டெக் டிக்ஷனரி – 30 இன்போடெமிக் (infodemic) – தகவல் தொற்று

Coronavirus-COVID-19-sign-reuதவறான தகவல்களும், பொய்ச்செய்திகளும் எல்லா காலத்திலும் உண்டு தான். ஆனால், இவை எந்த அளவுக்கு விபரீதமாக கூடும் என்பதை கொரோனா வைரஸ் பாதிப்பு தெளிவாக உணர்த்தியது. எனவே தான், இந்த விளைவை குறிப்பதற்காக என்ரே புதிய வார்த்தையை உருவாக்க வேண்டியிருந்தது.- இன்போடெமிக். தமிழில் ’தகவல் தொற்று’.
இன்போடெமிக் என்பது புதிய வார்த்தை. கோவிட் -19 என குறிப்பிடப்படும் கொரோனா வைரஸ் பரவத்துவங்கிய சூழலில், உலக சுகாதார அமைப்பு, இந்த வைரஸ் தொடர்பாக பரவிய கட்டுப்படுத்த முடியாத தகவல் அலை குறிக்க, உலக சுகாதார அமைப்பு இன்போடெமிக் எனும் வார்த்தையை முதலில் பயன்படுத்தியது.
” நாம் தொற்றுநோயை மட்டும் எதிர்த்து போராடிக்கொண்டிருக்கவில்லை: நாம் ஒரு தகவல் தொற்றையும் ( இன்போடெமிக்) எதிர்த்து போராடிக்கொண்டிருக்கிறோம்” என உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டாக்டர்.ஜெப்ரியாசெஸ் (Ghebreyesus ) டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.
பொதுவாக தொற்றுநோய்கள் எபிடெமிக் என குறிப்பிடப்படுகின்றன. கொரோனா வையம் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தியதால், பாண்டெமிக் எனப்படுகிறது. தொற்றுநோயுடன், அது தொடர்பான தகவல்களும் அதிவேகமாக பரவினால் என்ன செய்வது? அந்த தகவல்களில் தவறான விவரங்கள் அதிகம் கலந்திருந்தால் என்னாவது?
இப்படி ஒரு நிலையை தான் கொரோனா பரவலுக்கு மத்தியில் உலகம் எதிர்கொள்கிறது. இதை எதிர்கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்த்துவதற்காக தான், உலக சுகாதார அமைப்பு, தகவல் தொற்று எனும் வார்த்தையை உருவாக்கியது.
குறிப்பிட்ட விஷயம் தொடர்பாக அளவுக்கு அதிகமான தகவல்கள் உலா வருவதும், பிரச்சனைக்கான தீர்வை சிக்கலாக்கும் வகையில் இவை அமைவதும் என தகவல் தொற்றுக்கான விளக்கமாக கொள்ளலாம்.
உலக சுகாதார அமைப்பு சும்மா ஒன்றும் இந்த வார்த்தையை உருவாக்கிவிடவில்லை. இணைய வெளியிலும், குறிப்பாக சமூக ஊடக பரப்பில், கொரோனா தொடர்பான தவறான தகவல்கள் படுவேகமாக பரவுவதன் ஆபத்தை உணர்த்தவே இந்த வார்த்தையை உருவாக்கி, இதை கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை எடுத்துக்கூறியது. இத்தோடு கடமை முடிந்தது என்றும் இருந்துவிடவில்லை.
கொரோனா பரவலை தடுப்பதில், சரியான தகவல்கள் மிகவும் அவசியம் என்பதை வலியுறுத்தியதோடு, இதற்காக பொய்ச்செய்திகளை கட்டுப்படுத்தி அவற்றுக்கு விளக்கம் அளித்து தெளிவுபடுத்தும் பணியிலும் உலக சுகாதார அமைப்பு சுற்றிச்சுழன்று செயல்பட்டது.
கொரோனா வைரஸ் பொது சுகாதார நெருக்கடி என அறிவித்ததுமே, உலக சுகாதார அமைப்பின் இடர் குழு, பொய்த்தகவல் பரவலை எதிர்கொள்ளும் வகையில், WHO Information Network for Epidemics (EPI-WIN) எனும் தகவல் வசதியை உருவாக்கியது.
கொரோனா தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவும் தவறான செய்திகள் மற்றும் பொய்த்தகவல்களை கண்டறிந்து அவற்றுக்கான அறிவியல்பூர்வமான விளக்கத்தை அளித்து வருகிறது. மேலும் பேஸ்புக், டிவிட்டர், டிக்டோக் உள்ளிட்ட சமூக ஊடக நிறுவனங்களுடனும் இணைந்து தவறான தகவல்களை களைய முற்பட்டு வருகிறது.

https://www.thelancet.com/journals/lancet/article/PIIS0140-6736(20)30461-X/fulltext

’வாத்தியார்’ சுஜாதா தாக்கத்தில் ஒரு டெக் டிக்‌ஷனரி

http://cybersimman.com/category/tech/page/2/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *