கூகுளை சிறந்த தேடியந்திரம் என நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கலாம், தவறில்லை. அதற்காக கூகுளில் உள்ள குறைகளையும், போதாமைகளையும் அறியாமல் இருப்பது சரியா என்பதே கேள்வி.
கூகுளின் முக்கிய குறைகளில் ஒன்று, பயனாளிகள் தனது தேடல் முடிவுகளை கேள்வி கேட்க அனுமதிப்பதில்லை என்பது தான். அதாவது, குறிப்பிட்ட தேடலுக்கு குறிப்பிட்ட இணையதளம் முதலிடத்தில் பட்டியலிடப்பட்டது ஏன்? எப்படி? என யாரும் கேள்வி கேட்பதும் இல்லை, கூகுள் அதற்கு பதில் சொல்வதும் இல்லை.
கூகுள் தேடல் முடிவுகளின் பொருத்தம் அல்லது பயன்பாடு தன்மை தொடர்பாக கருத்து தெரிவிக்க வழி இருந்தாலும், அந்த வசதி பிரதானமாக முன்வைக்கப்படவில்லை என்பதோடு, பெரும்பாலும் அது ஒருவழி பாதையாகவே இருக்கிறது. கூகுள் தனது சேவையை மேம்படுத்திக்கொள்ள பயனாளிகள் கருத்தறியும் வழியாக மட்டுமே இருக்கிறது. மேலும், கட்டுப்பாடு நெறிமுறைகளை நிறைவேற்றுவதே இந்த வசதிக்கான காரணமாகவும் இருக்கலாம்.
மாறாக, புனித பசுவாக கருதப்படும் கூகுளின் தேடல் முடிவுகளை பயனாளிகள் கேள்வி கேட்க வழியில்லை. இந்த ஒற்றை அம்சத்தில் கூகுள் சிறந்த தேடியந்திரம் என்பது அடிப்பட்டு போகிறது. இதன் பொருள் கூகுள் தேடியந்திரத்தில் ஜனநாயக தன்மை இல்லை என்பதாகும். இதற்கு பதில் கருத்தாக, வேறு எந்த தேடியந்திரம் ஜனநாயக தன்மை கொண்டிருக்கிறது என்பது உங்கள் கேள்வியாக இருந்தால், தனியுரிமைக்கு முன்னுரிமை அளிக்கும் பிரேவ் பிரவுசரின் தேடியந்திரத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
பிரேவ் பிரவுசர், தேடியந்திரம் கொண்டிருப்பதோடு, தேடியந்திர பயனாளிகள் கருத்து பரிமாற்றம் செய்து கொள்வதற்கான சமூக வசதியும் கொண்டுள்ளது. இந்த பிரேவ் கம்யூனிட்டி பக்கத்தில் தான், பயனாளி ஒருவர் குறிப்பிட்ட தேடலுக்கு பிரேவ் தேடியந்திரம் முன்வைக்கும் தேடல் முடிவுகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.- https://community.brave.com/t/two-book-pirating-sites-come-up-first-in-search-for-a-book/406913
இபுக் தொடர்பான தேடலுக்கு, முதல் இரண்டு முடிவுகள் திருட்டு மின்னூல்களை அடையாளம் காட்டும் தளங்களாக இருப்பது ஏன் என அந்த பயனாளி கேள்வி எழுப்பி, இதை நீக்க வழியிருக்கிறதா என்றும் கேட்டிருக்கிறார்.
கூகுள் தேடல் முடிவு தொடர்பாக இத்தகைய கேள்விகள் கேட்க முடியுமா? யோசியுங்கள்!
–