எலிசா முதல் சாட்பாட் மட்டும் அல்ல, சாட்ஜிபிடி உள்ளிட்ட சாட்பாட்களுக்கு எல்லாம் தாய். ஏனெனில் கம்ப்யூட்டருடன் பேசலாம் எனும் கருத்தாக்கம் எலிசா மூலம் தான் சாத்தியமானது.
முதல் சாட்பாட் என்ற முறையில் எலிசா வரம்புகள் கொண்டது. எழுதிக்கொடுத்ததை படிக்கும் பேச்சாளர் போல அது தனக்கான திரைக்கதைக்கு ஏற்ப கேள்விகளுக்கு பதில் அளித்தது. ஆனால், இந்த வரம்பு தெரியாத அளவுக்கு பதில் அளிக்கும் புத்திசாலித்தனம் பெற்றிருந்தது. கேள்விகளில் உள்ள குறிப்பிட்ட சொற்களை உணர்ந்து கொண்டு அதற்கேற்ற கொக்கியை கொண்ட வாசகத்தை பதிலாக அளித்து உரையாடலை தொடரும் திறன் பெற்றிருந்தது.
சாட்ஜிபிடி போன்ற மொழி மாதிரியை அடிப்படையாக கொண்ட நவீன ஏஐ சாட்பாட்களின் அதி திறனோடு ஒப்பிட்டால் எலிசா கற்கால தன்மை கொண்டதாக தோன்றினாலும், அதன் ஆதார அம்சங்களில் இருந்து சாட்ஜிபிடி போன்ற சாட்பாட்கள் அதிகம் வேறுபட்டுவிடவில்லை என்பதில் தான் எலிசாவின் முன்னோடி தன்மை அமைந்துள்ளது.
சாட்ஜிபிடி யுகத்தில் எலிசா பற்றி தெரிந்து கொள்ள இன்னும் எண்ணற்ற விஷயங்கள் இருக்கின்றன என்பது மட்டும் அல்ல, பலரும் கவனிக்காத வேறு சில முக்கிய அம்சங்களும் இருக்கின்றன. எலிசாவுடன் பேச பயன்படுத்தப்பட்ட இடைமுகம் அதில் ஒன்று.
எலிசாவுடன் பேசுவது என்றவுடன், கம்ப்யூட்டர் திரையில் எழுத்து வடிவில் உரையாடுவது என்பதை புரிந்து கொள்கிறோம். எலிசா தொடர்பான காட்சி வடிவங்கள் பலவற்றில் கம்ப்யூட்டர் திரையில் எலிசாவின் பதில்கள் அடங்கிய எழுத்து வடிவத்தை காணலாம்.
அதாவது கம்ப்யூட்டர் மானிட்டர் வாயிலாக எலிசாவுடம் பேசியதாக கருதலாம் என்றாலும், அந்த காலத்தில் கம்ப்யூட்டர்களுக்கு மானிட்டரே கிடையாது என்பது கவனிக்க வேண்டிய செய்தி. எலிசா 1966 ல் உருவாக்கப்பட்டது. அப்போது கம்ப்யூட்டர்கள் ஆற்றல் பிள்ளை பருவத்தில் இருந்தாலும், தோற்றத்தில் பெரிதாக மெயின்பிரேம் வடிவிலேயே அமைந்திருந்தன.
மெயின்பிரேம் யுகத்தில், கம்ப்யூட்டருடன் தொடர்பு கொள்ள பஞ்ச் கார்டு எனும் அட்டை முறையே பயன்படுத்தப்பட்டது. எல்லாவற்றையும் அட்டையாக அளித்து அதன் வெளியீட்டையும் அட்டை வடிவில் அச்சிட்டுக்கொள்ள வேண்டும்.
இந்த பின்னணியில், கம்ப்யூட்டருடன் உரையாடும் திறன் கொண்ட மென்பொருள் என்பதே பெரும் தொழில்நுட்ப புரட்சியாகும். எலிசா அத்தகைய புரட்சியாக அமைந்தது. எனில் எலிசாவுடன் எப்படி உரையாட முடிந்தது என்றால், அதற்கான இடைமுகமாக ’டெலிடைப்’ எனும் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது.
டெலிடைப் என்பது இப்போது வழக்கொழிந்து போன பழைய தொழில்நுட்பம் என்றாலும், தந்தி யுகத்தில், உடனடியான செய்தி பரிமாற்றத்திற்கான தகவல் தொடர்பு சாதனமாக இருந்தது. மெயின்பிரேம் காலத்தில், இதே சாதனத்தை தான் கம்ப்யூட்டர்களை இயக்கவும் பயன்படுத்தினர். அதாவது பஞ்ச் கார்டுகளில் உள்ளீடு செய்யும் ஆணைகளை எழுத்து வடிவில் டெலிடைப் மூலம் அளிக்க முடிந்தது.
டெலிடைப் இயந்திரத்தை தொலைபேசியுடன் இணைக்கப்பட்ட டைப்ரைட்டர் என குறிப்பிடலாம். இத்தகைய தனி இயந்திரம் மூலமே எலிசாவுடன் பேசுவது சாத்தியமானது. பின்னர் கம்ப்யூட்டர் மானிட்டர் மூலம் உரையாடுவதும் சாத்தியமானது.
இன்று எலிசா பற்றி பேசப்படும் போதெல்லாம், அதன் நிறை குறைகளை அலசும் போது, பலரும் கவனிக்க மறுக்கும் விஷயமாக அதன் டெலிடைப் இடைமுகம் அமைகிறது. டெலிடைப்பில் டைப் செய்துவிட்டு அதன் பதிலுக்கு காத்திருப்பது ஏறக்குறைய மனிதர்கள் பதில் சொல்ல காத்திருப்பது போலவே என எலிசா பயனாளி ஒருவர் நினைவு கூர்ந்துள்ளார்.
டெலிடைப் இடைமுகம் என்பது எலிசா பற்றிய பழைய சுவாரஸ்யமான செய்தி மட்டும் அல்ல, எலிசா மென்பொருளை நாம் எந்த அளவுக்கு சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் செய்தியும் தான்.-
–