் விதி மிகவும் பிரபலமானது. இதே போல எழுத்துலகிலும் மூன்று விதிகள் எனும் கோட்பாடு முக்கியமானதாக இருக்கிறது. இதே வரிசையில், தனிப்பட்ட முறையில் தான் கற்றுக்கொண்ட மூன்று விதிகளை அனுபவ பாடமாக முன்வைக்கிறார் அமீத் ரனடைவ் (Ameet Ranadive). தொழில்முனைவோரான அமீத், மெக்கின்ஸி ஆலோசனை நிறுவனத்தில் ஒன்றரை ஆண்டுகள் பணியாற்றிய அனுபவத்தை மீடியம் வலைப்பதிவு வாயிலாக பகிர்ந்து கொள்கிறார். இத்தகைய பதிவு ஒன்றில் தான், மூன்று விதிகள் பற்றி […]

புகைப்பட கலையில் ’ரூல் ஆப் தேர்ட்’ எனப்படும் மூன்றின் விதி மிகவும் பிரபலமானது. இதே போல எழுத்துலகிலும் மூன்று விதிகள் எனு...

Read More »