Written by: "CyberSimman"

மனிதர்களுக்கு போட்டியாக மீம்களை உருவாக்கும் ஏ.ஐ!

இன்றைய மின்மடலை ஒரு ஹைக்கூ கவிதையுடன் துவக்குவோம். அந்த அளவு பெரிதான ஒரு கோப்பு, அது மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும், ஆனால், இப்போது காணாமல் போய்விட்டதே! – இது என்ன கவிதை, இதன் பொருள் என்ன என்று பார்ப்பதற்கு முன், ’மீம்’கள் (memes  ) தொடர்பாக ஒரு சுவாரஸ்யமான இணையதளத்தை அறிமுகம் செய்து கொள்ளலாம். மீம்களை நீங்கள் நன்றாக அறிந்திருக்கலாம். வாட்ஸ் அப்பிலும், பேஸ்புக் டைம்லைனிலும் அவை தானே நிறைந்திருக்கின்றன. மீம்களை உருவாக்குவதற்கு என்றே இணையதளங்களும் இருக்கின்றன. […]

இன்றைய மின்மடலை ஒரு ஹைக்கூ கவிதையுடன் துவக்குவோம். அந்த அளவு பெரிதான ஒரு கோப்பு, அது மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும்,...

Read More »

நேரம் நல்ல நேரம்

நேரம் தொடர்பான சில சுவாரஸ்யமான இணையதளங்களை பார்க்கலாம். முதலில் டைம்.இஸ் – https://time.is/ இப்போது நேரம் என்ன என்பதை இந்த தளத்தில் நுழைந்ததுமே தெரிந்து கொள்ளலாம். பயனாளியின் இருப்பிடம் அடிப்படையில், தற்போதைய நேரத்தை பெரிய எழுத்துகளில் தோன்றுவதோடு, உங்கள் கம்ப்யூட்டரில் காட்டப்படும் நேரத்திற்கும், தற்போதைய நேரத்திற்குமான வேறுபாடும் சுட்டிக்காட்டப்படுகிறது. அப்படியே இன்றைய தேதி, மாதம், கிழமை உள்ளிட்ட விவரங்களோடு, முக்கிய நகரங்களில் இப்போதைய நேரமும் சுட்டிக்காட்டப்படுகிறது. கொஞ்சம் கீழே வந்தால், உலக நகரங்களின் பெயர்கள் வரிசையாக சிதறிக்கிடக்கின்றன. […]

நேரம் தொடர்பான சில சுவாரஸ்யமான இணையதளங்களை பார்க்கலாம். முதலில் டைம்.இஸ் – https://time.is/ இப்போது நேரம் என்ன என்...

Read More »

லாக்டவுன் காலத்தில் கொண்டாடப்படும் பிபிசி தந்தை

பிபிசி தந்தையும், அதைவிட முக்கியமாக அவரது குடும்பமும் மீண்டும் தொலைக்காட்சியில் தோன்றி பேட்டி அளித்திருப்பது, லாக்டவுன் நெருக்கடிக்கு மத்தியில் பலருக்கும் உற்சாகம் அளித்துள்ளது. பெரும்பாலானோர் வீட்டுக்குளேயே முடங்கி கிடக்கும் சூழலில், இந்த குடும்பத்தை தொலைக்காட்சியில் பார்த்தவர்கள் எல்லாம், அட நம்ப குடும்பம் என்று குதூகலம் அடைந்துள்ளனர். கொரோனா உண்டாக்கியிருக்கும் மன உளைச்சலுக்கு மத்தியில், பிபிசி தந்தை குடும்பத்தின் தொலைக்காட்சி பிரவேசம், வீட்டிற்குள் இருப்பவர்கள் லேசாக கொண்டாடி மகிழ்வதற்கான தருணமாக அமைந்துள்ளது. யார் இந்த பிபிசி தந்தை, அவர் […]

பிபிசி தந்தையும், அதைவிட முக்கியமாக அவரது குடும்பமும் மீண்டும் தொலைக்காட்சியில் தோன்றி பேட்டி அளித்திருப்பது, லாக்டவுன்...

Read More »

கொரோனாவை கொல்வது எப்படி? வழிகாட்டும் இணையதளம்

கொரோனா வைரசை அரசும் சரி, மக்களும் சரி, கொஞ்சம் எளிதாக எடுத்துக்கொள்ள துவங்கிவிட்டது போல தோன்றுகிறது. இந்த பின்னணியில், கொரோனா பரவலை தடுப்பதற்கான அடிப்படையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை எளிமையாக வலியுறுத்தும் ’பிளாட்டன் தி கர்வ்…’ இணையதளத்தை அறிமுகம் செய்து கொள்வது நல்லது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான ஸ்பெயினைச்சேர்ந்த மென்பொருளாலர் ஒருவர் அமைத்துள்ள இந்த இணையதளம், கொரோனா தடுப்பில் கை கழுவுவதன் அவசியத்தை கணிதத்தின் துணை கொண்டு விளக்குகிறது. மொத்தமே ஒரு பக்கம் ( […]

கொரோனா வைரசை அரசும் சரி, மக்களும் சரி, கொஞ்சம் எளிதாக எடுத்துக்கொள்ள துவங்கிவிட்டது போல தோன்றுகிறது. இந்த பின்னணியில், க...

Read More »

உங்கள் கொரோனா உறுதிமொழி என்ன?

கொரோனா முடிந்த பிறகு என்ன செய்ய இருக்கிறீர்கள்? எனும் கேள்விக்கு உங்களை பதில் அளிக்க தூண்டும் வகையில் ’வென்கொரோனாஎண்ட்ஸ்’ (https://whencoronaends.com/) இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் என்னவெனில் , கொரோனாவுக்கு பின் நீங்கள் செய்யக்கூடிய ஐந்து விஷயங்களை பட்டியல் போட வேண்டும் என்பது தான். புத்தாண்டு உறுதி மொழி போல, இதை கொரோனா கால உறுதிமொழியாக கொள்ளலாம். நாம் எல்லோருமே வாழ்க்கையில் பல உறுதிமொழிகளை மேற்கொள்கிறோம். ஆனால், அதை நிறைவேற்ற முடியாமல் பிஸியாகி விடுகிறோம். இது பலருக்கும் […]

கொரோனா முடிந்த பிறகு என்ன செய்ய இருக்கிறீர்கள்? எனும் கேள்விக்கு உங்களை பதில் அளிக்க தூண்டும் வகையில் ’வென்கொரோனாஎண்ட்ஸ்...

Read More »