பாட்காஸ்ட் ரெவ்யூ ஒரு அறிமுகம் – #நியூஸ், #இணைய செய்தி கையேடு

புகழ் பெற்ற பாரீஸ் ரெவ்யூ’ பெயரை நினைவுபடுத்துவது போல இருக்கிறது பாட்காஸ்ட் ரெவ்யூ’ (https://podcastreview.org/ ). உள்ளடக்கத்திலும் தரமாகவே இருக்கிறது.

பாட்காஸ்டிங் நிகழ்ச்சிகளுக்கான இணைய இதழாக அமையும் இந்த தளம், பாட்காஸ்டிங் உலகின் புதிய நிகழ்ச்சிகளையும், தொடர்களையும் அறிமுகம் செய்கிறது. அவற்றுக்கான விமர்சனங்களையும் வழங்குகிறது. பாட்காஸ்டிங் நிகழ்ச்சிகளை பட்டியலிடும் தளமாக மட்டும் அல்லாமல், இந்த துறைக்கான முழுவீச்சிலான இணைய இதழாக விளங்குகிறது.

சிறந்த பாட்காஸ்டிங் நிகழ்ச்சிகளை பட்டியலாக தொகுத்தளித்து அறிமுகம் செய்வதோடு, கவனிக்க வேண்டிய நிகச்சிகளை விரிவாக விமர்சன நோக்கில் அறிமுகம் செய்கிறது. பாட்காஸ்டிங் நிகழ்ச்சிகளை நடத்துபவர்களின் நேர்காணலும் இடம்பெறுகிறது.

பாட்காஸ்டிங் உலகில் என்ன நடக்கிறது என தெரிந்து கொள்வதோடு, அதன் போக்குகளையும், புதிய நிகழ்ச்சிகளையும் அறிமுகம் செய்து கொள்ளலாம்.

புதிய திரைப்படத்திற்கான விமர்சனம் போல, முக்கிய பாட்காஸ்டிங் நிகழ்ச்சிகளை விரிவாக அலசி ஆராய்ந்து அறிமுகம் செய்கிறது. எடுத்துக்காட்டாக கார்டியன் நாளிதழ் சார்பாக, சாட்பாட்களின் பயன்பாடு தொடர்பான பாட்காஸ்டிங் நிகழ்ச்சி அறிமுகத்தை குறிப்பிடலாம். சாட்பாட் பயன்பாடு எப்படி பயனாளிகளை அடிமையாக்குகிறது என்பது உள்ளிட்ட அம்சங்களை இது விவரிக்கிறது.

2018 ம் ஆண்டு முதல் செயல்படுகிறது. டேலைட் மீடியா எனும் நிறுவனம் நடத்துகிறது. எல்லாம் ஆங்கிலத்தில் இருப்பது தான் ஒரே குறை.

இந்தியா மற்றும் தமிழ்நாடு சார்ந்து இத்தகைய ஒரு பாட்காஸ்டிங் இதழ் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்.

–

இதழாளர்கள், செய்தி அறிதலில் ஆர்வம் கொண்டவர்களுக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட இணையதளங்கள், இணைய வளங்களை பட்டியலிட்டு அறிமுகம் செய்யும் இணைய செய்தி கையேடு தளத்தின் விரிவாக்கமாக வெளியிடப்படும் செய்தி- ஊடகம் சார்ந்த பதிவுகளில் ஒன்றாக இது அமைகிறது.

இணைய செய்தி கையேடு – News guide in Tamil

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *