நல்ல செய்திகளுக்கான நாளிதழ் – தி ஆப்டிமிஸ்ட் சிட்டிசன் – இணைய பரண், #செய்திகள், #இணைய செய்தி கையேடு

செய்திகள் எனும் போது, சூடான தன்மையையும், அவை உண்டாக்கும் பரபரப்பையும் தவிர்க்க முடியாது. உடனடி செய்திகளுக்கான தேவையையும் மறுக்க முடியாது. சுவையான செய்திகளும், ஊக்கம் அளிக்கும் செய்திகளும் உண்டு என்றாலும், பொதுவாக எதிர்மறையான செய்திகளே ஆதிக்கம் செலுத்துகின்றன.

இந்த போக்கிற்கு மாறாக, பரபரப்பையும், உடனடித் தன்மையையும் தவிர்த்து, ஊக்கம் அளிக்கும் செய்திகளுக்கு முன்னுரிமை அளித்து செயல்படும் ஊடகங்களும் இருக்கின்றன. இந்தியாவின் தி ஆப்டிமிஸ்ட் சிட்டிசன் (https://theoptimistcitizen.com ) இந்த பிரிவின் கீழ் தான் வருகிறது.

அச்சு வடிவில் வெளியான இந்த இதழ் நின்றுவிட்டது என்றாலும், அதன் ஆவணமாக்கப்பட்ட வடிவம் இணையத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் இருந்து வெளியான இந்த இதழ், 2014 ம் ஆண்டு முதல் 2022 ம் ஆண்டு வரை வெளிவந்திருக்கிறது. ஐதராபாத், பெங்களூரு, சென்னை உள்ளிட்ட நகரங்களிலும் வெளியாகியிருக்கிறது.

இடைப்பட்ட காலத்தில் பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளது. இதன் நிறுவனர்களில் ஒருவர் போர்ப்ஸ் பத்திரிகையின் இளம் சாதனையாளர்களில் ஒருவராக அடையாளம் காட்டப்பட்டார். அசோகா அமைப்பின் அங்கீகாரமும் கிடைத்துள்ளது.

ஊக்கம் அளிக்கும் செய்திகளில் கவனம் செலுத்திய இந்த இதழ் நிறுத்தப்பட்டது வருத்தம் அளித்தாலும், இதன் வரலாறும், பதிப்புகளும் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருவது உற்சாகம் அளிக்கிறது.

இதற்கான இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் “நல்ல செய்திகளுக்கான முதல் இந்திய நாளிதழ்’ எனும் முழக்கத்தோடு, எட்டு ஆண்டுகளுக்கு மற்ற ஊடகங்கள் கவனிக்காத செய்திகளை வெளியிட்டு வந்தோம் என குறிப்பிடப்பட்டு, நாங்கள் செய்த அனைத்தின் பதிவுகளும் இங்கே உள்ளது எனும் குறிப்போடு, இதுவரை வெளியான அனைத்து இதழ்களின் பழைய வடிவங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. முதல் இதழ் துவங்கி, அனைத்து 56 இதழ்களையும் பிடிஎப் கோப்பு வடிவில் அணுக முடிகிறது.

’முதல் பக்கத்திற்கு எதிரான சிறு கிளர்ச்சி’ எனும் தலைப்பில், இந்த இதழ் தோன்றியதற்கான நோக்கம் மற்றும் செயல்பாடு பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளது.

இணையதளங்களும், இணைய இதழ்களும் அவை தோன்றிய சுவடே இல்லாமல் காணாமல் போவது இயல்பாக இருக்கும் சூழலில், ஆவணமாக்கலின் தேவையையும், அருமையையும் உணர்த்தும் வகையில், இந்த இதழின் பழைய வடிவங்கள் பராமரிக்கப்பட்டு வருவதும், அவை எளிதாக அணுகும் இடைமுகம் கொண்டிருப்பதும் பாராட்டத்தக்கது.

பியூஷ் கோஷ் (Piyush Ghosh) , துஹின் குமார் சென் (Tuhin Kumar Sen) உள்ளிட்டோர் இந்த குழுவை வழி நடத்தியுள்ளனர்.

–

நல்ல செய்திகள் அல்லது ஊக்கம் அளிக்கும் செய்திகள் பிரிவில், இணையத்தைப் பொருத்தவரை ’தி குட்நியூஸ் நெட்வொர்க்’ முன்னோடி தளங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்திய அளவில் இப்பிடிவில் ’தி பெட்டர்இந்தியா’ முன்னோடி.

விவசாயிகளின் குரலை உரக்க ஒலிக்கும் டிராலி டைம்ஸ்

இதழாளர்கள், செய்தி அறிதலில் ஆர்வம் கொண்டவர்களுக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட இணையதளங்கள், இணைய வளங்களை பட்டியலிட்டு அறிமுகம் செய்யும் இணைய செய்தி கையேடு தளத்தின் விரிவாக்கமாக வெளியிடப்படும் செய்தி- ஊடகம் சார்ந்த பதிவுகளில் ஒன்றாக இது அமைகிறது.

இணைய செய்தி கையேடு – News guide in Tamil

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *