நான் ஏன் ஏஐ சேவைகளை பயன்படுத்துவதில்லை!

எல்லோரும் ஏஐ சாதனங்களுக்கு மாறிக்கொண்டிருக்கின்றனர். என்னளவில், ஏஐ எனப்படும் செயற்கை அறிவு அல்லது செய்யறிவு தொடர்பாக அறிந்து கொள்வதிலும், அறிந்தவற்றை எழுதுவதிலும் உள்ள ஆர்வம், ஏஐ சேவைகளை பயன்படுத்துவதில் இல்லை.

அதிலும் குறிப்பாக எழுத்துப்பணிகக்காக ஏஐ சேவையை பயன்படுத்தும் விருப்பம் கிடையாது. எழுதுவது தொடர்பான இணைய ஆய்வுக்கும் ஏஐ நுட்பத்தை நாடுவதில்லை. இதுவரை அதற்கான தேவையை உணர்ந்ததில்லை.

அதோடு, எனக்கான உள்ளடக்கம் தொடர்பான தேடலில் ஏஐ நுட்பத்தைவிட எனது தேடலே மேம்பட்டது எனும் நம்பிக்கையும் இருக்கிறது. இது செறுக்கு என கருதப்பட வாய்ப்பிருக்கிறது.

உள்ளடக்கம் சார்ந்த ஆய்விற்கு ஏஐ தேடலை விட, சுய ஆய்வே மேம்பட்டது என நான் கருதுவதற்கு ஒரு சுவாரஸ்யமான உதாரணத்தை பார்க்கலாம்.

தொழில்நுட்பம், இணையம், மென்பொருள், செய்யறிவு, புதிய ஊடகம் உள்ளிட்ட மற்றும் இவற்றுடன் தொடர்புடைய விஷயங்களில் தான் கவனம் செலுத்தி வருகிறேன். இவை தொடர்பான எண்ணற்ற இழைகளை பின் தொடர்ந்து வருகிறேன். தேவைக்கேற்ப இந்த இழைகளில் ஏதேனும் ஒன்று குறித்த மேலதிக தகவல்களை தேடுவேன். அந்த தேடல் வேறு சுவாரஸ்ய வழிகளில் அழைத்துச்செல்வதும் உண்டு.

நிற்க, இத்தகைய இழைகளில் டிஜிட்டல் நுட்பம் மற்றும் செல்பேசி சார்ந்த தகவல்களை அடிக்கடி தேடுவேன். ஏற்கனவே தேடிய வரலாறு, புதிய தேடலுக்கு அடித்தளமாக அமையும். அந்த வகையில், செய்யறிவு தொடர்பான அலசலில், முதல் டிஜிட்டல் இமேஜிங் தொடர்பாக ஏற்கனவே அறிந்த தகவலை தேடிய போது, ரஸல் கிர்ஷ் (Russell Kirsch)  என்பவர், 1957 ல், முதல் டிஜிட்டல் உருவாக்கியதை மீண்டும் கண்டறிய முடிந்தது.

கிர்ஷ் உருவாக்கிய முதல் டிஜிட்டல் உருவம் அழகாக இருக்கும். கிரிஷ் தனது மூன்று வயது மகனின் புகைப்படத்தை கொண்டு இந்த உருவத்தை உருவாக்கியிருப்பார். டிஜிட்டல் புகைப்பட நுட்பத்தில் கிர்ஷ் முயற்சி ஒரு மைல்கல்.

இதே போலவே, காமிராபோன் நுட்பத்திலும் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது. வீடியோ போன் சாதனங்கள் சோதனை முறையில் அமலுக்கு வந்ததை மீறி, ஆரம்ப கால செல்பேசிகளில் காமிராவை இணைக்கலாம் எனும் எண்ணம் பரவலாக உண்டாகவில்லை. தகவல் தொடர்பு சாதனமாக செல்பேசியை மேம்படுத்துவதில் இருந்த சவால்களை எதிர்கொண்டிருந்த நிலையில், காமிரா போன்ற துணை வசதியை பலரும் நினைத்துப்பார்க்கவில்லை.

நான்கைந்து காமிரார்கள் கொண்ட ஸ்மார்ட்போன் யுகத்தில், இத்தகைய நிலையை கற்பனை செய்து பார்ப்பதே கடினம் தான். ஆனால், செல்பேசி வளர்ந்து கொண்டிருந்த காலத்தில், இத்தகைய வரம்புகள் பெரும் தடைகளாக இருந்தன.

இதனிடையே, பிலிப் கான் எனும் பிரெஞ்சு பொறியாளர், இணையத்திற்கான புகைப்பட பகிர்வு சேவை ஒன்றை உருவாக்க முயன்று கொண்டிருர்ந்தார். இந்நிலையில் அவரது மனைவி குழந்தையை பெற்றெடுத்த போது தந்தைமையால் நெகிழ்ச்சி அடைந்து, மருத்துவமனையில் இருந்து குழந்தையை படமெடுத்து அந்த படத்தை டிஜிட்டல் காமிராவில் இருந்து கையில் இருந்த செல்பேசியுடன் இணைத்து வீட்டில் இருந்த அமைப்பின் வாயிலாக இணையம் மூலம் நண்பர்களுடன் உடனடியாக பகிர்ந்து கொண்டார்.

இது 1997 ல் நிகழ்ந்தது. காமிரா போனின் சாத்தியத்தையும், தேவையையும் உணர்த்திய இந்த நிகழ்வே காமிரா போனுக்கான அடிப்படையாகவும் அமைந்தது. பிலிப் கான் பற்றி இன்னும் நிறைய எழுதலாம்.

வெவ்வேறு இழைகளில், வெவ்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்த ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத இந்த இரண்டு நிகழ்வுகளிலும், ஒரு அழகான ஒற்றுமையை காணலாம். இரண்டுமே டிஜிட்டல் புகைப்படம் சார்ந்த முன்னோடி முயற்சிகள் என்பது மட்டும் அல்ல, இரண்டிலும் தொடர்புடைய கண்டுபிடிப்பாளர்களுமே தங்கள் குழந்தை படத்தை ஊக்கமாக கொண்டு செயல்பட்டுள்ளனர்.

ஒரு தொழில்நுட்ப எழுத்தாளனாக இந்த ஒப்புமை எனக்கு ஈர்ப்புடையதாக அமைகிறது. ஆனால், ஏஐ சார்ந்த தேடலில், இந்த ஒப்புமையை இயந்திர அறிவு கண்டறிய முடியுமா என்பது சந்தேகமே. சாட்ஜிபிடியும் அதன் சகாக்களும் கோட்டைவிடும் என்றே கருதுகிறேன். ஏன், முதல் டிஜிட்டல் இமேஜ் மற்றும் காமிராபோன் கண்டுபிடிப்பு என தேடினால் கூகுள் தேடல் முடிவுகளும் இந்த தொடர்பை உணர்த்தவில்லை. இந்த தேடலில், குழந்தை எனும் சொல்லை சேர்த்துக்கொண்ட போதும் கூகுள் தேடல் முடிவுகள் பயனளிக்கவில்லை.

எனவே தான், ஏஐ நுட்பத்தை நாடாமல் என சொந்த ஆய்வையே நாடுகிறேன்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.