தீவிரவாதிகள் கோழைகள்; குரல் கொடுக்கும் இணைய சேவை

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கோழைகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதலுக்கு எதிராக இணையம் பலவிதங்களில் குரல் கொடுத்து வருகிறது.தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக டிவிட்டரில் ஹாஷ்டேக் உருவாக்கப்பட்டு குறும்பதிவுகள் வெளியிடப்படுகின்றன. இந்நிலையில் ,தீவீரவாத்திற்கு எதிரான கருத்தை வலியுறுத்தும் வகையில் புதுமையான குரோம் பிரவுசர் நீட்டிப்பு சேவை உருவாக்கப்பட்டுள்ளது. தீவிரவாதம் என்பது கோழைத்தனம் ,அதை தீவிரவாதிகளுக்கு உணர்த்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இந்த சேவை,இணையத்தில் தீவிரவாதம் தொடர்பான எல்லா செய்திகளிலும், தீவிரவதாதம் அல்லது தீவிரவாதிகள் எனும் சொற்களை கோழைத்தனம் அல்லது கோழைகள் என […]

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கோழைகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதலுக்கு எதிராக இணையம் பலவிதங்களில் குரல் கொடுத்து வருகிறது.த...

Read More »

உங்கள் இ-மெயிலில் பணிவு இருக்கிறதா?

இ-மெயிலை எப்படி பயன்படுத்துவது எப்படி? என பாடம் நடத்துவது எல்லாம் இனியும் தேவையில்லாத விஷயம் என்று தான் நம்மில் பலர் நினைக்கலாம்.ஆனால் இ-மெயிலை சரியாக பயன்படுத்துவது எப்படி என்பது என்பது தொடர்பாக எல்லோரும் கற்றுக்கொள்வதற்கான விஷயங்கள் இருக்கவே செய்கின்றன.சரியாக எனும் போது மறுமுனையில் இருப்பவர் அதிருப்தியோ,ஆவேசமோ அடையாத வகையில் வாசகங்களை மெயிலில் இடம்பெறச்செய்வது! ஏனெனில் மெயிலில் நாம் பயன்படுத்திம் தொனி அதை வாசிப்பவர் மனதில் பலவித பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.அதிலும் போகிற போக்கில் அதிகம் யோசிக்காமல் அனுப்பி வைக்கப்படும் […]

இ-மெயிலை எப்படி பயன்படுத்துவது எப்படி? என பாடம் நடத்துவது எல்லாம் இனியும் தேவையில்லாத விஷயம் என்று தான் நம்மில் பலர் நின...

Read More »

புதிய தளம் ;புதுமையான தளம்

இது வேலைவய்ப்புக்கான புதிய இணையதளம் என்றாலும் அமெரிக்காவை மையமாக கொண்டது.எனவே இங்கு வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு பயன்படாது.ஆனாலும் கூட இந்த தளத்தை அதன் புதுமையான கருத்தாக்கத்திற்காக தெரிந்து கொள்ளலாம்.இணையதள உருவாக்கத்தில் புதுமை அம்சம் தான் மையமாக இருக்கிறது என்பதற்கும் இந்த தளம் அழகிய உதாரணம்! லஞ்ச்கிருட் ( Lunchcruit ) எனும் அந்த இணையதளம் வேலை தேடுபவர்களையும், வேலைக்கு பொருத்தமான திறமைசாலிகளை தேடிக்கொண்டிருக்கும் நிறுவனங்களையும் இணைத்து வைக்கிறது.இது வழக்கமாக எல்லா வேலை வாய்ப்பு தளங்களும் செய்வது தான் – […]

இது வேலைவய்ப்புக்கான புதிய இணையதளம் என்றாலும் அமெரிக்காவை மையமாக கொண்டது.எனவே இங்கு வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு பயன...

Read More »

பேஸ்புக் நிறுவனரின் வெற்றிப்பாதை

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்கின் வெற்றிப்பாதை உங்களுக்கு தெரிந்திருக்கலாம். மார்க்கின் பயணம் முழுவதும் தெரியாவிட்டாலும் கூட, அவர் ஹார்வர்ட்டில் படித்தவர் என்பதும், அங்கு படிக்கும் போது உருவாக்கிய பேஸ்புக் இணையதளம் தான் அவரை வெற்றிகரமான இணைய முனைவோராராகவும், இளம் கோடீஸ்வராராகவும் ஆக்கியது எனும் சுருக்கமான விவரமேனும் நிச்சயம் தெரிந்திருக்கும். எல்லாம் சரி, மார்க்கின் ரெஸ்யூம் எப்படி இருக்கும் என்று உங்களுக்கு தெரியுமா? சிக்கலான கேள்வி தான். மார்க் வேலைக்கு செல்லாமலே லட்சக்கணக்கானோருக்கு வேலை கொடுக்கும் நிலைக்கு உயர்ந்து […]

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்கின் வெற்றிப்பாதை உங்களுக்கு தெரிந்திருக்கலாம். மார்க்கின் பயணம் முழுவதும் தெரியாவிட்ட...

Read More »

டக்டக்கோ தேடியந்திரத்திற்கு மாறலாமா?

தேடியந்திரம் என்றவுடன் கூகுள் தான் உங்கள் நினைவுக்கு வரும்.பிரபல டி.வி விளம்பரம் ஒன்றின் வாசகம் போல, எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து கூகுளை தான் தேடலுக்கு பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன் என பலரும் கூறலாம் ஆனால்,கூகுளைத்தவிரவும் பல தேடியந்திரங்கள் இருப்பதை நீங்கள் அறிவீர்களா?எல்லாம் தெரியும்,ஆனால் எந்த தேடியந்திரமும் கூகுளுக்கு நிகராக முடியாது என பதில் சொல்வதற்கு முன் டக்டக்கோ தேடியந்திரத்தை பயன்படுத்தி பார்க்க வேண்டும். கொஞ்சம் விநோதமான பெயர் கொண்ட டக்டக்கோ மாற்று தேடியந்திரங்களின் வரிசையில் முதலில் வருகிறது.கூகுளுக்கு […]

தேடியந்திரம் என்றவுடன் கூகுள் தான் உங்கள் நினைவுக்கு வரும்.பிரபல டி.வி விளம்பரம் ஒன்றின் வாசகம் போல, எனக்கு நினைவு தெரிந...

Read More »