Tagged by: தேடல்

கூகுளும், தமிழக தேர்தலும்- சில கேள்விகள்!

தமிழக தேர்தல் தொடர்பான உரையாடல்கள் பெரும்பாலும், சமூக ஊடகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. சமூக ஊடகத்தில் பகிரப்படும் மீம்களும், குறும்பதிவுகளும், பதிவுகளுமே இதற்கான கருப்பொருளாக அமைகின்றன. இந்த பின்னணியில், கட்சிகளில் ஐடி குழுக்களும், வாக்குகளை குறி வைக்கும் நோக்கத்தோடு களமாடிக்கொண்டிருக்கின்றன. எனினும், தேர்தல் களம் தொடர்பான நிதர்சனத்தை உணர்த்த சமூக ஊடகங்கள் சரியான தளமாக இருக்குமா என்பது தெரியவில்லை. அதைவிட முக்கியமான விஷயம்,பெரும்பலானோர் தேர்தல் சார்ந்த உரையாடலில் சமூக ஊடகங்களை கவனிக்கும் அளவுக்கு தேடியந்திரமான கூகுளை கவனிக்கவில்லை என்று தோன்றுகிறது. […]

தமிழக தேர்தல் தொடர்பான உரையாடல்கள் பெரும்பாலும், சமூக ஊடகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. சமூக ஊடகத்தில் பகிரப்படும்...

Read More »

கொரோனா கால ஷாப்புங் லிஸ்ட்

கோவிட்.ஷாப்பிங்  ( https://covid.shopping/)தளத்தை அற்புதமான தளம் என்றெல்லாம் சொல்வதற்கில்லை. அடிப்படையில் எளிமையான அந்த தளத்தை, கொரோனா கால சூழலில் பொருத்திப்பார்த்தால், அதன் அருமையை புரிந்து கொள்ளலாம். கொரோனா வைரஸ் பெருந்தொற்றாக பரவத்துவங்கி உலகை திகைக்க வைத்த காலத்தில், பல நாடுகளில் பொதுமுடக்கம் மற்றும் தனிமைப்படுத்தல் அறிவிக்கப்பட்ட பின்னணியில் இந்த தளம் உருவாக்கப்பட்டது. பொதுமுடக்கம் ஒருவித குழப்பத்தையும், நிச்சயமற்றத்தன்மையையும் ஏற்படுத்திய நிலையில், பலருக்கும் பலவித பீதிகளும், அச்சங்களும் இருந்தன.  இவற்றில் பிரதானமானது, அத்தியாவசிய பொருட்கள் கிடைக்குமா என்பதாக இருந்ததால் […]

கோவிட்.ஷாப்பிங்  ( https://covid.shopping/)தளத்தை அற்புதமான தளம் என்றெல்லாம் சொல்வதற்கில்லை. அடிப்படையில் எளிமையான அந்த...

Read More »

டெக் டிக்ஷனரி- 30 வெப் கிராளர் (web crawler) – இணைய தவழான்கள்

இணையத்தில் நாம் மட்டும் தான் உலா வந்து கொண்டிருப்பதாக நினைக்க வேண்டாம். எண்ணற்ற மென்பொருள் எந்திரங்களும் இணையத்தை வலம் வந்து கொண்டிருக்கின்றன. இந்த மென்பொருள் எந்திரங்கள் தான் தான் கிராளர்கள் என அழைக்கப்படுகின்றன. சிலந்தி எந்திரன்கள் அல்லது தேடியந்திர எந்திரன்கள் எனும் இவை அழைக்கப்படுகின்றன. நாம் தகவல்களை இணையத்தில் உலாவுகிறோம் என்றால், இந்த எந்திரன்களுக்கு இணையத்தில் என்ன வேலை என கேட்கலாம். இந்த எந்திரங்கள் நம் பொருட்டே இணையத்தில் உலாவுகின்றன என்பதே இதற்கான பதில். ஆம், நாம் […]

இணையத்தில் நாம் மட்டும் தான் உலா வந்து கொண்டிருப்பதாக நினைக்க வேண்டாம். எண்ணற்ற மென்பொருள் எந்திரங்களும் இணையத்தை வலம் வ...

Read More »

வலை 3.0- வலை வாசல்களின் காலம்

எல்லா தகவல்களையும் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள வழி செய்ய வேண்டும் என்பதே இணையத்தில் பின்பற்றப்பட்டு வந்த விதியாக இருந்தது. அப்போது வலைவாசல்கள் ஆதிக்கம் செலுத்தின. இந்த காலகட்டத்தில் உருவாகி வளர்ந்து பின் இணைய விருட்சங்களில் ஒன்றாக வேரூன்றிய தளம் தான் அபவுட்.காம். (About.com). இந்த தளம் இப்போது அதன் பழைய வடிவில் இல்லை. அதன் பெயரும் இல்லாமல் போய்விட்டது. 2017 ம் ஆண்டு அபவுட்.காம், டாட்டேஷ் எனும் இணைய நிறுவனத்தால் வாங்கப்பட்டு அதற்குள் ஐக்கியமாகி வேறு […]

எல்லா தகவல்களையும் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள வழி செய்ய வேண்டும் என்பதே இணையத்தில் பின்பற்றப்பட்டு வந்த விதியாக இருந்தத...

Read More »

அசையும் படங்களை தேடுவதற்கான தேடியந்திரம்

எல்லாம் வல்ல கூகுள் என்று சொல்லப்படுவதை மீறி, ஒவ்வொரு வகையான தேடலுக்கும் அதற்கேற்ற தனி தேடியந்திரம் தேவை என நீங்கள் உணரும் தருணம் ஏற்படலாம். ஜிப்கள் என சொல்லப்படும் முடிவில்லா அசையும் படங்களை தேடும் நிலை ஏற்பட்டால் இதை உணரலாம். அப்போது நீங்கள் நாடக்கூடிய தேடியந்திரம் ‘ஜிஃபி’யாக தான் இருக்கும்.- https://giphy.com/ ஜிஃபி பற்றி பார்ப்பதற்கு முன் ஜிப்கள் பற்றி சுருக்கமாக பார்த்துவிடலாம். அசையும் படங்கள் என அழைக்க கூடிய ஜிப்களை இணையத்தில் எல்லா இடங்களிலும் பார்க்கலாம். […]

எல்லாம் வல்ல கூகுள் என்று சொல்லப்படுவதை மீறி, ஒவ்வொரு வகையான தேடலுக்கும் அதற்கேற்ற தனி தேடியந்திரம் தேவை என நீங்கள் உணரு...

Read More »