இணைய தேடலுக்கு கூகுளை கண்ணை மூடிக்கொண்டு நம்பக்கூடாது என்பது என் கோட்பாடு. அதாவது, கூகுள் முன்வைக்கும் தேடல் முடிவுகளை சீர்தூக்கி பார்த்து, அலசி ஆராய்ந்து, வடிகட்டாமல் ஏற்றுக்கொண்டால் நீங்கள் ஏமாந்து போவீர்கள் என சுட்டுக்காட்டும் தகவல் கல்வியறிவின் அடிப்படையில் இந்த கோட்பாடு அமைகிறது.
இதே அடிப்படையில் இணைய தேடலுக்கு சாட்ஜிபிடியையும் நம்பக்கூடாது என கருதுகிறேன். தேடலில் சாட்ஜிபிடியைவிட மேம்பட்டதாக கருதப்படும் கூகுளின் சமகால போட்டியாளராக வர்ணிக்கப்படும் ’பிரப்ளக்சிட்டி.ஏஐ’ சேவையை கூட அப்படியே நம்பிவிடக்கூடாது.
ஏன் என்று பார்க்கலாம்.
வைரோடாக்.காம் ( https://wirotalk.com/?ref=producthunt) என்றொரு புதிய சேவை அறிமுகம் ஆகியிருக்கிறது. இந்த சேவை இன்னமும் பிரபலமாகவில்லை என்பதால், கூகுளில் இதை நீங்கள் கண்டறிவதற்கில்லை. இந்த சேவை வைரலாகி புகழ் பெறுமா? வெற்றி பெறுமா? என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால், முதல் பார்வைக்கு இந்த சேவை சுவாரஸ்யமாக இருக்கிறது. இணையம் எனும் வலைப்பின்னலின் ஆற்றலை பிரதிபலிப்பதாகவும் இருக்கிறது.
மெசேஜிங் அல்லது உரையாடல் வகை சேவைகளின் கீழ் வரும் வைரோடாக் என்ன செய்கிறது என்றால், அறிமுகம் இல்லாதவர்களை பேச வைக்கிறது. புதியவர்கள் இருவரும், பரஸ்பரம் நலம் விசாரித்து உரையாடலாம். பிரதானமாக இந்த உரையாடல் மற்றவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அமையே வேண்டும் என வைரோடாக் கருதுகிறது.
வாழ்க்கையில் எல்லோருக்கும் கடினமான தருணங்கள் உண்டு. இது போன்ற சோதனையான தருணங்களில் யாருடனாவது பேசிக்கொண்டிருந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கத்தோன்றும் அல்லவா? அதற்கான வாய்ப்பை தான் வைரோடாக் ஏற்படுத்தி தருகிறது. யாருடனாவது பேச விரும்பும் அறிமுகம் இல்லாதவர்களை இணைக்கும் மேடையாக இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
வைரோ என்றால் கொரிய மொழியில், ஆறுதல் என்று அர்த்தம் என குறிப்பிடும் இந்த தளம் அத்தகைய ஆறுதலை மற்றவர்களுக்கு அளிக்கவும் மற்றவர்களிடம் இருந்து பெறவும் வழி செய்கிறது.
நண்பர்களோடு உரையாட எண்ணற்ற சேவைகள் இருந்தாலும், மனதில் உள்ளதை கொட்டித்தீர்க்க அறிமுகம் இல்லாதவர்களுடன் உரையாடும் வாய்ப்பை அளிப்பது வைரோடாக்கின் நோக்கமாக இருக்கிறது. இணையம் எனும் வலைப்பின்னல் இதை சாத்தியமாக்குகிறது.
அறிமுகம் இல்லாதவர்களோடு அனாமதேயமாக பேசினால் ஆறுதலாக இருக்கும் என்பதெல்லாம் சரி தான், ஆனால் எல்லோரும் இந்த நோக்கத்தை புரிந்து கொள்வார்களா? யாரேனும் வில்லங்கமாக நடந்து கொண்டால் என்னாவது ? போன்ற கேள்விகளை எல்லாம் மீறி இந்த சேவையை நல்லெண்ண அடிப்படையில் அணுக வேண்டும்.
நிற்க, இணையத்தில் தொடர்ந்து புழங்குபவர்களுக்கு, அனமாதேய உரையாடல் சேவை என்றதும், பல ஆண்டுகளுக்கு முன் அறிமுகமாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி பிரபலமான சாட்ரவுளட் ( ) சேவை நினைவுக்கு வரலாம். சாட்ரவுளட் சேவை, இணையம் மூலம் அறிமுகம் இல்லாதவர்களுடன் வெப்கேம் வழியே உரையாட வழி செய்தது. இந்த தளத்தில் நுழைந்தால் அப்போது இணையத்தில் இருக்கும் யாரோ ஒருவருடன் வெப்கேமில் உரையாடலாம்.
யாரோ ஒருவருடன் உரையாடலாம் என்பது புதுமையாக இருந்தாலும் அந்த யாரோ ஒருவர் உரையாடலில் என்ன செய்வார் என்று தெரியாதது இந்த சேவையை சர்ச்சைக்குறியதாக்கியது.
இதே போல அறிமுகமான ஒமேக்லே சேவை இன்னும் பெரிதாக சர்ச்சையில் சிக்கி கண்டனத்திற்கும் உள்ளானது.
ஆக, சாட்ரவுளட் தளத்தை குறிப்பிடாமல் அதனுடன் ஒப்பிடாமல், வைரோடாக் போன்ற சேவைகளை அறிமுகம் செய்வதற்கில்லை. ஆனால், இணையத்தில் இதுவரை, வைரோடாக்கை யாரும் சாட்ரவுளட்டுடன் ஒப்பிடவில்லை.
இதை இணைய மறதி என்றும் கருதலாம். அல்லது இன்னமும் விரிவான அறிமுகங்கள் நிகழவில்லை என்றும் கருதலாம்.
எல்லாம் சரி, இப்போது விஷயத்திற்கு வருவோம். வைரோடாக் போன்ற தளங்களை சாட்ஜிபிடி போன்ற ஏஐ சேவைகள் மூலம் எந்த அளவு சரியாக புரிந்து கொள்ள முடியும்? என்பதே கேள்வி.
வைரோடாக்குடன் ஒப்பிடக்கூடிய சாட்ரவுளட் தளத்தை ஏஐ சேவைகள் குறிப்பிடுகின்றனவா என்று பார்க்கா, பிரப்ளக்சிட்டி தளத்தில், வைரோடாக் போல வேறு தளங்கள் இருக்கிறதா? என கேட்டால், கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில், வைரோடாக் தளம் பற்றி தகவல்கள் இல்லை, ஆனால் விவாத உரையாடல் தளங்களும், ஜோஸிய தளங்களும் இதே போல இருக்கின்றன என பதில் அளிக்கிறது.
சாட்ரவுளட் பற்றிய குறிப்பி இல்லை என்பதோடு, வைரோடாக்கை ஜோஸிய தளங்களுடன் தவறாக ஒப்பிடுகிறது. உண்மையில் இது கூகுளின் பிழை. பிரப்ளக்சிட்டி ஏஐ சேவை என்றாலும், பெரும்பாலும் கூகுள் தேடல் முடிவுகளை திரட்டி தொகுத்தளிப்பதாக கருதப்படுகிறது. கூகுளில் வைரோடாக் என தேடினால் அது ஜோஸிய தளங்களையே முன்வைக்கிறது.
இதே கேள்வியை பிங் மூலம் சாட்ஜிபிடி சார்ந்த கோபைலட்டிடம் கேட்டால், நீங்கள் மொழி பரிமாற்ற சேவைகளை எதிர்பார்த்தால், ஹலோடாக் மற்றும் சில மாற்று சேவைகள் இருக்கின்றன என்கிறது. ஆனால் சாட்ரவுளட் பற்றிய குறிப்பு இல்லை.
இதில் கவனிக்க வேண்டும் அம்சம், இந்த இரண்டு சேவைகளையும் ஒப்பிட்டு இணையத்தில் எழுதப்பட்டிருந்தால், சாட்ஜிபிடி உள்ளிட்ட சேவைகள் அவற்றை தொகுத்தளிக்கும். ஆனால் மனிதர்கள் எழுதிய பதிவுகள் இல்லாத போது, ஏஐ சேவைகளால் தானாக எதையும் கண்டறிந்து அளிக்க முடியாது. எனவே தான், சாட்ஜிபிடி போன்ற சேவைகளை நான் நாடுவதும் இல்லை, நம்புவதும் இல்லை.
இன்னொரு முக்கியமான விஷயம், இதே தேடலை பிரப்ளக்சிட்டி தளத்தில் வேறுவிதமாக மேற்கொண்ட போது ஒரளவு சரியான பதில் அளித்தது. வைரோடாக் மற்றும் சாட்ரவுளட் சேவைகளின் பொது தன்மை என்ன என கேட்டால், இரண்டும் அறிமுகம் இல்லாதவர்களோடு அனாமதேயமாக உரையாட வழி செய்யும் சேவை என தெரிவிக்கிறது.
ஆக சாட்ரவுளட் பற்றி நீங்கள் அறிந்திருந்தால் அதை சரியாக குறிப்பிட்டு கேள்வி கேட்டால் ஓரளவு சரியான பதில் கிடைக்கலாம்.
ஏஐ சேவைகள் செயல்பாடு இப்படி இருக்க இவற்றை அப்படியே நம்பிவது பிழையாகவே அமையும்.
–
தொடர்புடைய முந்தைய பதிவு: நான் ஏன் ஏஐ சேவைகளை பயன்படுத்துவதில்லை!