இந்த அளவுக்கு மோசமாக ஒரு சாட்பாட்டை யாராலும் உருவாக்க முடியாது என்கிறார் ஜோனாதன் சோமா.
நியூயார்க் நகரம் சார்பாக உருவாக்கப்பட்ட சாட்பாட் (chat.nyc.gov) சேவையை தான் சோமா இவ்வாறு குறிப்பிடுகிறார்.
சாட்ஜிபிடி அலையால் எங்கும் சாட்பாட் என்பதே பேச்சாக இருக்கும் சூழலில், வர்த்தக நிறுவனங்களும், அரசு அமைப்புகளும் சாட்பாட் சார்ந்த சேவைகளை அறிமுகம் செய்வது, புதுமையாகவும், அவசியமாகவும் இருக்கிறது.
இந்த வகையில் தான், நியூயார்க் நகரில் தொழில் துவங்க விரும்புகிறவர்களுக்கு தேவையான தகவல்களையும், வழிகாட்டுதல்களையும் வழங்குவதற்காக மேலே சொன்ன சாட்பாட் உருவாக்கப்பட்டது. நிறுவனம் துவங்க எந்த வகை உரிமம் தேவை?, அபராதங்களை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? என்பது போன்ற கேள்விகளுக்கு எளிய ஆங்கிலத்தில் பதில் செய்யும் வகையில் இந்த சாட்பாட் உருவாக்கப்பட்டதாக நியூயார்க் நகர அரசு தெரிவித்திருந்தது.
அரசு சேவை வழங்கலின் எதிர்கால வடிவம் என நகர மேயர் இதை வர்ணித்ததை மீறி, நடைமுறையில் இந்த சாட்பாட் பயனாளிகள் கேள்விகளுக்கு தப்பும் தவறுமாக பதில் அளித்து சர்ச்சைக்கும், விமர்சனத்திற்கும் இலக்கானது. தேசிய அளவில் இந்த சர்ச்சை பேசுபொருளான போது, நகர மேயர் எரிக் ஆடம்ஸ், சாட்பாட் பிழையான தகவல்களை அளித்தாலும், எதிர்காலத்தில் மேம்படும் என விளக்கம் அளித்தார்.
சர்ச்சைக்கு இலக்கான நியூயார்க் சாட்பாட்டை பலர் வறுத்தெடுத்தனர் என்றாலும், கொலம்பியா பல்கலை இதழியல் பேராசிரியர் ஜோனாதன் சோமா, தெரிவித்திருந்த கருத்துக்கள் முக்கியமானவை. ’இதைவிட மோசமான முறையில் ஒரு சாட்பாட்டை உருவாக்க முடியாது’ எனும் அவரது குறிப்பு இந்த பின்னணியில் தான் வருகிறது என்றாலும், அதை சரியான விதத்தில் புரிந்து கொள்வது அவசியமாகிறது.
ஏனெனில், சோமா, சாட்பாட்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது தொடர்பான குறிப்புகளில் ஒன்றாக இந்த கருத்தை தெரிவிப்பது தான்.
இதழியல் பேராசிரியரான சோமா, ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு நுட்பத்தை செய்தியாளர்கள் எப்படி பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதில் தனி கவனம் செலுத்தி வருகிறார். இது தொடர்பாக அவர் நிகழ்த்திய தொடர் வீடியோ உரை வரிசையில், ஒரு உரையில், சாட்பாட்கள் பற்றி பேசினார். இந்த உரையில் தான், நியூயார்க் நகர சாட்பாட் சர்ச்சையை குறிப்பிட்டு, இதே போன்ற சாட்பாட்டை உருவாக்கி, ஆவணங்கள் சார்ந்த கேள்விகளுக்கு பதில் அளிப்பது எப்படி என விளக்கம் அளித்தார்.
நியூயார்க் சாட்பாட் தவறாக பதில் அளித்த கேள்விகளுக்கு சோமாவின் சாட்பாட் சரியாக பதில் அளித்தது. அவருக்கு மட்டும் இது எப்படி சாத்தியமானது? இதே கேள்வியை தான், ’மார்க் அப்’ (themarkup.org/ ) இணைய செய்திமடல் ஆசிரியர் சோமாவிடம் நடத்திய நேர்காணலில் கேட்டிருந்தார்.
இந்த நேர்காணலில் சோமா, அளித்த பதில்களின் சாரம்சத்தை, சாட்பாட்களை எப்படி சரியாக பயன்படுத்துவது என்பதற்கான வழிகாட்டலாக கொள்ளலாம். அதன் சுருக்கம் வருமாறு:
சாட்பாட்டை உருவாக்கும் போது, நூறு சதவீத நேரத்தில் ஏதாவது தவறு நிகழவே செய்யும். நியூயார்க் நகரம் போல, அதிகார மட்டத்தில் பல அடுக்குகள் இருக்கும் போது, யாரும் எதையும் இருமுறை சோதிக்கப்போவதில்லை. எனவே தவறு நடக்க இருப்பது இயல்பானது தான். எப்போது, எங்கு என்பது மட்டுமே கேள்வி.
ஆனால், திகைக்க வைப்பது என்னவெனில், சட்டப்படி எல்லாம் சரியானது என பயனாளிகளுக்கு வழிகாட்டும் ஒரு சேவை, மோசமான முறையில் செயல்பட்டது தான்.
சாட்பாட்களிடம் உள்ள முக்கிய பிரச்சனை இது. அவை தவறான தகவல்களை அளித்து, அவற்றுக்கு ஆதாரமாக சான்றுகளையும் முன்வைத்து தீர்மானமாக பதில் அளிக்கும். அடிக்குறிப்பாக சிறிய எழுத்துக்களில், இந்த தகவல்களில் பிழையும் இருக்கலாம், சரிபார்த்துக்கொள்ளவும் எனும் எச்சரிக்கை அபத்தமானது.
ஆவணங்களை அடிப்படையாக கொண்டு, அவற்றின் உள்ளடக்கம் சார்ந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் ஒரு சாட்பாட்டை உருவாக்கலாம். ஆனால் ஆவணங்கள் தொகுக்கப்படுவதில் அல்லது ஆவணங்களை அடையாளம் காண்பதில் பிழை ஏற்படலாம். எனவே சாட்பாட் பொருத்தமில்லா ஆவணத்தை அடிப்படையாக கொண்டு தவறான பதில் அளிக்கலாம்.
சாட்பாட்களை உருவாக்கும் போது, பெரும்பாலான நேரங்களில் சரியாக பதில் அளிக்க வைப்பது எளிது, ஆனால் எல்லா நேரங்களிலும் சரியாக பதில் அளிக்க வைப்பது சாத்தியம் இல்லை. ஆனால், இப்படி நியூயார்க் சாட்பாட் ஒரளவு கூட சரியாக பதில் அளிக்கவில்லை. ( இந்த இடத்தில் தான், இந்த அளவு மோசமான சாட்பாட்டை உருவாக்க முடியாது என குறிப்பிடுகிறார்.)
சாட்பாட்களை பயன்படுத்தும் போது, எப்போது வேண்டுமானாலும் தவறு நிகழும் வாய்ப்புள்ளது. ஏஐ நுட்பம் இல்லாததை சொல்லலாம். தவறாக சான்றளிக்கலாம். எனவே தான், சட்ட ஆலோசனை போன்றவற்றுக்கு சாட்பாட்களை பயன்படுத்தக்கூடாது.
ஏதேனும் தவறு நிகழ்ந்தாலும் பரவாயில்லை என்பது போன்ற சூழல்களில் தான் சாட்பாட்களை பயன்படுத்துவது பொருத்தமாக இருக்கும். இதழியலை பொருத்தவரை, பயிற்சியாளர்களிடம் ஒரு வேலையை ஒப்படைத்து, அதை இறுதியாக சரி பார்த்து உறுதி செய்து கொள்வது போலவே சாட்பாட்களை பயன்படுத்த வேண்டும்.
இதழியலில் ஏஐ நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்றால், சாட்பாட் பயன்பாடு தான் பிரச்சனைக்குறியது. ஏனெனில் அவை, மிகுந்த நம்பிக்கையோடு தவறான தகவல்களை அளிக்க கூடியவை. இதழாளர்களும் இப்படி பேசுபவர்களுக்கு பழகியவர்கள் என்பதால் எதையும் ஒரு முறைக்கு இரு முறை சரி பார்க்கும் வழியை சாட்பாட்டிடமும் பின்பற்ற வேண்டும்.
சோமாவின் முழு நேர்காணல்: https://themarkup.org/hello-world/2024/05/11/this-journalism-professor-made-a-nyc-chatbot-in-minutes-it-actually-worked