எலிசா விளைவும், சாட்ஜிபிடி எதிர்காலமும்!

ஏஐ வரலாற்றில் ஜோசப் வெய்சன்பாம் மறக்க முடியாத மனிதர் தான். வெய்சன்பாம் வேறு யாருமல்ல, உலகின் முதல் சாட்பாட்டை உருவாக்கிய கம்ப்யூட்டர் விஞ்ஞானி. அவர் உருவாக்கிய உரையாடல் மென்பொருளான எலிசா தான், இன்றைய சாட்ஜிபிடிக்கு முன்னோடி. எனினும், எலிசாவுக்காக வெய்சன்பாம் நினைக்கப்படுவதை விட. எலிசா விளைவுக்காக நினைவில் கொள்ள வேண்டியவராகிறார்.

சாட்ஜிபிடி யுகத்தில் நிச்சயம் எலிசா விளைவு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். எலிசா விளைவு அல்லது சாட்பாட்கள் தொடர்பான கவலை என்றும் குறிப்பிடலாம்.

கம்ப்யூட்டருடன் மனிதர்கள் உரையாடும் போது, மறுமுனையில் உரையாடுவது மென்பொருள் அல்ல என்பதை உணர முடியாத நிலை ஏற்பட்டால் இயந்திரங்கள் சிந்திக்கும் திறன் பெற்றதாக கருதலாம் என்பது கம்ப்யூட்டர் மேதை ஆலன் டூரிங் முன் வைத்த கருத்தாக அமைகிறது.

டூரிங் சொன்ன திசையில் உரையாடல் மென்பொருள்கள் உருவாக காரணமாக அமைந்த வெய்சன்பாம், கம்ப்யூட்டரோடு உரையாடும் போது மனிதர்கள் அது இயந்திரம் என்பதை மறந்துவிடுவதை கவனித்து வெகுவாக கவலை கொண்டிருக்கிறார். அவர் உருவாக்கிய எலிசா சாட்பாட், இன்றைய நவீன பாட்களுடன் ஒப்பிட்டால் தொழில்நுட்ப நோக்கில் பின் தங்கியது என்றாலும், அந்த காலகட்டத்தில் மனிதர்களுடன் மனிதர் போலவே எழுத்து வடிவில் உரையாடும் திறன் பெற்றிருந்தது என்பது தான் விஷயம்.

மனிதர்களோடு கம்ப்யூட்டர் உரையாடலை மேற்கொள்ளும் வகையிலான எலிசா மென்பொருளை 1966 ம் ஆண்டு வெய்சன்பாம் உருவாக்கினார். அந்த காலகட்டத்தில், கம்ப்யூட்டர் போன்ற இயந்திரத்தால் மனிதர்களுடன் உரையாட முடியும் எனும் கருத்தாக்கமே சோதனை சார்ந்த முயற்சியாக இருந்த நிலையில், உளவியல் வல்லுனருடன் உரையாடும் தோற்றத்தை அளிக்ககூடிய மென்பொருளாக எலிசாவை உருவாக்கினார்.

பயனாளிகள் கேட்கும் கேள்வியின் உள்ளீடு சார்ந்த குறிப்பிட்ட அர்த்தம் இல்லாத பொதுவான பதில்களை அளிக்கும் வகையில் ஒரு வித பகடி நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதை மீறி, இந்த மென்பொருளுடன் உரையாடிய பலரும் அதன் பதில்களால் ஈர்க்கப்பட்டு, இயந்திரத்துடன் பேசுகிறோம் என்பதை மறந்து செயல்பட்டனர்.

எலிசா மென்பொருளுக்கு பேசத்தெரியுமே தவிர, பேச்சின் பொருள் புரியாது. ( இன்று வரை சாட்பாட்களின் நிலை இது தான்.) ஆனால், அடுத்தடுத்த கேள்வி கேட்கத்தூண்டும் வகையில், கேள்விக்கு ஏற்ற மிக பொதுவான எதிர்வினை அளிக்கும் புத்திசாலித்தனம் கொண்டிருந்தது.

எலிசா உளவியல் நோக்கில் உரையாடலை மேற்கொண்டதால், பயனாளிகள் தங்களைப்பற்றி மேலும் தகவல்களை பகிரத்தூண்டும் வகையில் அதன் பதில்கள் அமைந்திருந்தது. இதன் விளைவாக, ஒரு சில பயனாளிகள் தங்கள் மனதில் உள்ளவற்றை எல்லாம் அந்த மென்பொருளிடம் திறந்துகாட்ட முற்பட்டனர். அது மட்டும் அல்ல, இப்படி அந்தரங்க தகவல்களை பகிரும் கட்டத்தில், அருகே வேறு யாரும் இருப்பதை விரும்பவில்லை. ஒரு சந்தர்பத்தில், வெய்சன்பாமின் பெண் உதவியாளரே, எலிசாவுடனான உரையாடல் அந்தரங்க தன்மைக்கு மாறியதும், அவரை வெளியேற முடியுமா என கேட்டிருக்கிறார்.

வெய்சன்பாம் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், தான் உருவாக்கிய மென்பொருளுக்கு கிடைத்த வெற்றியாக அவர் உற்சாகம் கொள்ளவில்லை. மாறாக, இது மோசமான திருப்பம் என்று வருந்தினார். ஒரு கம்ப்யூட்டருடன் பேசுவது என்றால், வெற்று சர்க்யூட்டுடன் தான் தொடர்பு கொள்கிறோம் என்பதை மனிதர்கள் உணராமல் போனது ஆபத்தான போக்கு என கருதினார். இதே போல, மனிதர்களை போலவே செயல்படும் இயந்திரங்களால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய குழப்பங்களை நினைத்து கவலைப்பட்டார்.

அவ்வளவு தான், அடுத்த கட்டமாக, எலிசாவை விட மேம்பட்ட பேசும் மென்பொருளை உருவாக்குவதற்கு பதிலாக, எலிசா போன்ற மென்பொருள்களுக்கு எதிராக செயல்படத்தீர்மானித்தார். அதாவது, மனிதர்கள் போலவே இயந்திரங்களை செயல்பட வைப்பதன் விபரீதத்தை வலியுறுத்த உறுதி கொண்டார்.

ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், மந்தையில் இருந்து பிரிந்த ஆடாக, வெய்சன்பாம், செயற்கை நுண்ணறிவு தொடர்பான சிக்கலான கேள்விகளை எழுப்பத்துவங்கினார். ஏஐ ஆய்வாளர்கள், பல விதங்களில் கம்ப்யூட்டருக்கு மனித திறனை அளிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில், மனிதர்களுக்கும் இயந்திரங்களுக்கமான எல்லை மறைவதில் உள்ள சிக்கல்கள் பற்றி எச்சரித்தார்.

இந்த எதிர்குரலால், ஏஐ ஆய்வாளர்கள் மத்தியில் வெய்சன்பாம் அதிருப்தி,  விரோதத்துடன் பார்க்கப்பட்டாலும், அவர் இயந்திர அறிவின் அபாயங்களை விரிவாக விவரித்து புத்தகம் ஒன்றையும் எழுதினார். 83 வயதில் மறையும் வரை ஏஐ ஆபத்துகள் பற்றி எச்சரித்துக்கொண்டே இருந்தார்.

இன்று ஏஐ எக்கச்சக்கமான பாய்ச்சல்களை நிகழ்த்திக்கொண்டிருந்தாலும் அதை கவனமாகவே அணுக வேண்டியிருக்கிறது. அந்த வகையில் வெய்சன்பாமையும், அவரது கருத்துக்களையும் மறக்காமல் இருப்பதே நல்லது.

நிற்க, ஒரு மென்பொருளுடன் பேசும் போது, தன்னிலை மறந்து கம்ப்யூட்டர் செயல்பாட்டை மனிதர்கள் செயல்பாட்டிற்கு நிகராக நம்பும் தன்மை எலிசா விளைவு என குறிப்பிடப்படுகிறது. எனவே சாட்ஜிபிடி சாதனைகள் பற்றி எல்லாம் பேசும் போது எலிசாவையும் நினைவில் கொள்ள வேண்டும், எலிசா விளைவையும் மனதில் கொள்ள வேண்டும்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.