ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழர்களின் எழுச்சி மிகு போராட்டம் மகத்தான மக்கள் போராட்டத்தின் அடையாளமாக பார்க்கப்படும் நிலையில், இந்த போராட்டத்திற்கு ஆதரவாக கூகுள் டூடுல் சித்திரத்தை வெளியிட வேண்டும் எனும் கோரிக்கை எழுந்துள்ளது.
இணைய உலகின் முன்னணி தேடியந்திரமான கூகுள் அளிக்கும் தேடல் சேவையுடன், அதன் டூடுல் சித்திரமும் பிரசித்தி பெற்றது. தேடியந்திய முகப்பு பக்கத்தில் உள்ள லோகோவை, கூகுள் சில நேரங்களில் விஷேச வடிவமாக மாற்றி அமைப்பதுண்டு. இந்த தோற்றம் கூகுல் டூடுல் சித்திரம் என பிரபலமாக குறிப்பிடப்படுகிறது.
பொதுவாக வரலாற்று பிரமுகர்களை நினைவுபடுத்தி அவர்களை கவுரவிக்கும் வகையில் கூகுள் இப்படி டூடுல் சித்திரங்களை அமைப்பதுண்டு. முக்கிய நிகழ்வுகளை குறிக்கும் வகையில் இவ்வாறு டூடுல் சித்திரத்தை கூகுள் வெளியிடுவதுண்டு. ஒலிம்பிக் போட்டி உள்ளிட்ட நிகழ்வுகளின் போதும் கூகுல் பொருத்தமான டூடுல் சித்திரத்தை வெளியிடும். தீபாவளி, ஹோலி உள்ளிட்ட பண்டிகைகளுக்குல் கூகுள் டூடுல் வெளியாகி உள்ளது.
இந்த டூடுலை கிளிக் செய்தால், தொடர்புடைய நிகழ்வின் தேடல் பக்கம் தோன்றும். கூகுள் டூடுல் மறக்கப்பட்ட முக்கிய பிரமுகர்களை கவுரவிக்கும் வகையிலும் அமைந்துள்ளன. சமகால நிகழ்வுகளை அங்கீகரிக்கும் வகையிலும் அமைந்துள்ளன.
இந்நிலையில்,ஜல்லிக்கட்டுக்கான உரிமைக்குரலாக தமிழர்களின் தன்னெழுச்சியான போராட்டம் உத்வேகம் பெற்று வரும் நிலையில், இந்த போராட்டத்தை அங்கீகரித்து டூடுல் சித்திரத்தை வெளியிட வேண்டும் எனும் கோரிக்கை எழுந்துள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பான குறும்பதிவுகளை உணர்வுடன் வெளியிட துவங்கப்பட்டுள்ள @ஜல்லிகட்டு ( ) எனும் டிவிட்டர் கணக்கு இந்த கோரிக்கையை வெளியிட்டுள்ளது. கூகுள் சி.இ.ஓவவாக இருக்கும் நம்முடைய தமிழரான சுந்தர் பிச்சையிடம் ஜல்லிக்கட்டு டூடுல் வெளியிட கேட்டுக்கொள்ப்வோம் என அந்த குறும்பதிவு தெரிவிக்கிறது.
அமைதியான முறையில் நடைபெறும் மக்கள் போராட்டம் உரிமைக்குரலுக்கான உதாரணமாக கருதப்படும் நிலையில், கூகுள் தனது லோகோவிலும் இந்த போராட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் ஜல்லிக்கட்டு டூடுலை வெளியிட வேண்டும். இதன் மூலம் உலகில் உள்ள அனைவரும் ஜல்லிக்கட்டுவின் பெருமையை உணர்வார்கள்.