இணையத்தில் இப்போது பிரபலமாக இருக்கும் போது எது தெரியுமா? சமூக ஊடக கணக்கு பக்கங்களை நீல நிறத்தில் மாற்றுவது தான். இன்ஸ்டாகிராமிலும், டிவிட்டரிலும் ஆயிரக்கணக்கானோர் இப்படி தங்கள் அறிமுக பக்கங்களை நீல நிறத்தில் மாற்றிக்கொண்டுள்ளனர். இதனால் நீல நிற பக்கங்கள் ஒரு இணைய இயக்கமாகவே மாறியிருக்கின்றன.
எனினும் இந்த மாற்றத்தை நீல நிற மோகம் என்றோ, வேலையில்லாத வெறும் செயல் என்றோ அலட்சியம் செய்துவிட முடியாது. இந்த போக்கில் பங்கேற்கும் ஒவ்வொருவரும், ஆப்பிரிக்க நாடான சூடானில் நிகழும் ஜனநாயக படுகொலைகளுக்கு எதிராக குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்றனர்.
நீல நிற மாற்ற பதிவுகளுடன் வெளியாகும் #BlueForSudan, #IAmSudaneseRevolution போன்ற ஹாஷ்டேக்களில் இருந்தே இதை புரிந்து கொள்ளலாம்.
சூடான் கடந்த சில ஆண்டுகளாகவே உள்நாட்டு பிரச்சனையால பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர், சூடான் அதிபர் ஓமர் அல் பஷீருக்கு எதிராக போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் தீவிரமாக ஏப்ரல் மாதத்தில் பஷீர் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். ஆனால் அதன் பிறகு போராட்டக்காரர்களுக்கும், இடைகால ஆட்சி குழுவுக்கும் இடையே கருத்து வேறுபாடு உண்டானது.
சூடானில் ஜனநாயகம் திரும்ப வேண்டும் என போராட்டக்கார்கள் வலியுறுத்தும் நிலையில், ராணுவம் இந்த போராட்டத்தை ஒடுக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது. இதனால் வன்முறை பரவி, நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
இந்த பின்னணியில், சூடான் வாலிபரான 26 வயது, முகமது மட்டார் (Mohamed Mattar ) ஜூம் மாதம் லண்டனில் இருந்து தாயகம் திரும்பி போராட்டத்தில் கலந்து கொண்டார். போராட்டத்தின் போது அவர் கொல்லப்பட்டார். சோகம் என்னவெனில், போராட்டத்தில் பங்கேற்ற இரண்டு பெண்களை காப்பாற்ற முயன்ற போது அவர் கொல்லப்பட்டார்.
இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தீவிரமாக இயங்கி வந்த முகமது மட்டாரின் மரணம், சூடான் மக்களை குறிப்பாக வெளிநாடுகளில் வாழும் சூடான் மக்களை உலுக்கி எடுத்துவிட்டது.
சூடான் போராட்டம் தொடர்பான கவனத்தை ஈர்க்கவும், மட்டார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கவும், அவரது நண்பர்கள் பலர் தங்கள் சமூக ஊடக பக்கங்களை நீல நிறத்தில் மாற்றிக்கொண்டனர். போராட்டத்தில் பலியான மட்டாருக்கு பிடித்த நிறம் நீலம் என்பதால் இவ்வாறு செய்தனர். ( அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் நிறமும் நீலம் தான்.)
மட்டாரை நினைவு கூறும் வகையில், தங்கள் சமூக ஊடக பக்கத்தை நீல நிறத்தில் மாற்றிக்கொண்டு, #BlueForSudan எனும் ஹாஷ்டேகுடன் சூடான் போராட்டம் பற்றிய செய்திகளை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். சஹத் கிதிர் (Shahd Khidir) எனும் பெண்மணி இது தொடர்பான முதல் பதிவை வெளியிட்டதாக கருதப்படுகிறது. இன்ஸ்டாகிராம் தளத்தில் அதிக பாலோயர்களை கொண்ட செல்வாக்காளராக கருதப்படும், இவர் தான் வழக்கமாக பதிவிடும் அழகு நல குறிப்புகளை கைவிட்டு, மட்டார் நினைவிலான குறிப்பை பகிர்ந்து கொண்டார்.
இதனையடுத்து மேலும் பலர் #BlueForSudan ஹாஷ்டேகுடன் சூடான் பதிவுகளை வெளிடத்துவங்கினர். துவக்கத்தில் வெளிநாட்டு வாழ் சூடான்வாசிகள் தான் இதை அதிகம் பகிர்ந்து கொண்டனர். சூடானில், இணைய வசதி இருட்டடிப்பு செய்யப்பட்டும் செய்திகள் கடும் தணிக்கைக்கு உள்ளாகும் நிலையில், சமூக ஊடகங்கள் வாயிலாகவே, அங்கு நடக்கும் விஷயங்களை சர்வதேச சமூகத்திற்கு உணர்த்த முடியும் என அவர்கள் நினைத்தனர்.
அதற்கேற்பவே, பிரபலங்களும், மற்றவர்களும் இந்த போக்கில் இணைந்து சூடான் போராட்டத்திற்கு ஆதரவான பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். அவர்கள் மறக்காமல் நில நிறத்தையும் அடையாளம் காட்டி வருகின்றனர்.
நீல நிறம், போராட்டக்காரர் ஒருவருக்கு பிடித்தமானது, அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வெளிப்படுத்தப்பட்டது, இப்போது, எங்களின் அனைத்து தியாகிகள் மற்றும் அவர்கள் கண்ட கனவுக்கான சின்னமாக மாறியிருக்கிறது” என டிவிட்டர் பயனாளி ஒருவர் இது பற்றி உணர்வு பொங்க குறிப்பிட்டிருந்தார்.
இன்னொருவர், சூடான் பக்கம் நில்லுங்கள், மனிதகுலம் பக்கம் நில்லுங்கள் என்று நில நிற கட்டத்தின் கீழ் குறிப்பிட்டிருந்தார்.
இந்தியரான அஞ்சலில் ராஜ் என்பவர், ’அநீதி என்பது எங்கும் அமைதிக்கான அச்சுறுத்தல் தான் ‘ என்று குறிப்பிட்டிருந்தார்.
இன்னொரு பயனாளி கண்ணீர் சிந்தும் நீல நிற பெண் உருவத்தை பகிர்ந்து கொண்டு, ’ தயவு செய்து உங்கள் வாழ்க்கை இங்கு முடிந்துவிடவில்லை. புதிய யுகத்தின் புதிய வரலாற்றில் நீங்கள் அங்கம் வகிப்பீர்கள்’ என உருக்கமாக குறிப்பிட்டிருந்தார். இன்னொரு டிவிட்டர் பயனாளி, சூடானில் பலியானவர்கள், காயமடைந்தவர்கள், வன்புணர்ச்சிக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கையை பகிர்ந்து கொண்டிருந்தார்.
இந்த ஹாஷ்டேக் உலகை காப்பாற்றாது, ஆனால் மற்றபடி கண்டுகொள்ளப்படாமல் போக கூடிய ஒரு மோசமான பிரச்சனை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும். மேலும் சூடான் மக்களுக்கு அவர்கள் தனியே இல்லை எனும் நம்பிக்கையை ஏற்படுத்தும். அவர்கள் குரலற்று இருக்கும் போது அவர்கள் குரலாக இருங்கள், என்றும் ஒருவர் டிவிட்டரில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
தொடர்ந்து பலரும் இதே நம்பிக்கையுடன் சூடானுக்காக இணையத்தில் குரல் கொடுத்து வருகின்றனர்.