எதையும் வாங்கும் முன் யோசிக்க வைக்கும் இணையதளம்

ai.jpegந்த பொருளை வாங்குவதற்கு முன்பாக, இந்த பொருள் இப்போது தேவைதானா? என்பதை ஒரு முறைக்கு இரு முறை கேட்டுக்கொள்வது நல்லது என்பது தனிநபர் நிதி ஆலோசனையில் தவறாமல் கூறப்படும் ஒரு விஷயம். தேவையில்லாத பொருட்களில் வீண் செலவு செய்வதை தவிர்க்க இந்த ஆலோசனை உதவும் என கருதப்படுகிறது. இந்த ஆலோசனையை நினைவூட்டும் வகையில் அழகான இணையதளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. திங்க்டுவைஸ்.மீ எனும் இந்த இணையதளம், கொஞ்சம் சுவாரஸ்யமான முறையில், ஒரு முறைக்கு இரு முறை யோசிக்கவும் ஆலோசனையை […]

ai.jpegந்த பொருளை வாங்குவதற்கு முன்பாக, இந்த பொருள் இப்போது தேவைதானா? என்பதை ஒரு முறைக்கு இரு முறை கேட்டுக்கொள்வது நல்லத...

Read More »

ஏ.ஐ முன்னோடி போல்யாவைத்தெரியுமா?

2407PMS_08_ஜார்ஜ் போல்யாவை உங்களுக்குத்தெரியுமா? எனக்கும் இதற்கு முன் தெரியாது. தினமலர் பட்டம் மாணவர் சிறப்பு பதிப்பிற்காக எழுதும் ஏ.ஐ தொடருக்காக, செயற்கை நுண்ணறவின் வரலாற்றுச்சுவடுகளை தேடிக்கொண்டிருந்த போது அறிமுகமான மேதைகளில் போல்யாவும் ஒருவர். போல்யா, ஹங்கேரி அமெரிக்க கணிதவியல் மேதை என்கிறது விக்கிபீடியா. ஆனால் தர்கம் சார்ந்த சிந்தனையே அவரது கோட்டையாக இருந்திருக்கிறது.  லாஜிக் எனப்படும் தர்கம் சார்ந்து அவர் முன்வைத்த கணிதவியல் கோட்பாடுகளும், வழிகளும் இயந்திரங்களை சிந்திக்க வைப்பதற்கான அடிப்படையாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக போல்யா, […]

2407PMS_08_ஜார்ஜ் போல்யாவை உங்களுக்குத்தெரியுமா? எனக்கும் இதற்கு முன் தெரியாது. தினமலர் பட்டம் மாணவர் சிறப்பு பதிப்பிற்க...

Read More »

பிளாஸ்டிக் பாட்டில் தடை: டிவிட்டர் மூலம் வந்த ஆலோசனையை ஏற்ற ஆனந்த் மகிந்திரா

பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் கேடு பரவலாக அறியப்பட்டிருந்தாலும், சமூகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதற்கான பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது. இதை தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா அழகாக உணர்த்தியிருக்கிறார். டிவிட்டர் மூலம் தெரிவிக்கப்பட்ட ஆலோசனையை ஏற்று அவர் தனது நிறுவன இயக்குனர் குழும கூட்டங்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள் இனி பயன்படுத்தப்பட மாட்டாது என அறிவித்து வழிகாட்டியுள்ளார். மகிந்திரா குழும தலைவரான ஆனந்த் மகிந்திரா, டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களை தகவல் தொடர்புக்கு பயன்படுத்துவதில் சிறந்து விளங்குகிறார். குறிப்பாக டிவிட்டரில் […]

பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் கேடு பரவலாக அறியப்பட்டிருந்தாலும், சமூகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை கு...

Read More »

பிட்காயினுக்கும் நாம் கொடுக்கும் விலை என்னத்தெரியுமா?

பிட்காயின் தொடர்பாக உருவாக்கப்பட்டுள்ள சுவாரஸ்மான இணையதளம், அதன் செயல்பாடு தொடர்பான திடுக்கிடும் தகவலையும் சொல்வதாக அமைந்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் அமைத்துள்ள அந்த இணையதளம், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்து பயன்படுத்தும் அளவிலான மின்சாரத்தை பிட்காயின் அமைப்பு பயன்படுத்துகிறது என்று தெரிவிக்கிறது. உண்மையில், திகைக்க வைக்கும் செய்தி தான் இது. பிட்காயினை உருவாக்க மின்சாரம் தேவை என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். ஆனால் அதற்கான மின்சார பயன்பாடு, ஒரு தேசத்தின் மின் பயன்பாட்டிற்கு நிகரானது என சொல்லப்படுவது […]

பிட்காயின் தொடர்பாக உருவாக்கப்பட்டுள்ள சுவாரஸ்மான இணையதளம், அதன் செயல்பாடு தொடர்பான திடுக்கிடும் தகவலையும் சொல்வதாக அமைந...

Read More »

டிஜிட்டல் குறிப்புகள் – 10 பழைய பாஸ்வேர்டை தூக்கி வீச வேண்டுமா?

நம்மவர்களுக்கு பாஸ்வேர்டு கவலையோ அல்லது பாஸ்வேர்டு பதற்றமோ இருப்பதாக தெரியவில்லை. நம்மிடம் இருப்பதெல்லாம் பாஸ்வேர்டு அலட்சியம் தான் என்று தோன்றுகிறது. இதற்கு உதாரணம் தேவை எனில் ஒரே பாஸ்வேர்டை தயக்கமே இல்லாமல் ஒன்றுக்கும் மேற்பட்ட சேவைகளுக்கு பயன்படுத்துவதை சொல்லலாம். ( இதை நீங்கள் செய்வதாக இருந்தால், உடனே மாற்றிக்கொள்ளுங்கள்) உடனே பாஸ்வேர்டில் கவலைப்பட என்ன இருக்கிறது என கேட்க தோன்றலாம். பாஸ்வேர்டில் கவலைப்பட அதாவது கவனிக்க பல விஷயங்கள் இருக்கின்றன. பாஸ்வேர்டு வலுவானதாக இருக்கிறதா?, அதற்கேற்ப போதுமான […]

நம்மவர்களுக்கு பாஸ்வேர்டு கவலையோ அல்லது பாஸ்வேர்டு பதற்றமோ இருப்பதாக தெரியவில்லை. நம்மிடம் இருப்பதெல்லாம் பாஸ்வேர்டு அலட...

Read More »