அல்டாவிஸ்டா பற்றி நீங்கள் அறிய வேண்டியவை!

அல்டாவிஸ்டா எல்லோரும் மறந்துவிட்ட, 90 ஸ் கிட்ஸ் என சொல்லப்படும் பழைய தலைமுறை பயன்படுத்திய தேடியந்திரமாக இருக்கலாம். ஆனால், கூகுளுக்கு பழகிய தலைமுறையினர் அல்டாவிஸ்டா பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் இருக்கின்றன.

முதல் விஷயம், அல்டாவிஸ்டா ஒரு முன்னோடி தேடியந்திரம். தேடல் நுட்பம் வளரிளம் பருவத்தில் இருந்த காலகட்டத்தில் நிகழ்ந்த பெரும் பாய்ச்சலாக அல்டாவிஸ்டா 1995 ல் அறிமுகமானது. முழு இணைய பக்கங்களையும் தேடும் ஆற்றலை கொண்டிருந்தது அதன் சிறப்பம்சமாக சொல்லப்படுகிறது.

இன்று தேடல் உலகில் ஏஐ நுட்பம் பெரிதாக பேசப்படுகிறது. பிரப்லக்ஸிட்டி.ஏஐ போன்ற ஏஐ தேடியந்திரங்கள் கூகுளுக்கு சவாலாக விளங்கலாம் என கருதப்படுகிறது. ஏஐ திறன் கொண்ட சாட்ஜிபிடியும் தான் கூகுளுக்கு போட்டியாக சொல்லப்படுகிறது. ஆனால், தேடல் திறனுக்காக ஏஐ நுட்பத்தை பயன்படுத்துவதில் அல்டாவிஸ்டா தான் முன்னோடி.
சாட்பாட்களுக்கான அடிப்படை நுட்பங்களில் ஒன்றாக கருதப்படும் என்.எல்.பி எனும் இயற்கை மொழி செயலாக்கத்தை முதலில் பயன்படுத்தியது அல்டாவிஸ்டா தான். அமெரிக்க அதிபர் யார்? எனும் கேள்வியை இந்த தேடியந்திரத்தில் தேடினால், அமெரிக்கா மற்றும் அதிபர் ஆகிய சொற்களுக்கான தேடல் முடிவுகளை மட்டும் கொண்டுவரக்கூடிய திறன் அல்டாவிஸ்டா பெற்றிருந்தது.

அது மட்டும் அல்ல, வரி வடிவில் மட்டும் அல்லாமல், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் முதன் முதலில் தேடும் வசதி கொண்டிருந்தது.
எல்லாவற்றுக்கும் மேல், ஆங்கிலம் மட்டும் அல்லாமல் பல மொழிகளில் தேடும் ஆற்றலை கொண்டிருந்தது. பேபில்பிஷ் எனும் நுட்பம் மூலம் இது சாத்தியமாகியது. ஆக, இன்றைய கூகுள் மொழிபெயர்ப்பு சேவைக்கும் அல்டாவிஸ்டா தான் முன்னோடி.
ஆக எப்படி பார்த்தாலும் தேடியந்திர பரப்பில் அல்டாவிஸ்டா ஒரு முன்னோடி. அதனால், தான் அல்டாவிஸ்டாவில் தேடுவது போன்ற உணர்வை தரும் இந்த பழைய கால இணையதளங்களை தேடுவதற்கான ஓல்டவீஸ்டா எனும் இணையதளம் கவனத்தை ஈர்க்கிறது.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *