மூன்றாம் தரப்பினர் துணை சேவைகளால் வளர்ந்த நிறுவனம் டிவிட்டர் என்று சொல்லப்படுவதை இப்போது புரிந்து கொள்வது மிகவும் கடினம். அதிலும் டிவிட்டர் நிறுவனம் எலான் மஸ்கின் கைகளுக்கு மாறிய பின் அதன் பெயரே எக்ஸ் என மாறிவிட்ட நிலையில், டிவிட்டரின் பழைய வரலாற்று சுவடுகளின் முக்கியத்துவத்தை உணர்வது இன்னும் கடினம்.
எனினும், டிவிட்டர் மீது நம்பிக்கை வைத்து பிறர் உருவாக்கிய துணை சேவைகள் இல்லாமல் டிவிட்டர் வளர்ச்சி பெற்றிருக்க முடியாது. இதற்கு பலரும் மறந்துவிட்ட டிவிட்பிக் (Twitpic) சேவை சரியான உதாரணம்.
2006 ல் டிவிட்டர் அறிமுகமாகி வளர்ந்து வந்த நிலையில், 2008 ல் டிவிட்பிக் அறிமுகமானது. டிவிட்டரில் குறும்பதிவுகளை பகிர்வதில் இருந்த பெருங்குறைக்கு தீர்வை டிவிட்பிக் வழங்கியது.140 எழுத்துக்கள் எனும் வரம்பு இல்லை அது. மாறாக, டிவிட்டரில் குறும்பதிவுகளுடன் புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள முடியாது எனும் வரம்பிற்கு பதிலாக டிவிட்பிக் அமைந்தது.
ஆம், டிவிட்டர் பயனாளிகள் எளிதாக புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள டிவிட்பிக் வழி செய்தது. டிவிட்டர் பயனாளிகள் பலரும் இத்தகைய வசதியை எதிர்பார்த்திருந்ததால், டிவிட்டர் சார்ந்த துணை சேவைகளில் டிவிட்பிக் வேகமாக வளர்ச்சி அடைந்தது.
இப்போது நம்ப முடியாமல் இருந்தாலும், துவக்க காலத்தில் டிவிட்டர் வரி வடிவ சேவையாகவே இருந்தது. அதன் டைம்லைனில் புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளும் வசதி இருக்கவில்லை. டிவிட்டர் என்ன வகையான சேவை என்பதில் அடையாள சிக்கல் இருந்ததால் அதன் ஆதார அம்சங்கள் தவிர அதில் தேவைப்படக்கூடிய வசதிகள் குறித்து நிறுவனம் அறியாமலே இருந்தது. பயனர்களும், துணை சேவைகளை உருவாக்கியவர்களுமே இதை உணர்த்தினர்.
இப்படி தான், நோவா எவரெட்டே எனும் அமெரிக்க மென்பொருளாளர் டிவிட்டரில் புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளும் வசதி தேவை என்பதை உணர்ந்து டிவிட்பிக்கை உருவாக்கினார். அதற்கு முன் வரை, டிவிட்டரில் புகைப்படம் பகிர வேண்டும் எனில், புகைப்படத்தை வேறு எங்கேனும் வெளியிட்டு டிவிட்டரில் அதன் இணைப்பை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த செயல்முறையை டிவிட்பிக் எளிதாக்கியது.
டிவிட்பிக்கில் உறுப்பினரானால் அதன் இடைமுகத்தில் இருந்து டிவிட்டரில் புகைப்படத்தை பகிர்ந்து கொள்வது எளிதானது. டிவிட்பிக்கில் படத்தை பார்க்கலாம். அதே போல, படத்திற்கான பின்னூட்டத்தில் டிவிட்டர் பயனாளி பெயரை குறிப்பிட்டால் டிவிட்டரில் அதை பார்க்கும் வசதியும் இருந்தது.
தொடர்புடைய பதிவு: உங்களுக்கான ’டிவிட்டர்’ நாளிதழ்
நோவா வேறு ஒரு நிறுவனம் ஒன்றில் பணியாற்றியபடி வார இறுதிகளில் இரவு பகல் பாராமல் உழைத்து இந்த சேவையை உருவாக்கியிருந்தார். ஏற்கனவே டிக் சேவையை அடிப்படையாக கொண்டு உருவாக்கியிருந்த எக்கோபிக் (Twitpic) எனும் சேவையின் நிரலை டிவிட்பிக்காக மாற்றினார்.
டிவிட்டரில் இல்லாத வசதியை அளித்த டிவிட்பிக், ஆயிரக்கணக்கில் பயனாளிகள் ஈர்த்து வந்த நிலையில், 2009 ம் ஆண்டில், டிவிட்டர் வரலாற்றில் மைல்கல்லாக அமைந்த அந்த சம்பவம் நிகழ்ந்தது. அமெரிக்காவில், ஹட்சன் ஆற்றில் விபத்துக்குள்ளான விமானம் அவசரமாக தரையிறங்கியது. ஆற்றில் தள்ளாடிய விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் படகு மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். ஆற்றில் மீட்பு பணி நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையிலேயே அதில் சென்றிருந்த ஜேனிஸ் கிரம் ( ) என்பவர் தனது ஐபோனில் அந்த காட்சியை கிளிக் செய்து டிவிட்பிக் மூலம் டிவிட்டரில் பகிர்ந்து கொண்டார்.
விமானம் விபத்துக்குள்ளான செய்தி வெளியாகி கொண்டிருந்த போதே, மீட்பு பணி காட்சி டிவிட்டரில் பகிரப்பட்டது ஊடக உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நிகழ் நேர தகவல் என்பதன் உண்மையான அர்த்தத்தை இது புகைப்படமாக உணர்த்தியது. அதோடு, உடனடி செய்திகளை பகிர்வதற்கு டிவிட்டர் எத்தனை பொருத்தமான வடிவம் என்பதையும் புரிய வைத்தது. டிவிட்டர் தேடிக்கொண்டிருந்த அடையாளங்களில் ஒன்றாகவும் இது அமைந்தது.
இந்த வரலாற்று நிகழ்வுக்கு பிறகு டிவிட்டர் வேகமாக வளர்ந்தது. டிவிட்பிக்கும் வளர்ந்தது. ஆனால், அடுத்த சில ஆண்டுகளில் டிவிட்டரே தன் பங்கிற்கு புகைப்பட பகிர்வு வசதியை அறிமுகம் செய்யவே டிவிட்பிக் இப்போது அடையாள சிக்கலுக்கு உள்ளானது.
பெரும்பாலும் டிவிட்டரை சார்ந்தே இயங்கிய சூழலில், டிவிட்டரில் புகைப்படத்தை பகிர்வதற்கு என தனி சேவை தேவையா எனும் கேள்விக்கு மத்தியில், டிவிட்பிக், புகைப்பட பகிர்வு சார்ந்த முழு சேவையாக மாற முயற்சித்தது. எனினும், இந்த பிரிவில் ஏற்கனவே வெற்றி பெற்றிருந்த இன்ஸ்டாகிராமை மிஞ்சி அதனால் கவனத்தை ஈர்க்க முடியவில்லை.
இதனிடயே 2014 ம் ஆண்டில், டிவிட்டர் தனது பெயரை பயன்படுத்தக்கூடாது என டிவிட்பிக்கிற்கு எச்சரிக்கை விடுத்தது. மீறி பயன்படுத்தினால் டிவிட்டர் சேவையை அணுகும் ஏபிஐ தொழில்நுட்ப வசதி நீக்கப்படும் என மிரட்டியது. டிவிட்டரை எதிர்ப்பதால் எந்த பயனும் இல்லை என நோவா ஒரு கட்டத்தில் டிவிட்டரிடமே நிறுவனத்தை நிற்க ஒப்புக்கொண்டு விலகினார்.
அடுத்து வந்த ஆண்டுகளில் டிவிட்பிக் மறக்கப்பட்டு விட்டது. ஆனால் டிவிட்டரின் வெற்றியில் அதற்கும் பங்கு இருக்கிறது.
டிவிட்டர் போன்ற பெரிதாக வளர்ந்த தொழில்நுட்ப நிறுவனங்கள், அதன் ஆரம்ப வளர்ச்சிக்கு உதவிய மூன்றாம் தரப்பு சேவைகளை இவ்விதம் நடத்துவது சரியா எனும் கேள்வி ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் டிவிட்பிக்கில் பகிரப்பட்ட கோடிக்கணக்கான புகைப்படங்களின் நிலை என்ன எனும் கேள்வியும் முக்கியத்துவம் பெறுகிறது.
கடைசி நேர உடன்பாடாக, டிவிட்பிக் படங்களை டிவிட்டர் ஆவணப்படுத்த பொறுப்பேற்றுக்கொள்வதாக செய்தி வெளியானாலும் இந்த பழைய படங்களின் கதி என்ன என்று தெரியவில்லை. முக்கியமாக பயனாளிகளுக்கு அதன் மீதான உரிமையும், அணுகலும் என்ன என்று தெரியவில்லை.
–