புயல் வெள்ள வலைப்பதிவும், கூகுள் தேடலின் போதாமையும்!

புயல் வெள்ள பாதிப்பின் போது உங்களுக்கு பொருளதார மேதை ஆடம் ஸ்மித் நினைவுக்கு வர வாய்ப்பில்லை. அந்த காரணத்தினால் தான், ஆடம் ஸ்மித்தை அன்போடு அழைக்கும் வகையில் பெயர் (https://dearadamsmith.com/ ) கொண்ட வலைப்பதிவை, பேரிடர் கால சிறந்த வலைப்பதிவுகளில் ஒன்றாக கூகுள் அடையாளம் காட்டிய போது மிகுந்த ஆர்வம் உண்டானது.

ஆனால், டியர் ஆடம்ஸ்மித் எனும் அந்த வலைப்பதிவை சென்று பார்த்த போது ஏமாற்றமே உண்டானது. அதோடு கூகுளின் போதாமையையும் உணர முடிந்தது.

ஏமாற்றம் ஏனெனில், தற்போது அந்த வலைப்பதிவில் பேரிடர் தொடர்பான எந்த பதிவும் இல்லாமல், பூச்சிக்கொல்லி மற்றும் அமேசான் இணைப்புகளை கொண்டுள்ள வெற்று விளம்பர தளமாக அந்த தளம் இருப்பது தான்.

இத்தகைய அனுபவங்கள் இணைய தேடலில் இயல்பானவை தான். அதாவது, தேடிச்செல்லும் இணையதளம் அதன் மூல வடிவத்தில் இல்லாமல் விளம்பர தளமாக உருமாறி இருப்பது அல்லது அந்த தளமே இல்லாமல் போவது.

சிறந்தததொரு இணையதளம் இப்போது இல்லாமல் போனது எனும் உண்மையை புரிந்து கொண்டு நகர்ந்து செல்வதை விட்டு, இது பற்றி ஆராய்ச்சி செய்வதில் என்ன பயன் என்று கேட்கலாம்.

உருமாறி போயிருக்கும் இந்த வலைப்பதிவு பற்றி மேலும் பேசுவதற்கான காரணம் இல்லாமல் இல்லை. முதல் விஷயம், இந்த வலைப்பதிவு இயற்கை பேரிடர் தொடர்பாக முக்கிய விஷயங்களை கொண்டிருக்கலாம் என்பது தான். இப்படி எதிர்பார்ப்பதற்கான காரணம், வலைப்பதிவின் தலைப்பு.

டியர் ஆடம்ஸ்மித் எனும் பெயரில் அமைந்திருப்பதால், பேரிடர் பாதிப்பு தொடர்பான பொருளாதார அம்சங்களை விவாதிக்கும் வலைப்பதிவாக இது அமைந்திருக்கலாம் என்பது ஒரு எதிர்பார்ப்பு. ஆடம் ஸ்மித், பொருளாதார மேதை என்பதை மீறி, முதலாளித்துவ கோட்பாடுகளிலும், அதன் தேவையிலும் நம்பிக்கை கொண்ட மேதை என்பதால், பேரிடர் அவலங்களை முன்வைத்து, முதலாலித்துவ போதாமையகளை பேசும் வலைப்பதிவாக அமைந்திருக்கலாம் என்பது இரண்டாவது எதிர்பார்ப்பு. இரண்டும் அல்லாமல், ஆடம் ஸ்மித் பெயரை ஒரு ஈர்ப்பாக கொண்டு பேரிடர் பற்றி இந்த வலைப்பதிவு பேசியிருக்கலாம்.

எது எப்படியோ, பேரிடர் வலைப்பதிவுகளில் இது குறிப்பிடத்தக்கதாக இருக்கலாம் எனும் எதிர்பார்ப்பை உறுதி செய்து கொள்வதற்காக, இந்த வலைப்பதிவுக்கு சென்று பார்த்தால், அதன் மூல வடிவத்தை காண முடியவில்லை.

சரி, அதன் மூல வடிவம் எப்படி இருந்திருக்கும் என்பதை அறிவதற்காக, இணைய காப்பகமான ’வேபேக்மிஷின்’ தளத்தில் இதன் பழைய சேமிக்கப்பட்ட பக்கங்களை தேடிப்பார்த்தால், இன்னும் ஏமாற்றம் ஏற்படுகிறது. ஏனெனில், இந்த தளம் ஒருபோதும், பேரிடர் வலைப்பதிவாக இருந்ததை அறிய முடியவில்லை. மாறாக டிஜிட்டல் கலைஞர் ஒருவரது தளமாக இருந்துள்ளது.அவர் வெள்ளம், பேரிடர் தொடர்பான சில சித்திரங்களை வரைந்திருக்கிறார். அவுட் ஆப் பிரிண்ட் எனும் அச்சு இதழுடன் இந்த தளம் தொடர்பு கொண்டுள்ளதும் தெரிகிறது.

மற்றபடி பேரிடர் தொடர்பாக அருமையான தளமாக இது இருந்ததிருக்கவில்லை. எனில், இந்த தளம் இப்போது இல்லாமல் போனது குறித்து கவலைப்பட எதுவும் இல்லை தான். அது தான் செய்தியே. இப்படி, பேரிடருக்கான முக்கிய தகவல்களை கொண்டிராத இந்த தளத்தை, சிறந்த பேரிடர் வலைப்பதிவுகளில் மூன்றாவதாக ஃபீட்லி பட்டியலிட்டுள்ளது என்பதோடு, கூகுளும் தேடல் பட்டியலில் இதை முன்னிலைப்படுத்துகிறது.

ஃபீட்லி பட்டியலை, சிறந்த தளங்கள் தொடர்பான பல்வேறு தேடல்களில் கூகுள் முன்னிலைப்படுத்துவதை பார்க்கலாம்.

நிச்சயம், ஃபீட்லியின் இந்த பட்டியலில் ஏதோ பிழை இருக்கிறது. தகுந்த காரணம் இல்லாமல், அது டியர் ஆடம்ஸ்மித் வலைப்பதிவை பட்டியலிட்டிருக்க வாய்ப்பில்லை. அல்லது இது தவறான தேர்வாக கூட இருக்கலாம். இத்தகைய தவறான முடிவுகளை முன்வைக்கும் கூகுள் தேடல் வசதியை கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்வதில் உள்ள பிரச்சனைகளை சுட்டிக்காட்டவே இந்த பதிவு.

மற்றபடி, ஆடம் ஸ்மித் பெயரில் ஒரு தளம் இருப்பது, இணைய முட்டாள்கள் தேடி வர நல்ல வாய்ப்பாகும் என உணர்ந்து, அந்த முகவரியை விலைக்கு வாங்கி அதை விளம்பர தளமாக்கி இருக்கும் நபரை பாராட்டத்தான் வேண்டும்.

நிற்க, ஆடம் ஸ்மித் பெயரில் அருமையான ஒரு இணையதளமும் இருக்கிறது. அது பற்றி தனி பதிவில் பார்க்கலாம்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.