ஸ்டார்ட் அப் செய்திகளுக்கான தளம் -#நியூஸ், #இணைய செய்தி கையேடு, #news guide

ஹேக்கர் ஸ்டிரீட்.இன் எனும் பெயரில் ஒரு செய்தி தளம் இருந்திருக்கிறது. உலக அளவில் தொழில்நுட்ப ஆர்வலர்கள் மத்தியில் பிரபலமான ஹேக்கர் நியூஸ் (Hacker News  ) போல தொழில்நுட்ப செய்திகளுக்கான திரட்டி சேவையாக இது இருந்திருக்கிறது.

ஹேக்கர் நியூஸ் போன்ற பிற செய்தி சேவைகள் என ஹேக்கர் நியூஸ் தளத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில்கள் கொண்ட விவாத சரட்டில், ( 2012 ம் ஆண்டு), இந்தியாவுக்காக, ஹேக்கர் நியூஸ் எனும் அருமையான இணைய பேட்டை இருக்கிறது என இந்த தளம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதே தளத்தின் இன்னொரு விவாத சரட்டிலும், இந்தியாவின் ஹேக்கர் நியூஸ் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அட, இந்திய ஹேக்கர் நியூஸா எனும் ஆர்வத்தில் இந்த தளத்தை தேடிப்பார்த்தால், தற்போது செயல்பாட்டில் இல்லை என்பதோடு, இது தொடர்பான பழைய செய்திகளையும் அறிய முடியவில்லை. ஆனால் தி ஹேக்கர்ஸ்டிரீட்.காம் (https://thehackerstreet.com/ ) எனும் பெயரில் ஒரு தளம் இருக்கிறது. நோக்கத்தில் முற்றிலும் வேறுபட்டது. இதற்கும் முந்தைய தளத்திற்கும் தொடர்பு உள்ளதா என்பதை தீர்மானிக்க முடியவில்லை.

ஆக, ஹேக்கர்ஸ்டிரீட்.இன் தளம் சுவடில்லாமல் காணாமல் போய்விட்டது. அதன் நிறுவனர் அல்லது துவக்கப்பட்ட நோக்கம் தொடர்பாக எதையும் அறிய முடியவில்லை.

இந்த பின்னணியில், ஸ்டார்ட் அப் செய்திகளுக்கான மூன்று தளங்களை பார்க்கலாம்:

ஸ்டார்ட் அப் கிராண்ட்ஸ் இந்தியா – https://www.startupgrantsindia.com/

இதை ஸ்டார்ட் அப் செய்தி தளம் என்று குறிப்பிடுவதை விட, ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான நிதி திட்டங்கள் தொடர்பான தகவல்கள் அளிக்கும் தளம் என்று சொல்லலாம். இந்தியாவில் ஸ்டார்ட் அப் சூழலை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நிதி திட்டங்கள் அரசு மற்றும் பிற அமைப்புகளால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் ஸ்டார்ட் அப் இந்தியா கீழான நிதி திட்டம் துவங்கி, அடைகாக்கும் மையங்களின் திட்டம், மாநில அரசு அமைப்புகளின் மானியம், தனியார் அமைப்புகளின் பரிசு என எண்ணற்ற நிதி திட்டங்கள் இருக்கின்றன.

இப்படி ஸ்டார்ட் அப்கள் பங்கேற்க கூடிய நிதி திட்டங்கள் தொடர்பான தகவல்களை இந்த தளம் திரட்டித் தருகிறது. எல்லாம் பொதுவெளியில் உள்ள தகவல்கள் தான் என்றாலும், அவை அனைத்தையும் எளிதாக ஒரே இடத்தில் தொகுத்தளிக்கிறது.

ஆயிரத்திற்கும் மேலான நிதி மற்றும் மானிய திட்டங்களை பல்வேறு பிரிவுகளில், துறைகளில் அறிந்து கொள்ள முடிகிறது. இதன் இடைமுகம் சிக்கலாக இருப்பதாக தோன்றினாலும், நிதி திட்டத்திற்கான தகுதி விவரம், விண்ணப்பிக்க வேண்டிய நாள், சிறப்பு அம்சங்கள் உள்ளிட்ட தகவல்கள் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இவற்றின் அடிப்படையில் வடிகட்டித் தேடவும் முடிகிறது.

இந்த தகவல்கள் தவிர, ஸ்டார்ட் அப்களுக்கான நிதி ஆலோசனை தொடர்பான பல்வேறு இணைய சேவைகளும் வழங்கப்படுகின்றன.

ஸ்டார்ட் அப் ஆர்வலர்கள் மற்றும் நிறுவனர்கள் அறிந்திருக்க வேண்டிய இணையதளம்.

–

இந்தியா ஸ்டார்ட் அப் நியூஸ் – https://indianstartupnews.com/

முதல் தளம் போல அல்லாமல், இந்திய ஸ்டார்ட் அப்களுக்கான செய்திகளை அளிக்கும் தளமாக இது விளங்குகிறது. ஸ்டார்ட் அப் கதைகள், ஸ்டார்ட் அப் நிதி திரட்டல் செய்திகள், அரசு கொள்கைகள் என பல தலைப்புகளில் ஸ்டார்ட் அப் செய்திகள் இடம்பெறுகின்றன. வேறு பல பகுதிகளும் இருக்கின்றன.

ஸ்டார்ட் அப் நியூஸ் தமிழ் – https://startupnewstamil.com/

தமிழக ஸ்டார்ட் அப் சூழலுக்கான செய்தி தளம். தமிழக ஸ்டார்ட் அப் தொடர்பான செய்திகளை தமிழில் அளிக்கிறது. ஸ்டார்ட் அப்களை ஊக்குவிக்கும் பகுதிகளையும் கொண்டுள்ளது. இதே நோக்கில் ஸ்டார்ட் அப் பட்டிமன்றம் எனும் நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறது. இதன் யூடியூப் சேனலும் இருக்கிறது.

இணைய செய்தி கையேடு

டிஜிட்டல் இதழியல் மாணவர்களுக்கு வகுப்பறையில் பரிந்துரைத்த, 25 ஊடக இணையதளங்களின் விரிவாக்கமாக, இதழியல் ஆர்வம் உள்ளவர்களுக்கான செய்தி தளங்கள், இணைய வளங்களை அறிமுகம் செய்யும் இணைய செய்தி கையேடு உருவாகியுள்ளது.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *