கூகுளுக்கு மாற்று என்று சொல்லப்படும் ஏஐ தேடியந்திரம் பெர்ப்ல்க்சிடி தேடியந்திரத்தை அறிமுகம் செய்யும் வகையில் சிறிய நூல் ஒன்றை எழுதிக்கொண்டிருக்கிறேன். என்னைப்பொருத்தவரை இந்த நூல் சத்திய சோதனை என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில், இதில் நான் பெர்ப்லக்சிட்டி புகழ் பாடப்போவதில்லை. அதற்காக கூகுளுக்கு கொடி பிடிக்கிறேன் என்ற பொருளும் இல்லை. தேடியந்திரமாக கூகுள் மீது எனக்கு கடுமையான விமர்சனங்கள் இருக்கின்றன.
அதிலும் குறிப்பாக அண்மை ஆண்டுகளாக கூகுளின் தேடல் முடிவுகளில் வெளிப்படையாக தெரியும் வர்த்தக+ விளம்பர தன்மை பெரும் அதிருப்தியை அளிக்கிறது. அதோடு, கூகுள் தேடல் பரப்பில் தனது முன்னிலை, ஏகபோகத்தை அடிப்படையாக கொண்டு பிரதானமாக வர்த்தக நோக்கில் செயல்படுகிறது.
எல்லோரும் நினைப்பது அல்லது கொண்டாடுவது போல, கூகுள் அது அறிமுகமான காலத்தில் இருந்தது போன்ற தூய தேடியந்திரமாக தற்போது இல்லை.
எனவே கூகுளை மட்டும் நம்பாமல் மாற்று தேடியந்திரங்களை நாட வேண்டும் என்பது என் நம்பிக்கை.
மேலும், கூகுளை விட்டால் வேறு வழி கிடையாது என்று சொல்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றாலும், இப்போது பரபரப்பாக பேசப்படும் ஏஐ தேடியந்திரங்கள் மீதும் எனக்கு பெரிய ஈர்ப்பில்லை. அந்த வகையில் கூகுளுக்கு பதிலீடு என்று சொல்லப்படும் பெர்ப்லக்சிடியை எண்ணி மெய் சிலிர்த்துப்போவதில்லை.
இருப்பினும், ஏஐ தேடியந்திரங்களை அலசி ஆராயும் வகையில் பெர்ப்லக்சிடியை மையமாக கொண்டு சிறிய அறிமுக நூலை எழுத விரும்புகிறேன்.
மொழி மாதிரி சார்ந்தது, சாட்பாட் வடிவிலானது, பாரம்பரிய தேடல் பட்டியலோடு ஏஐ நுட்பத்தை கலந்து பயன்படுத்தும் தன்மை ஆகியவற்றோடு, ஏஐ தேடியந்திரங்களின் வரம்புகள், போதாமைகளையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இந்த பின்னணியில் பெர்ப்லக்சிடியின் செயல்திறன் தொடர்பான ஒரு உதாரணத்தை பார்க்கலாம்.
திஸ் பர்சன் ட்ஸ் நாட் எக்சிஸ்ட்.காம் எனும் முன்னோடி இணையதளம் ஒன்று இருக்கிறது. எஐ யுகத்தின் அடையாளம் என கருதக்க்கூடிய இந்த தளம் சார்ந்தும் சிறு அறிமுக நூலை எழுதிக்கொண்டிருக்கிறேன்.
திஸ் பர்சன் ட்ஸ் நாட் எக்சிஸ்ட்.காம் தளம் தொடர்பான மேலதிக தகவல்களை கூகுளில் தேடும் போது, வழக்கமான கூகுள் வர்த்தக தன்மை வெளிப்பட்டு அதிருப்தியை அளித்தது. தேடல் பட்டியலில், இதே பெயரிலான ஆர்க் என முடியும் வேறு ஒரு தளம் முதல் முடிவாக இடம்பெற, மூல தளம் இரண்டாவதாக இடம் பெற்றுள்ளது.
மூல தளம் இரண்டாவதாக இடம்பெறவும், அதே போன்ற வேறு ஒரு தளம் முதலில் இடம் பெறவும், கூகுள் மட்டுமே அறிந்த பொருத்தமான காரணங்கள் இருக்கலாம். என்னைப்பொருத்தவரை, குறிப்பிட்ட தேடலுக்கான மூல தளம் முதலில் முன்னிறுத்தப்படாமல் பின்னுக்குத்தள்ளப்படுவது நெருடலாக அமைகிறது. ( அல்டாவிஸ்டாவின் பேபல் பிஷ் சேவை தொடர்பான தேடலிலும் இதே பிரச்சனை உள்ளது: )
இதே தளத்திற்கான தேடல் முடிவுகளை ஒப்பிட்டு பார்க்கலாம் என மைக்ரோசாப்டின் பிங் தேடியந்திரத்தை பயன்படுத்திய போது, அதிலும் கூகுள் போலவே பட்டியல் வந்தது. ( பிங் இப்படி தான், சில நேரங்களில் கூகுளைவிட மேம்பட்டதாக தோற்றம் தரும். பல நேரங்களில் கூகுளின் நகலாக தோன்றும்).
சரி, இந்த சிக்கலுக்கு பெர்ப்லக்சிடி என்ன பதில் தருகிறது என பார்க்கலாம் என, எது மூல திஸ் பர்சன் ட்ஸ் நாட் எக்சிஸ்ட் இணையதளம் எனும் கேள்வியை கேட்டேன்.
ஆச்சரியப்படும் வகையில், இந்த கேள்விக்கு திஸ் பர்சன் ட்ஸ் நாட் எக்சிஸ்ட்.காம் தளத்தை மூல தளம் என குறிப்பிட்டு, அந்த தளம் பில்ப் வாங் என்பவரால் துவக்கப்பட்டது , 2019 முதல் உள்ளது எனும் தகவல்களை தொகுத்தளிக்கிறது.
பெர்ப்லக்சிடியின் இந்த பதில் சரியானது தான் என்றாலும், இதற்காக அதை கொண்டாடும் முன், கூகுளில் இதே கேள்வியை கேட்டுப்பார்க்கலாம் என் கேட்ட போது, கூகுள் தேடல் பட்டியலின் முதல் முடிவு, திஸ் பர்சன் ட்ஸ் நாட் எக்சிஸ்ட்.காம் பற்றி விவரிக்கும் மீடியம் வலைப்பதிவு முதல் முடிவாகவும், மற்ற முடிவுகள் இந்த தளம் அறிமுகமான போது வெளியான செய்திக்கட்டுரைகளின் இணைப்பாகவும் இருக்கிறது.
இந்த முடிவுகளில் இருந்து திஸ் பர்சன் ட்ஸ் நாட் எக்சிஸ்ட்.காம் மூல தளம் என்பதை புரிந்து கொள்ளலாம். இந்த தேடல் முடிவுகளை தான் பெர்ப்லக்சிடி தொகுத்து சுருக்கி தருகிறது எனும் போது அதை மூல தேடியந்திரம் என எப்படி கொண்டாட முடியும்?
பெர்ப்லக்சிடியின் சிறப்பே கூகுள் தேடல் முடிவுகளை தொகுத்தளிப்பதாக கருதலாம். அதற்காக கூகுளை தான் முழு முதல் தேடியந்திரம் என்றும் கருத முடியாது. அதான் போதாமைகள் பக்கம் பக்கமாக இருக்கின்றன.
நிற்க சாட்ஜிபிடியும் இந்த கேள்விக்கு சுருக்கமாக ஓரளவு சரியான பதிலையை தருகிறது.
இப்படி இன்னும் நிறைய தேடல் மற்றும் ஏஐ சார்ந்த விஷயங்களை இந்த அறிமுக நூலில் விவரிக்க திட்டம்.