இணையத்தின் முதல் முழு தேடியந்திரம்

Altavista-19991995 ம் ஆண்டு இறுதியில் அல்டாவிஸ்டா அறிமுகமானது.

இன்று, ’அல்டாவிஸ்டா’ பெயரை கேட்டதுமே பலரும், புரியாமல் விழிக்கலாம். ஆனால் இணைய அனுபவசாலிகள் மட்டும், அல்டாவிஸ்டாவா, அந்த காலத்தில் கோலோச்சிய தேடியந்திரமாயிற்றே என நினைவலைகளில் மூழ்கலாம்.

ஆம், வலை வளரத்துவங்கிய ஆரம்ப காலத்தில், இணையவாசிகள் தகவல்களை தேட வழிகாட்டிய தேடியந்திரம் அல்டாவிஸ்டா. அந்த காரணத்தினாலேயே அது அறிமுகமான காலத்தில் வெகு பிரபலமாக இருந்தது.

இத்தனைக்கும் அல்டாவிஸ்டா முதல் தேடியந்திரம் அல்ல. அதற்கு முன்னரே பல தேடியந்திரங்கள் அறிமுகமாகியிருந்தன. ஆனால் அல்டாவிஸ்டா முதல் முழு தேடியந்திரமாக அறியப்படுகிறது.

இணையம், வலை வடிவில் சாமானிய மக்களுக்கு நெருக்கமாகி,  நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருந்த நிலையில், அதில் இடம்பெறும் தகவல்களில் தேவையானவற்றை தேடி எடுப்பது பெரும்பாடாக இருந்தது. இந்த சவாலை எதிர்கொள்ள, ஏற்கனவே உருவாக்கப்பட்ட மற்றும் புதிதாக உருவாக்கப்பட்டு க்கொண்டிருந்த வலை தளங்களை பட்டியலிட்டு, அவற்றில் இருந்து தகவல்களை தேடித்தரும் சேவைகள் அறிமுகமாயின.

வலையை உருவாக்கிய, டிம் பெர்னர்ஸ் லீயே, அனைத்து வலைமனைகள் பட்டியலிடப்பட்ட விர்ச்சுவல் லைப்ரரியை உருவாக்கியிருந்தார். அதன் பிறகு தேடியந்திரங்கள் அறிமுகமாயின. ஆரம்ப கால தேடியந்திரங்கள் பெரும்பாலும், இணையதளங்கள் பட்டியல் மற்றும் கைகளால் சேகரிக்கப்பட்ட தளங்களின் பட்டியலில் இருந்து தகவல்களை தேடித்தந்தன. பயனாளிகள் இவற்றில் தளங்களை இடம்பெற வைக்கும் வசதியும் இருந்தது.

ஆனால், வலை வளர்ந்த வேகத்திற்கு இவற்றால் ஈடு கொடுக்க முடியவில்லை. எனவே, தகவல்களை தேடுவதில் புதிய நுட்பங்கள் உருவாக்கப்பட்டன. எக்சைட், இன்போசீக், லைகோஸ், வெப்கிராலர் உள்ளிட்ட தேடியந்திரங்கள் அறிமுகமாயிருந்தன. ஆனாலும், கூட விரும்பிய தகவல்களை தேடுவது சிக்கலான அனுபவமாகவே இருந்தது.

இந்த சூழலில் தான், 1995 ம் ஆண்டு டிசம்பர் மாதம் டிஜிட்டல் எக்யூப்மெண்ட் கார்ப்பரேஷன், அல்டாவிஸ்டா தேடியந்திரத்தை அறிமுகம் செய்தது. டிஜிட்டல் நிறுவனத்தின் நோக்கம், ஒரு தேடியந்திரத்தை அறிமுகம் செய்வதாக இருக்கவில்லை. அதன் வசம் இருந்த ஆல்பா 8400 டர்போ லேசர் எனும் கம்ப்யூட்டர் தரவுகள் காப்பகம், போட்டியாளர்களை விட பல மடங்கு செயல்திறன் மிக்கதாக இருந்ததை காட்சிப்படுத்த விரும்பியது. அதற்கான வாகனமாக அல்டாவிஸ்டா உருவாக்கப்பட்டது.

வலையை பகுதி பகுதியாக பட்டியலிட்டுக்கொண்டிருந்த தளங்களுக்கு மத்தியில், அல்டாவிஸ்டாவால், முழு இணையத்தையும் பட்டியலிட்டு, சேமித்து வைத்து, அவற்றில் இருந்து தகவல்களை தேடித்தர முடிந்தது.

லூயிஸ் மோனியர் மற்றும் மைக்கேல் பரோஸ் (Louis Monier and Michael Burrows.) ஆகிய மென்பொருளாளர்கள் அல்டாவிஸ்டா உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தனர். இணையத்தில் உள்ள எச்.டி.எம்.எல் பக்கங்களை எல்லாம் தேடி எடுப்பதற்கான மென்பொருளை மோனியர் உருவாக்கினார். இணைய சிலந்தியாக செயல்பட்ட இந்த மென்பொருள் ஸ்கூட்டர் என அழைக்கப்பட்டது. இந்த தகவல்களை எல்லாம் பட்டியலிடும் மென்பொருளை பரோஸ் உருவாக்கினார்.

இந்த இரண்டு நுட்பங்களும் சேர்ந்து அல்டாவிஸ்டாவை சிறந்த தேடல் சாதனமாக உருவாக்கியது. டிஜிட்டல் நிறுவனம் முதலில் தனது பத்தாயிரம் ஊழியர்கள் மத்தியில் இந்த நுட்பத்தை பரிசோதித்து அதன் பிறகு பொதுமக்களுக்கு வெள்ளோட்டம் செய்தது.

மில்லியன் கணக்கான இணைய பக்கங்களை தேடி கண்டெடுத்து, பட்டியலிட்டு வைத்திருந்த அல்டாவிஸ்டா, ஒவ்வொரு இணைய பக்கத்தில் இருந்த அனைத்து தகவல்களையும் சேமித்து வைத்திருந்தது. மேலும், இணைய விவாத குழுக்கள் தகவல்களையும் அது பட்டியலிட்டிருந்தது. இந்த அம்சங்களே, இணையத்தை முழுமையாக பட்டியலிட்டு தேட வழி செய்த முதல் தேடியந்திரமாக அல்டாவிஸ்டாவை உருவாக்கியது.

அதன் தேடல் ஆற்றலை மீறி அல்டாவிஸ்டா எளிமையான முகப்பு பக்கத்தை பெற்றிருந்தது.

அல்டாவிஸ்டா அறிமுகம் ஆன போது சூப்பர் ஸ்பைடர் மூலம் இணையத்தில் சிறப்பாக தேடும் நுட்பம் என்றே வர்ணிக்கப்பட்டது. தனது தேடல் நுட்பம் பற்றி பெருமை பட்டுக்கொண்ட டிஜிட்டல் நிறுவனம், இந்த நுட்பத்தை கட்டணச்சேவையாக அறிமுகம் செய்வதா அல்லது இலவசமாக அறிமுகம் செய்வதா என யோசித்துக்கொண்டிருந்தது. அதன் பிறகு, இந்த தேடல் நுட்பத்தின் ஈர்ப்பை கொண்டு, தனது மற்ற சேவைகளை காட்சிப்படுத்தலாம் என இலவச சேவையாக அறிமுகம் செய்தது.

அறிமுக தினத்தன்றே 3 லட்சம் பயனாளிகள் அல்டாவிஸ்டா இணையதளத்திற்கு வருகை தந்தனர். அதில் தகவல்களை தேடியவர்கள் சொக்கிப்போயினர். ஏனெனில், அல்டாவிஸ்டாவில், இயல்பாக கேள்வி கேட்பது போல தகவல்களை தேட முடிந்தது. அது மொத்த இணையத்தையும் பட்டியலிட்டிருந்தது. தகவல்களை குறிச்சொற்கள் கொண்டு மட்டும் அல்லாமல், இரு வார்த்தைகளுக்கு இடையே அல்லது , மற்றும் எனும் சொற்களை கொண்டு தேட முடிந்தது. அது பல மொழி தேடலை அளித்ததோடு, புகைப்படம், வீடியோ ஆகிய தேடல்களையும் முதலில் அளித்தது. இணைய மொழிபெயர்ப்பு வசதியையும் அளித்தது.

இவை எல்லாம் சேர்ந்து தான், அல்டாவிஸ்டாவை இணையவாசிகளுக்கு நெருக்கமானதாக ஆக்கியது. குறுகிய காலத்தில் அது பெரும்பாலானோர் பயன்படுத்தும் தேடியந்திரமாக உருவானது. அந்த காலகட்டத்தில் முன்னணி வலைவாசலாக உருவாகியிருந்த யாஹு,அல்டாவிஸ்டா தேடல் சேவையை உரிமம் பெற்று பயன்படுத்திக்கொண்டது.

அல்டாவிஸ்டா பிரபலமான பிறகே, இணையத்தில் சிறப்பாக தேடுவது எப்படி எனும் வழிகாட்டி குறிப்புகளும் பிரபலமாயின.

இத்தனை சிறப்புகளை மீறி, அல்டாவிஸ்டா தேடியந்திரமாக நிலைக்கவில்லை. நிர்வாக கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகளால் தடுமாறிய அல்டாவிஸ்டா பின்னர் யாஹு நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டது. ஆனால் கூகுளின் எழுச்சிக்குப்பிறகு பின்னுக்குத்தள்ளப்பட்டு ஒரு கட்டத்தில் முழுவிழா கண்டது.

தமிழ் இந்துவில் எழுதி வரும் வலை 3.0 தொடரின் ஒரு பகுதி

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.