Tagged by: google

இணைய ஆவணப்படுத்தலுக்கு உதாரணம் இந்த தளம்

இணையதளங்களை கைவிடாமல் ஆவணப்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தி எழுதியிருந்தேன். பொதுவாகவே இணையத்தில் ஆவனப்படுத்தல் என்பது முக்கியமாகிறது. இணைய காப்பகமான வெப் ஆர்க்கீவ் இதை அருமையாக செய்து வருகிறது. இணைய ஆவணப்படுத்தலில் இணைய காப்பகம் மகத்தான முயற்சி என்றாலும், இதற்காக அதன் நிறுவனர் காலேவை எத்தனை பாராட்டினாலும் தகும் என்றாலும், இணைய ஆவணப்படுத்தல் இவரைப்போன்றவர்களின் பொறுப்பு என்று நாம் சும்மார் இருந்துவிடக்கூடாது. நம்மால் இயன்ற வகையில் இதற்கு கைகொடுக்கலாம். தனிநபர்கள் இன்னொரு முக்கிய விதத்திலும் இதில் பங்களிப்பு செலுத்தலாம். சொந்தமாக […]

இணையதளங்களை கைவிடாமல் ஆவணப்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தி எழுதியிருந்தேன். பொதுவாகவே இணையத்தில் ஆவனப்படுத்தல் என்பது...

Read More »

டக்டக்கோவிலும் ஏ.ஐ தேடல் வசதி

’வாத்து உதவியாளர்’ என்பது உங்களை ஈர்க்காமல் இருந்தாலும், டக்டக்கோ தேடியந்திரத்தை அறிந்தவர்களுக்கு இது நிச்சயம் ஈர்ப்புடையதாக இருக்கும். ஏனெனில், டக்டக்கோ தேடியந்திரமும் ஏ.ஐ சார்ந்த தேடல் வசதியை வழங்க துவங்கியிருப்பதன் அடையாளம் தான் இந்த வாத்து உதவியாளர் சேவை. டக்டக்கோ, கூகுளுக்கான மாற்று தேடியந்திரங்கள் வரிசையில் பல ஆண்டுகளாக முன்னிலையில் இருக்கும் தேடியந்திரம். கூகுள் போல, பயனாளிகள் தேடல் நடவடிக்கைகளை பின் தொடராமல், தகவல்களை சேமிக்காமல் தனியுரிமை அம்சம் கொண்ட தேடல் அனுபவத்தை அளிப்பது டக்டகோவின் தனித்தன்மையாக […]

’வாத்து உதவியாளர்’ என்பது உங்களை ஈர்க்காமல் இருந்தாலும், டக்டக்கோ தேடியந்திரத்தை அறிந்தவர்களுக்கு இது நிச்சயம் ஈர்ப்புடை...

Read More »

ஜிமெயில் சாட் ஜிபிடி வசதி

எல்லோரும் சாட் ஜிபிடி, கூகுளுக்கு போட்டி என்று பேசிக்கொண்டிருக்கின்றனர். கூகுளும் தன் பங்கிற்கு ஒரு ஏ.ஐ அரட்டை மென்பொருளை அறிமுகம் செய்திருக்கிறது. இன்னும் பலவித மேடைகளில் சாட் ஜிபிடி இணைக்கப்படுவது பற்றியும் பேசப்படுகிறது. ஆனால், ஜிமெயிலில் இதற்கு நிகரான வசதி ஏற்கனவே இருப்பதை நினைத்தால் வியப்பாக இருக்கலாம். ஸ்மார்ட் கம்போஸ் என குறிப்பிடப்படும் இந்த வசதியை நீங்கள் கூட கவனித்திருக்கலாம் அல்லது கவனிக்காமலேயே பயன்படுத்தியிருக்கலாம். அதாவது, ஜிமெயிலில் வாசகங்களை டைப் செய்யும் போது, அடுத்து வர வேண்டிய […]

எல்லோரும் சாட் ஜிபிடி, கூகுளுக்கு போட்டி என்று பேசிக்கொண்டிருக்கின்றனர். கூகுளும் தன் பங்கிற்கு ஒரு ஏ.ஐ அரட்டை மென்பொருள...

Read More »

சாட் ஜிபிடிக்கு இவர் தான் முன்னோடி !

திடிரென வானத்தில் இருந்து குதித்து விடவில்லை என்று சொல்வது போல, சாட் ஜிபிடி மென்பொருள் ஏதோ முழுக்க முழுக்க ஓபன் ஏ.ஐ நிறுவன ஆய்வால் மட்டும் உருவாகிவிடவில்லை. இதன் பொருள், சாட் ஜிபிடி உருவாக்கத்தில் ஓபன் ஏஐ ஆய்வை குறைத்து சொல்வதல்ல. ஆனால், சாட் ஜிபிடி எனும் ஏஐ அரட்டை மென்பொருள் வெற்றி என்பது, ஏ.ஐ எனும் செயற்கை நுண்ணறிவை உருவாக்குவதற்கான பல முன்னோடிகளின் பங்களிப்பு மற்றும் முன்னெடுப்புகளின் விளைவு என்பதை சுட்டிக்காட்டுவதாகும். சாட் ஜிபிடி ஒரு […]

திடிரென வானத்தில் இருந்து குதித்து விடவில்லை என்று சொல்வது போல, சாட் ஜிபிடி மென்பொருள் ஏதோ முழுக்க முழுக்க ஓபன் ஏ.ஐ நிறு...

Read More »

கூகுளுக்கு குட்பை சொல்ல வைக்குமா சாட் ஜிபிடி?

என்னடா இது கூகுளுக்கு வந்த சோதனை என்று, அதன் அபிமானிகளை சாட் ஜிபிடி புலம்ப வைத்திருக்கிறது. ஏ.ஐ நுட்பம் கொண்டு எந்த கேள்விக்கும் பதில் அளிக்கும் திறன் பெற்றிருப்பதால், இனி வருங்காலத்தில் கூகுளில் தேடுவதற்கு பதில் சாட் ஜிபிடியில் தேடிக்கொள்ளலாம் என பலரும் பேசத்துவங்கியிருக்கின்றனர். பலரும் என்பது இங்கு இணைய மற்றும் ஏ.ஐ வல்லுனர்களை குறிக்கும். இந்த பின்னணியில், பால் பவுக்கெய்ட் (Paul Buccheit) எனும் வல்லுனர், கூகுளின் கதை முடிந்தது என்பது போல கருத்து தெரிவித்திருக்கிறார். […]

என்னடா இது கூகுளுக்கு வந்த சோதனை என்று, அதன் அபிமானிகளை சாட் ஜிபிடி புலம்ப வைத்திருக்கிறது. ஏ.ஐ நுட்பம் கொண்டு எந்த கேள்...

Read More »