மக்களவை தேர்தலுக்கான முடிவுகளை உடனுக்குடன் வழங்க அமைக்கப்பட்ட தேர்தல் கமிஷனின் இணைய தளம் முடிவுகளை அறியவிரும்பி வருகை தந்தவர்களின் முற்றுகையை தாங்க முடியாமல் முடங்கியது.
2009 மக்களவை தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் வழங்க தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்திருந்தது.
இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் லட்சக்கணக்கான இணையவாசிகள் முடிவுகளை அறிய இந்த தளத்தை முற்றுகையிட்டனர். இதன் காரணமாக இந்த தளம் 9 மணியளவில் முடங்கியது.
ஒரு நொடிக்கு 1 லட்சம் பேருக்கு மேல் இந்த தளத்தை பார்க்க முயன்றதால் இந்த நிலை ஏற்பட்டதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. எனினும் உடனடியாக இந்தநிலை சரிசெய்யப்பட்டது. தொடர்ந்து தேர்தல் கமிஷனின் இணையதளம் இயங்கி வந்தாலும், முடிவுகளை மெதுவாகவே அறிந்துகொள்ள முடிகிறது.
எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் தேர்தல் கமிஷனின் இணையதளம் வேகமாக இல்லைஎன்று பல இணையவாசிகள் ஏமாற்றம் தெரிவித்துள்ளனர்.