தமிழக எழுத்தாளர்கள் உள்ளிட்ட அறிவிஜீவிகள் மீது எனக்கு முக்கிய ஏமாற்றமும், எதிர்பார்ப்பும் இருக்கிறது. தங்கள் சார்ந்த துறையில், எல்லாவற்றையும் கேள்வி கேட்கும், விமர்சிக்கும் இயல்பும், துணிவும் (!) பெற்றிருந்தாலும், இணையம், தொழில்நுட்பம் என்று வரும் போது, இவர்கள் முன்னணி நுட்பங்களை கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளும் தன்மை பெற்றிருக்கின்றனர் என்பது தான். உதாரணம், பேஸ்புக் மீது கடுமையாக விமர்சனங்கள் வைக்கப்பட்டு வரும் நிலையில், நம்மவர்களோ பேஸ்புக் ஏதே தங்களுக்காக உருவாக்கப்பட்ட கருத்துக்களம் போல இயல்பாக ஏற்றுக்கொண்டு அதில் உழன்று கொண்டிருக்கின்றனர். (இது சுயவிமர்சனமும் தான்).
பேஸ்புக்கை பயன்படுத்தக்கூடாது என்றில்லை, ஆனால் அந்த மேடை வர்த்தகமயமாக்கப்பட்டு, லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு பின்பற்றப்படும் உத்திகளாலும், அல்கோரிதம் செயல்பாடுகளாலும் ஏற்படும் சமூக விபரீதங்களை அறிந்திருப்பதும் அவ்வப்போது வெளிப்படுத்துவதும் அவசியம் அல்லவா!
பேஸ்புக்கை விமர்சிக்காமல் இருப்பது கூட பிரச்சனை அல்ல, அந்த மேடையின் விபரீதம் உணராமல், அதிலேயே உலக பிரச்சனைகள் பற்றியும், சமூக கோட்பாடுகள் பற்றியும் மிகத்தீவிரமாக விவாதித்துக்கொண்டிருப்பது தான் கவலை கொள்ள வைக்கிறது.
நிற்க, பேஸ்புக் மட்டும் அல்ல, யூடியூப், மைக்ரோசாப்ட் விண்டோஸ் உள்ளிட்ட இன்னும் பிற பரவலாக பயன்படுத்தப்படும் சேவைகள் தொடர்பான நம் அறியாமை தொடர்பாகவும் இதே கவலை இருக்கிறது.
இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் எனில், கூகுளை நம் சிந்தனாவாத்கள் கேள்வி கேட்காமலே ஏற்றுக்கொள்வது கவலையோடு, அயர்ச்சியையும் அளிக்கிறது.
கூகுளை கேள்வி கேட்க என்ன இருக்கிறது என கேட்பவர்கள், கூகுளை விமர்சிக்கும் என் முந்தைய பதிவுகளை தேடிப்படிக்கலாம். அல்லது தாங்களே ஆய்வில் ஈடுபடலாம். இப்போதைக்கு ஒரு சின்ன உதாரணம் தருகிறேன்.
ஏஐ எனப்படும் செய்யறிவின் போக்குகளை அறிவதற்காக, உருளைக்கிழங்கிற்கான ஆங்கில சொல்லோடு, ஏஐ எனும் குறிச்சொல்லை டைப் செய்து கூகுளில் தேடிய போது, https://potato-ai.com/ எனும் இணையதளத்தை கூகுள் முதலில் பட்டியலிட்டது. முதல் முடிவாக இருக்கிறதே, அற்புதமான தளமாக இருக்கும் என ஆர்வத்தோடு சென்று பார்த்தால், விரைவில் வருகிறது (Coming Soon) எனும் ஜியோசிட்டீஸ் ( இப்படி ஒரு தளம் இருந்தது தெரியுமா?) காலத்து வாசகம் வரவேற்கிறது.
இனி தான் உள்ளடக்கம் உருவாக்கப்பட உள்ள இந்த தளத்தின் நோக்கமும், பின்னணியும் தெரியவில்லை. தளத்தில் வேறு எந்த தகவலும் இல்லை. முக்கியமாக உருளையும் இல்லை , ஏஐயும் இல்லை. இப்படி ஒரு இணையதளத்தை தான் கூகுள் முதல் முடிவாக முன்னிறுத்துகிறது.
கூகுள் அல்கோரிதம் இந்த தளத்தை முதலில் பட்டியலிட அதற்கான காரணங்களை கொண்டிருக்கலாம் என்றாலும், தளங்களை முன்னிறுத்த பயன்படுத்தப்படும் எஸ்.இ.ஓ உத்திகளுடன் அதனுடன் இணைந்து அல்லது தனியே பயன்படுத்தப்படும் கூகுள் தேடலுக்கான விளம்பரங்களும் முக்கிய காரணமாக இருக்கலாம் என்பதை மறந்துவிடக்கூடாது.
இந்த தேடல் பட்டியலில் இரண்டாவது இணையதளம் போடேட்டோ.டிரோட் (https://potato.trade/ ) ஓரளவு பொருத்தமாக இருக்கிறது. மற்ற முடிவுகளின் பொருத்தமும் கேள்விக்குறியவை தான்.
இது போல கூகுள் தேடல் முடிவுகளின் போதாமைக்கும், அதில் வீசும் வர்த்தக நெடிக்கும் ஆயிரமாயிரம் உதாரணங்களை பட்டியலிடலாம். அப்படியிருக்க, நாம் யாருமே கூகுளின் தேடல் முடிவுகளை கேள்வி கேட்காமலே ஏற்க பழகியிருக்கிறோம். முக்கியமாக, ஏந்த ஒரு தேடல் சொல்லுக்குமான முதல் முடிவு எந்த அளவு பொருத்தமானது, பயனுள்ளது, அதை ஏன் கூகுள் ஏன் முன்னிறுத்துகிறது என ஒருவரும் கேட்பதில்லை.
இது போன்ற கேள்விகளையும், தொழில்நுட்ப விமர்சனங்களையும் நம்மவர்கள் முன்வைக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. உலக அரசியலை பேசும் போது, தொழில்நுட்ப அரசியலையும் அறிந்திருப்பது அவசியம் அல்லவா!