Written by: "CyberSimman"

அம்மா டிவிட்டரில் என்னை பின் தொடர்ந்த போது!

டிவிட்டரில் நண்பர்களை ஆர்வத்தோடு பின் தொடர்கிறோம்.பின்தொடர்பவர்களை நண்பர்களாக்கி கொள்கிறோம்.ஆனால் பெற்றோர்களையோ அல்லது சகோதரர்களையோ டிவிட்டரில் பிந்தொடர நினைத்திருக்கிறோமா?இப்படி அப்பாவையோ அல்லது அம்மாவையோ டிவிட்டரில் பின் தொடர்ந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்திருக்கிறோமா? அப்பாவையோ அம்மாவையோ டிவிட்டரில் பின் தொடர்வது வெறும் புதுமை அல்ல;அது எத்தனை அற்புதமான அனுபவமாக இருக்ககூடும் என்பதை அமெரிக்காவை சேர்ந்த மயா கவுர்னியேரி அழகாக விவரித்திருக்கிறார். டிவிட்டர் அம்மாவை மேலும் சரியாக புரிய வைத்ததாக மீண்டும் அம்மாவோடு ஒன்ற வைத்ததாக அவர் குறிப்பிடுகிறார்.இதனை விவரித்து […]

டிவிட்டரில் நண்பர்களை ஆர்வத்தோடு பின் தொடர்கிறோம்.பின்தொடர்பவர்களை நண்பர்களாக்கி கொள்கிறோம்.ஆனால் பெற்றோர்களையோ அல்லது ச...

Read More »

டிவிட்டரில் சிறுகதைகள் எழுதி புகழ் பெற்ற எழுத்தாள‌ர்.

அர்ஜுன் பாசுவை டிவிட்டர் யுகத்தின் ஹெமிங்வே என்று சொல்லலாம்.ஹெமிங்க்வே எழுத்துலக மன்னன் என்றால் பாசு சிறுகதைகளின் மன்னன். சிறுகதைகள் என்றால் உண்மையிலேயே சிறிய சிறுகதைகள்.அவற்றின் நீளம் அகலம் ஆழம் எல்லாம் 140 எழுத்துக்கள் தான்.பாசு தனக்காக வகுத்து கொண்டிருக்கும் இலக்கணமும் இதுதான்.எல்லாம் 140 எழுத்துகளுக்குள் அடங்கிவிட வேண்டும்.அதாவது ஒரு எந்த ஒரு சிறுகதையும் ஒரு டிவிட்டில் துவங்கி,அதே டிவிட்டில் வளர்ந்து அந்த டிவிட்டிலேயே முடிந்துவிட வேண்டும். டிவிட்டரிலேயே எழுதப்படும் இந்த சின்ன சின்ன சிறுகதைகளை பாசு டிவிஸ்டர்ஸ் […]

அர்ஜுன் பாசுவை டிவிட்டர் யுகத்தின் ஹெமிங்வே என்று சொல்லலாம்.ஹெமிங்க்வே எழுத்துலக மன்னன் என்றால் பாசு சிறுகதைகளின் மன்னன்...

Read More »

திரைப்படங்களில் கணித காட்சிகள்.

கோலிவுட் படங்களை விட ஹாலிவுட் படங்கள் அறிவுப்பூர்வமானவை தெரியுமா?என்று கேட்க வைக்கிறது ஆலிவர் நில்லின் இணையதளம். ஆலிவர் உருவாக்கியுள்ள இணையதளம் கோலிவுட் ப‌டங்களை பற்றி எதையும் சொல்லவில்லை,ஹாலிவுட் படங்களோடு அவற்றை ஒப்பிடவும் செய்யவில்லை.ஆனால் அவரது இணையதளம் ஹாலிவுட் படங்களை பாராட்ட வைக்கும். காரணம் கணிதப்பிரியரான ஆலிவர் உருவாக்கியுள்ள அந்த தளம் ஹாலிவுட் படங்களில் இடம் பெற்ற கணிதம் தொட‌ர்பான காட்சிகளை எல்லாம் பட்டியலிடுகிறது.அதை பார்க்கும் போது ஹாலிவுட படங்களின் காட்சிகளில் கணிதம் பயன்படுத்தப்பட்ட விதம் பாராட்டும் படி […]

கோலிவுட் படங்களை விட ஹாலிவுட் படங்கள் அறிவுப்பூர்வமானவை தெரியுமா?என்று கேட்க வைக்கிறது ஆலிவர் நில்லின் இணையதளம். ஆலிவர்...

Read More »

ஓடுவதற்கு மனம் இருந்தால்;உதவுவதற்கு டிவிட்டர் உண்டு.

பெயர் சொன்னாலே பொருள் விளங்கும் என்பது போல ‘டிவிட்ரன்’ இணையதளத்தின் பெயரை கேட்டவுடனே அது ஓட்டமும் டிவிட்டரும் இணைந்த தளம் என்பதை புரிந்து கொண்டுவிடலாம். அதாவது ஓடுவதற்கான நண்பர்களை தேடிக்கொள்ள உதவுகிறது இந்த தளம். ஓடுவது நல்ல உடற்பயிற்சி என்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.ஓடுவது உடலுக்கும் சரி உள்ளத்திற்கும் சரி உற்சாகம் தரக்கூடியது.தினமும் ஓடலாம்,வாய்ப்பு கிடைக்கும் போது ஒடலாம்.ஆனால் பிரச்ச்னை என்றால் தனியே ஒடும் போது அதற்கான ஊக்கமோ உற்சாகமோ இல்லாமல் போகலாம்.அதைவிட நண்பர்களோடு சேர்ந்து ஓடினால் உற்சாகமாக‌ […]

பெயர் சொன்னாலே பொருள் விளங்கும் என்பது போல ‘டிவிட்ரன்’ இணையதளத்தின் பெயரை கேட்டவுடனே அது ஓட்டமும் டிவிட்டரும...

Read More »

அப்பாவின் திட்டுகளும் ஒரு டிவிட்டர் நட்சத்திரமும்.

அப்பாவிடம் திட்டு வாங்காத மகன்கள் உலகில் உண்டா சொல்லுங்கள்!எப்போதாவது திட்டு வாங்குபவர்கள் எப்போதுமே திட்டு வாங்குபவர்கள் போன்ற வேறுபாடு இருக்கலாமே தவிர எல்லோருமே அப்பாக்களிடம் திட்டு வாங்குபவர்கள் தான். அப்பாவின் திட்டுக்களால் திருந்தியவர்கள் உண்டு,மனம் வெதும்பியவர்கள் உண்டு.கடுப்பாகி கண்டு கொள்ளாமல் இருப்பவர்களும் உண்டு.ஆனால் அப்பாவின் திட்டுக்களால் உலகப்புகழ் பெற்ற ஒருவர் இருக்க முடியும் என்றால் அந்த அதிர்ஷ்டசாலி அமெரிக்க வாலிபர் ஜஸ்டின் ஹால்பெர்னாக தான் இருக்க வேண்டும். இது ஆச்சர்யமாக இருக்கலாம்! ஹால்பெர்ன் அப்பாவின் திட்டுக்களால் முதல் […]

அப்பாவிடம் திட்டு வாங்காத மகன்கள் உலகில் உண்டா சொல்லுங்கள்!எப்போதாவது திட்டு வாங்குபவர்கள் எப்போதுமே திட்டு வாங்குபவர்கள...

Read More »