அப்பாவிடம் திட்டு வாங்காத மகன்கள் உலகில் உண்டா சொல்லுங்கள்!எப்போதாவது திட்டு வாங்குபவர்கள் எப்போதுமே திட்டு வாங்குபவர்கள் போன்ற வேறுபாடு இருக்கலாமே தவிர எல்லோருமே அப்பாக்களிடம் திட்டு வாங்குபவர்கள் தான்.
அப்பாவின் திட்டுக்களால் திருந்தியவர்கள் உண்டு,மனம் வெதும்பியவர்கள் உண்டு.கடுப்பாகி கண்டு கொள்ளாமல் இருப்பவர்களும் உண்டு.ஆனால் அப்பாவின் திட்டுக்களால் உலகப்புகழ் பெற்ற ஒருவர் இருக்க முடியும் என்றால் அந்த அதிர்ஷ்டசாலி அமெரிக்க வாலிபர் ஜஸ்டின் ஹால்பெர்னாக தான் இருக்க வேண்டும்.
இது ஆச்சர்யமாக இருக்கலாம்! ஹால்பெர்ன் அப்பாவின் திட்டுக்களால் முதல் டிவிட்டரில் தனக்கென தனி ரசிகர் படையை பெற்று ,பின்னர் புத்தகம் எழுதும் வாய்ப்பையும் பெற்று உலக அளவில் பிரபலமானவர்.அப்படியே தொலைக்காட்சி தொடர் வாய்ப்பையும் பெற்றிருக்கிறார்.
டிவிட்டர் உருவாக்கிய நட்சத்திரங்களில் அவர் மிகவும் சுவாரஸ்யமானவர்.அவரது கதை டிவிட்டர் வெற்றிக்கதைகளில் ஒன்று.
அந்த கதையை பார்ப்போம்.
டிவிட்டர் மூலம் கவனத்தை ஈர்க்க வேண்டும்,பெரிய அளவில் புகழ்பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்போ அதற்கான திட்டமோ இல்லாமல் ஹால்பெர்ன் டிவிட்டர் செய்யத்துவங்கினார்.அவர் டிவிட்டரில் பகிர்ந்து கொண்ட விஷய்ம் தான் அவரே எதிர்பாராத வகையில் புகழை தேடி தந்தது.
டிவிட்டரில் அவர் பகிர்ந்து கொண்டது அப்பாவின் திட்டுக்களை தான்!.
அப்பாவின் திட்டுக்களை விட்டில் சொல்லி புலம்பலாம்,நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம்,ஆனால் டிவிட்டரில் பகிர்ந்து கொள்ளலாமா என்று வியப்பு ஏற்படலாம்.
ஹால்பெர்னும் கூட அப்பாவின் திட்டுக்களை டிவிட்டருக்கு கொண்டு சென்றது தற்செயலானதே.
ஹால்பெர்னுக்கு அப்போது 28 வயது.மாக்சிம் பத்திரிகையில் பணியாற்றி கொண்டிருந்த ஹால்பெர்ன் லாஸ் ஏஞ்ஜெல்ஸ் நகர வாழ்க்கை வெறுத்து போய் சான்டியாகோ நகருக்கே திரும்பி தனது பெற்றோருடன் வசிக்கத்துவங்கியிருந்தார்.
ஹால்பெர்ன் வேலை வெட்டி இல்லாதவராக இல்லை என்றாலும் அவரது தந்தை சாம் ஹால்பெர்ன் தினமும் அவரை வறுத்தெடுக்க தவறவில்லை.
திட்டுக்களின் பல ரகம் உண்டு.சில திட்டுக்களை சிரித்து ரசித்து மகிழக்கூடியதாக இருக்கும்.ஹால்பெர்னின் தந்தையின் திட்டுக்களும் இந்த ரகம் தான்.மனித வசை பாடும் போது அதில் ஆவேசம் இருக்கிறதோ இல்லையோ புதுமையாகவும்,ரசிக்க கூடியதாகவும் ஏதோ இருக்கும்.கொஞ்சம் பச்சையாகவும் இருக்கும்.படபடவென்று அவர் திட்டித்தீர்க்கும் போது தனிச்சுவையோடு இருக்கும்.
அதோடு உலகின் மீதான அவரது அபிப்ராயத்தை சொல்வதாகவும் இருக்கும்.சமயங்களில் பெரிசுகளின் தத்துவ முத்துக்களாகவும் இருக்கும்.
சாம்பிலுக்கு ஒன்று பார்ப்போமா?
‘டாய்லெட்டில் ஒரு முறைக்கு மேல் நீர் ஊற்றியாக வேண்டும்.இல்லை,இல்லை நீ இதனை செய்தே ஆக வேண்டும்.இல்லை என்றால் வேறு டாய்லெட்டை பயன்படுத்து.இது என் டாய்லெட்’.
‘ இந்த காலத்தில் எல்லா பையன்களும் குண்டாக இருக்கின்றனர்.மகனே நீ சின்ன வயதிலும் குண்டாக தான் இருந்தாய்”
இப்படி அவர் திட்டுவதை கேட்கும் போது கோவம் வருகிறதோ இல்லையோ நிச்சயம் ரசித்து சிரிக்க தோன்றும்.
ஹால்பெர்ன் இவற்றை கேட்டு ரசிப்பதோடு தனது நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்வார்.ஒரு முறை நண்பர் ஒருவர் இந்த வசை முத்துக்களை எல்லாம் டிவிட்டரில் பகிர்ந்து கொள்ளலாமே என்று யோசனை தெரிவித்தார்.ஹால்பெர்னும் அதனை ஏற்றுக்கொண்டு தந்தை தினந்தோறும் திட்டுவதில் இருந்து மிகச்சிறந்த திட்டை தேர்வு செய்து அதனை டிவிட்டரில் வெளியிடத்துவங்கினார்.
திட்டுகளில் கெட்ட வார்த்தைகளும் இருக்கலாம் என்பதால் ‘ஷிட் மை டாட் சேஸ்’ (ஆங்கில எழுத்து வழக்கப்படி எஸ் மற்றும் ட் என்றே இருக்கும்)எனும் பெயரில் டிவிட்டரில் குறும்பதிவுகளை வெளியிட்டிருந்தார்.
அப்போது கூட தனது நட்பு வட்டார்த்தை மட்டுமே மனதில் கொண்டு அவர் இதனை செய்து வந்தார்.ஆனால் அவர் சற்றும் எதிர்பார்க்காத வகையில் பலருக்கும் இந்த திட்டுக்கள் பிடித்து போனது.பிடித்தவர்கள் மற்றவர்களுக்கு பரிந்துரை செய்தனர்.சில நாட்களில் பார்த்தால் அந்த டிவிட்டர் கணக்கை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்திருந்தது.
தினம் ஒரு திட்டு பகிர்வு என்னும் புதுமையான முயற்சி அனைவரையும் கவ்ர்ந்திருக்க வேண்டும்.அதோடு அந்த திட்டுக்கள் ஒரு முதியவரின் மனநிலையை அவரது உலக பார்வையை ஏமாற்றங்களை எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்தக்கூடியதாகவும் இருக்கவே பலரும் அவற்றை தொடர்ந்து படித்தனர்.
கவனத்தை ஈர்க்கும் டிவிட்டர் கணக்கும் நாளிதழ்களின் கண்ணில் படாமல் இருக்குமா?பல் முன்னணி அமெரிக்க நாளிதழ்கள் ஹால்பெர்னின் டிவிட்டர் பதிவு பற்றி செய்தி வெளியிட்டு அவரையும் பேட்டி எடுத்து போட அவரது டிவிட்டர் பதிவு மேலும் பலமடங்கு பிரபலமாகிவிட்டது.
அப்பா திட்டுவதை மட்டுமே ஒருவர் டிவிட்டர் பதிவாக வெளியிடுகிறாரா என்ற வியப்பும் அந்த பதிவுகள் தனி சுவையோடு இருந்ததும் ஹால்பெர்னை டிவிட்டர் நட்சத்திரமாக உயர்த்தியது.
,மிக விரைவிலேயே நியூயார்க் பதிப்பகம் ஒன்று இந்த குறும்பதிவுகளை புத்தகமாக எழுதிதர கேட்டது.அந்த புத்தகம் வெளியாகும் முன் இந்த குறும்பதிவுகள் அடிப்படையில் தொலைக்காட்சி தொடரை உருவாக்கும் வாய்ப்பும் தேடி வந்தது.கூடவே டாலர்களும் குவிந்தன என்பதை சொல்ல வேண்டியதில்லை.
இதில் என்ன வேடிக்கை என்றால் தனது திட்டுக்கள் அமெரிக்க முழுவதும் பிரபலமாகி உலக அளவில் பேசப்படுகின்றன என்பது ஹால்பெர்னின் அப்பாவுக்கு முதலில் தெரியாது.ஹால்பெருனும் இதையெல்லாம் யார் படிக்கப்போகின்றனர் எனற அலட்சியத்தில் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.ஆனால் பத்திரிகை செய்தி தொலைக்காட்சி பேட்டி என்று வந்த பின் அப்பாவுக்கு எல்லாம் தெரிந்துவிட்டது.
ஆனால் மனிதர் அப்போதும் அலட்டிக்கொள்ளவில்லை.மகனிடம் அவர் இரண்டும் விஷ்யஙக்ளை தான் சொன்னார்.என்னை யாரும் பேட்டி எடுக்க வரக்கூடாது.பணமும் எனக்கு தேவையில்லை.என பணம் என்னிடம் இருக்கிறது என்று மட்டுமே அவர் சொன்னார்.
கோபம் இல்லாத அந்த வெள்ளந்தியான மனத்தை தானே எல்லோரும் ரசிக்கின்றனர்.