முககவசம் தகவல் தரும் செயலி

இனியும் முககவசம் தேவையா எனும் கேட்கும் நிலைக்கு மக்கள் வந்துவிட்டாலும், முககவசம் அணிவதே கொரானா வைரசுக்கு எதிரான பாதுகாப்பு அரண்களில் பிரதானமானது என கருதப்பட்ட, பதற்றம் நிறைந்த காலத்தை உலகம் அத்தனை எளிதில் மறக்க முடியாது. இந்த காலத்தின் பதற்றத்தை எதிர்கொள்ள உதவும் வகையில் உருவான இணையதளங்களையும், செயலிகளையும் மறக்க முடியாது. இந்த வகையில் தைவான் நாட்டில் உருவானது இமாஸ்க் (eMask app) செயலி.

கொரோனா பெருந்தொற்று பாதிப்பை துவக்கம் முதல் சிறப்பாக கையாண்ட நாடுகளில் ஒன்றாக தைவான் கருதப்படுகிறது. கொரோனா பரவல் கட்டுப்படுத்தலில், அந்நாட்டு அரசும் தனியார் துறையும் இணைந்து செயல்பட்டன. இப்படி உருவாக்கப்பட்டது தான் இமாஸ்க் செயலியும்.

கொரோனா பரவல் அச்சத்தை ஏற்படுத்த துவங்கிய ஆரம்ப மாதங்களில், முககவசத்தின் அருமையும், அவசியமும் பெரிதும் உணரப்பட்டது. அரசும் இதை உணர்ந்து அதிக எண்ணிக்கையில் முககவசங்களை தயாரிக்குமாறு உற்பத்தியாளர்களை கேட்டுக்கொண்டது. முககவசங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் மருந்தகங்கள் மூலமே இவை விற்பனை செய்யப்பட்டன.

இதனிடையே, முககவசங்களுக்கு மக்கள் அலைமோதியதால் பற்றாக்குறை ஏற்படக்கூடாது என, ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் முககவசம் விற்பனை செய்யப்பட்டன. அதன் பிறகு, அடையாள எண்ணுக்கு ஏற்ப ஒற்றை மற்றும் இரண்டு இலக்க நாட்களில் வாங்கி கொள்ள அனுமதிக்கப்பட்டது.

விநியோக்கத்தை சீராக்க மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகள் முககவசம் கிடைப்பது தொடர்பான பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் மென்பொருள் வல்லுனர் ஒருவர் செயலி ஒன்றை உருவாக்கினார்.

தைவான் நாட்டில் உள்ள மருந்தங்களை எல்லாம் வரைப்படத்தின் மீது பட்டியலிட்ட இந்த செயலி, எந்த மருந்தகத்தில் முககவசம் இருப்பில் உள்ளது என்பதை சுட்டிக்காட்டியதோடு, அங்கிருந்து முககவசத்தை ஆர்டம் செய்யவும் வழி செய்தது.

பொதுமக்களுக்கு முககவசம் இருப்பு தொடர்பான தகவலை அளித்த இந்த செயலி, எந்த இடங்களில் எல்லாம் முககவசத்திற்கான தேவை அதிகம் உள்ளன என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்ப திட்டமிடவும் அரசுக்கு உதவியது.

மென்பொருள் வழிகாட்டி இணையதளம்

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *