கண்ணுக்குத்தெரியாமல் மறையும் இணைய வரலாறு!

ஜேனிஸ் கிரம்ஸ் (JĀNIS KRŪMS ) இணையதளத்திற்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. கிரம்ஸிற்கு சொந்த இணையதளம் இருந்தது என்பதையே கூட பலரும் உணரும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. ஏனெனில், ஜேனிஸ் கிரம்ஸ் தொடர்பான இணைய தேடலுக்கான முடிவுகளின் பட்டியலில் இருந்து கூகுள் அவரது தளத்தை நீக்கிவிட்டது.

எனவே ஜேனிஸ் கிரம்ஸின் இணையதளம் வரலாற்றின் இருண்ட பக்கங்களுக்கு சென்று காணாமல் போய்விட்டது. இது பெரும் இழப்பு தான். இதை பெரும்பாலானோர் உணராமல் இருப்பது தான் இன்னும் பெரிய இழப்பு.

யாரிந்த கிரம்ஸ், அவரது இணையதளம் இருந்தால் என்ன இல்லாமல் போனால் என்ன என நினைக்க வேண்டாம். கிரம்ஸின் இணையதளம் வெறும் சொந்த இணையதளம் மட்டும் அல்ல, அது ஒரு பொது ஆர்வத்திலான இணையதளம். அதாவது இணைய வரலாற்று நோக்கில் பாதுகாக்கப்பட வேண்டிய இணையதளம்.

கிரம்ஸின் இணையதளம் ஏன் முக்கியமானது என்றால், இணைய வரலாற்றில் அவர் முக்கியமானவராக இருப்பது தான். இத்தனைக்கும் கிரம்ஸ் இணையத்தில் பெரியதாக எதையும் சாதித்துவிடவில்லை. ஆனால், சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருந்து, சரியான செயலை செய்ததால் அவர் இணைய முன்னோடிகளில் ஒருவராக கருதப்படும் நிலையை பெற்றிருக்கிறார்.

டிவிட்டர் காலவரிசை

அதிலும் குறிப்பாக டிவிட்டர் சேவையின் வரலாற்றையும், எழுச்சியையும் பேசும் போது, அதன் காலவரிசையில் முக்கிய மைல்கல் சம்பங்களில் ஒன்றுடன் கிரம்ஸ் தொடர்பு கொண்டுள்ளார். அதைவிட முக்கியமாக, டிவிட்டர் வெற்று குறும்பதிவு சேவை அல்ல, உடனடி செய்திகளை பகிர்வதற்கான மிகச்சிறந்த இணைய மேடைகளில் ஒன்று என்பதை உணர்த்திய சம்பவங்களில் ஒன்றாகவும் இது திகழ்கிறது.

2009 ம் ஆண்டு அமெரிக்காவின் ஹட்சன் நதியில் நடந்த விமான விபத்திற்கு பிந்தைய மீட்பு காட்சியை நேரடியாகவும், உடனடியாகவும் டிவிட்டரில் புகைப்படத்துடன் பகிர்ந்து கொண்ட சம்பவம் தான் அது.

ஹட்சன் நதியில் நிகழ்ந்த அதிசயம் என வர்ணிக்கப்படும் இந்த சம்பவத்தின் போது, யுஎஸ் ஏர்வேஸ் எனும் அமெரிக்க விமான சேவை நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ320 விமானம், நியூயார்க் விமான நிலையம் ஒன்றில் இருந்து புறப்பட்ட உடன் பறவை கூட்டத்துடன் மோதி, நிலை தடுமாறியது. விமானத்தை தொடர்ந்து இயக்க முடியாமல் தரையிறக்க வேண்டிய நெருக்கடியில், விமானிகள் திறம்பட செயல்பட்டு, விமானத்தை அருகாமையில் இருந்த ஹட்சன் நதியில் இறக்கினர். பின்னர் படகு மூலம்  விமானத்தின் 155 பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

ஆற்றில் இருந்து ..

ஒரு ஆக்‌ஷன் திரைப்படத்தின் திரில்லர் காட்சியை மிஞ்சும் இந்த நிஜ வாழ்க்கை சம்பவம் அப்போது செய்தி உலகில் ஏற்படுத்தியிருக்க கூடிய பரபரப்பை எளிதாக புரிந்து கொள்ளலாம். பயணிகள் மீட்கப்பட்ட செய்தி, மீட்பு காட்சிகள் ஊடகங்களால் முழுவீச்சில் செய்தியாக்கப்பட்ட நிலையில், ஜேனிஸ் கிரம்ஸ் எடுத்த ஒரு புகைப்படம் பேசுபொருளானது.

ஹட்சன் நதியில் தரையிறங்கிய விமானத்தில் சிக்கிய பயணிகளை மீட்க விரைந்து சென்ற படகில் பயணியாக இருந்த 23 வயது இளைஞரான கிரம்ஸ், தனது ஐபோனில், மீட்பு காட்சியை படம் பிடித்து, டிவிட்டரில் அந்த புகைப்படத்தை பகிர்ந்து கொண்டார்.

“ஹட்சனில் ஒரு விமானம் நிற்கிறது. பயணிகளை மீட்கச்செல்லும் படகில் நானும் இருக்கிறேன். நம்ப முடியவில்லை” எனும் குறும்பதிவுடன் இந்த படத்தை அவர் பகிர்ந்து கொண்டார்.

டிவிட்டரில் அப்போது அவருக்கு 170 பின் தொடர்பாளர்களே இருந்தனர். எனினும், விமான விபத்து மீட்பு காட்சியை முதலில் வெளிப்படுத்திய படமாக இது அமைந்திருந்தால், இணையத்தில் உடனடியாக பரவி, செய்தி நிறுவனங்கள், ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது.

சமூக ஊடக மைல்கல்

அடுத்த சில மணி நேரங்களுக்கு விமானத்தை புத்திசாலித்தனமாக ஆற்றில் இறக்கிய விமானிகள் பற்றியும் பயணிகள் உயிருடன் மீட்கப்பட்டது பற்றியும் பரபரப்பாக பேசப்பட்ட அளவுக்கு, மீட்பு காட்சியை முதலில் படம் எடுத்து, நேரடியாக டிவிட்டரில் பகிர்ந்த கிரம்சும் பெரிதாக பேசப்பட்டார்.

நிற்க டிவிட்டர் எனும் சேவையும் அதன் பயன்பாடும் அத்தனை பெரிதாக அறியப்படாத காலகட்டம் அது என்பதை மனதில் கொள்ள வேண்டும். எனவே, யாரோ ஒருவர் ஊடகங்களை எல்லாம் முந்திக்கொண்டு, விபத்து மீட்பு காட்சிகளை படம் பிடித்ததும், டிவிட்டரில் அதை பகிர்ந்து கொண்டதும், வியப்பை ஏற்படுத்தியது. எனவே, ஊடகங்கள் கிரம்ஸை பேட்டி காண்பதிலும் கவனம் செலுத்தி அவரது பங்களிப்பையும் செய்தியாக்கின.

சம்பவ இடத்தில் இருந்தே நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ள வழி செய்யும் டிவிட்டரின் தன்மையையும் இந்த சம்பவம் உணர்த்தி, இந்த குறும்பதிவு சேவைக்கு உடனடி செய்திகளை பகிர்வதற்கு ஏற்ற வாகனமாக டிவிட்டரை கருத வைத்தது. டிவிட்டர் மட்டும் அல்ல, அது பிரதிநித்துவப்படுத்தும் மக்கள் ஊடகமான சமூக ஊடகங்களின் ஆற்றலையும் எடுத்துச்சொல்லிய ஆரம்ப கால சம்பவங்களில் ஒன்றாகவும் அமைந்தது.

மக்கள் இதழியல்

மேலும், செய்தி அல்லது தகவல்களை திரட்டுக் பணியை தற்செயலாக அல்லது திட்டமிடாமல் குடிமக்களில் ஒருவரே மேற்கொள்ள சமூக ஊடகங்கள் வழி செய்திருப்பதையும் உணர்த்தி, குடிமக்கள் இதழியலுக்கான மகத்தான உதாரணங்களில் ஒன்றாகவும் அமைந்தது.

இந்த காரணங்களினால் தான் ஜேனிஸ் கிரம்ஸ் இணைய வரலாற்றில் முக்கிய இடம்பெறுகிறார். அவரது ஹட்சன் குறும்பதிவு, வரலாற்று நிகழ்வாக பதிவாகியிருக்கிறது.

ஆக, இணைய வரலாற்றை திரும்பி பார்க்கும் போது, குறிப்பாக சமூக ஊடகங்களின் எழுச்சியை ஆய்வு செய்யும் போது ஜேனிஸ் கிரம்சை கவனத்தில் கொண்டாக வேண்டும்.

இந்த இடத்தில் தான் கிரமிசின் இணையதளம் வருகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு, டிவிட்டரின் சாதனைகள் பற்றி பேசப்படும் போதெல்லாம் அல்லது ஹட்சன் சம்பவத்தில் ஐந்தாம் ஆண்டு நினைவு போன்றவற்றில் கிரம்ஸ் மீண்டும் மீண்டும் பேசப்பட்டு வந்தார்.

மேலும், ஹட்சன் விபத்து மீட்புக்காட்சியை படம் பிடித்ததை தனக்கான அடையாளங்களில் ஒன்றாகவும் கருதி வந்தார். அவரது இணையதளம் (https://www.janiskrums.com ) இதை உணர்த்தும் வகையில் அமைந்திருந்தது.

மறையும் வரலாறு

மிக எளிமையான வடிவமைப்பு கொண்ட அந்த தளத்தில் அதிக உள்ளடக்கம் இருந்ததில்லை. ஜேனிஸ் கிரம்ஸ் படம் மற்றும் பெயருடன், அவரைப்பற்றிய மூன்று முக்கிய குறிப்புகள் இடம்பெற்றிருக்கும். தளத்தின் மேல் பகுதியில், இல்லம், என்னைப்பற்றி, தொடர்புக்கு ஆகிய பகுதிகளுடன் ஹட்சன் எனும் தலைப்பும் இடம்பெற்றிருக்கும். அதை கிளிக் செய்தால் வரலாற்று சிறப்பு மிக்க டிவிட்டர் புகைப்பட பகிர்வு குறும்பதிவை காணலாம்.

மிக எளிமையான தளம் என்பதை மீறி, டிவிட்டர் வரலாற்றில் மைல்கல் சம்பவத்தின் நாயகர்களில் ஒருவராக திகழ்ந்தவர், அந்த சம்பவத்தை தனது முக்கிய அடையாளங்களில் ஒன்றாக கருதியதையும் இந்த தளம் உணர்த்தியது.

உடனடி செய்தி பகிர்வில் டிவிட்டரின் பங்களிப்பு வரலாற்றை அறிய விரும்பும் போது, ஜேனிஸ் கிரம்ஸை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் இந்த இணையதளமும் முக்கியமாகவே அமைந்தது.

ஆனால், அண்மை தேடல்களில் இந்த தளத்தை கண்டறிய முடியவில்லை. கூகுளும் இந்த தளத்தை நீக்கிவிட்டதால், அவரது டிவிட்டர் பக்கத்திற்கு சென்று அதில் உள்ள இணைப்பு மூலமே இந்த தளத்தை அணுக முடிகிறது. ஆனாலும் தளத்தின் உள்ளடக்கத்தை காண முடியவில்லை. கிரம்சே கூட இந்த தளத்தை பராமரிக்காமல் விட்டிருக்கலாம்.

ஹட்சன் சம்பவத்தில் இருந்து அவர் வெகு தொலைவு வந்துவிட்டார். இணைய தொழில்முனைவோராகவும், முதலீட்டாளராகவும் அவர் வளர்ந்திருக்கிறார். வரலாற்றையும் எத்தனை நாள் தான் சுமந்து கொண்டிருப்பார்!.

மீட்கும் காப்பகம்

எது எப்படியோ, இப்போது ஜேனிஸ் கிரம்ஸ் பற்றி தேடினால் அவரது இணையதளத்தை காண முடியாது. பதிவின் துவக்கத்தில் குறிப்பிட்டது போல, இந்த சம்பவத்தின் வரலாற்றை அறியாதவர்களுக்கு கிரம்ஸுக்கு இணையதளம் இருந்தது என்பதும் கூட தெரியாது. இணைய வரலாற்றில் இது ஒரு இழப்பு தானே.

இணைய வரலாற்றுடன் தொடர்புடைய ஒரு தளத்தை அப்படியே பராமரித்து வருவது அவசியம் தானே. தகவல் நோக்கிலும், ஆய்வு நோக்கிலும், இதற்கான தேவை இருக்கிறது அல்லவா? எனவே இது போன்ற தளங்களை பொது தளங்களாக கருது பாதுகாக்க வேண்டும். இதன் தேவையை பலரும் உணரவில்லை என்றாலும், இணைய காப்பகம் (https://web.archive.org/ ) உணர்ந்துள்ளது. எனவே தான் இணையதளங்களையும், இணைய பக்கங்களையும் பாதுகாத்து வருகிறது. இதில் ஜேனிஸ் கிரம்ஸ் தளத்தின் பழைய வடிவத்தையும் பார்க்கலாம்: https://web.archive.org/web/20230422205355/https://www.janiskrums.com/#

  •  

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.