இந்த இணையதளம் ஏ.ஐ பிரம்மா தெரியுமா?

ஏற்கனவே பொய் செய்திகள் இணையத்தை ஆட்டிப்படைத்து வருகின்றன. இன்னொரு பக்கத்தில் ’டீப் ஃபேக்’ எனும் போலி வீடியோ தொழில்நுட்பம் வேறு பெரும் பிரச்சனையை ஏற்படுத்து வருகிறது. இப்போது சாட்ஜிபிடி மென்பொருளும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்நிலையில், பொய்முகங்களை உருவாக்கும் வில்லங்கமான இணையதளம் ஒன்று அறிமுகமாகி இருக்கிறது. ஆனால், இந்த தளத்தை வில்லங்கமானது என்று மட்டும் சொல்லிவிட முடியாது. இந்த புதுமையானதும் கூட. ஆனால் அந்த புதுமையில் வில்லங்கமும் கலந்திருக்கிறது- ஏ.ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு வில்லங்கம். அதன் காரணமாகவே இந்த தளத்தை அலட்சியம் செய்து கடந்து போகாமல், நின்று நிதானமாக ஆய்வு செய்து புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்த மனிதர் இல்லை எனும் பொருள் கொண்ட ’திஸ் பர்சன் டஸ் நாட் எக்சிஸ்ட்’ (https://thispersondoesnotexist.com/ ) எனும் அந்த தளம், அதை புதுப்பிக்கும் ஒவ்வொரு முறையும் ஒரு மனிதரின் தோற்றத்தை உருவாக்கித்தருகிறது. இப்படி தோன்றும் மனிதர் இல்லாதவர் என்பது தான் கவனிக்க வேண்டிய விஷயம். அதாவது இந்த தளத்தில் நீங்கள் பார்க்கும் எந்த மனிதரும் நிஜத்தில் கிடையாது. இந்த மனிதர்கள் எல்லாமே, செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட மாய மனிதர்கள்.

ஆனால் ஒன்று, இந்த மாயமனிதர்களை பார்க்கும் எவரும், அப்படி நினைக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு திரையில் தோன்றும் ஒவ்வொரு முகமும் அச்சு அசல் மனித முகம் போலவே இருக்கும். இந்த தகவல் தெரிந்து கொண்டு கூர்ந்து கவனித்தால், சில வேறுபாடுகளை கண்டுபிடிக்கலாம். ஆனால் பொதுவாக பார்க்கும் போது, இந்த பொய் முகங்கள் நிஜ முகங்கள் என்று நினைத்து ஏமாற வைக்கும். அவற்றின் பின்னே இருக்கும் செய்ற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அப்படி!

இந்த கட்டுரையை மேற்கொண்டு படிப்பதற்கு முன் ஒரு முறை இந்த தளத்தில் எட்டிப்பார்த்தீர்கள் என்றால், இதில் தோன்றும் செயற்கை மனிதர் முகங்கள் எத்தனை நிஜமானதாக இருக்கிறது என்பதை நீங்களே உணர்ந்து வியந்து போகலாம்.

எல்லாம் சரி, இந்த தளத்தை உருவாக்கியது யார்? எதற்கு இப்படி ஒரு இணையதளம்? இந்த தளத்தால் எப்படி பொய் மனிதர்களை உருவாக்க முடிகிறது? இதனால் என்ன பயன்? அதைவிட முக்கியமாக இதனால் ஏற்படக்கூடிய விபரீதங்கள் என்ன? இப்படி பல கேள்விகள் எழலாம்.

பிலிப் வாங் எனும் மென்பொருள் வல்லுனர் தான் இந்த தளத்தை உருவாக்கியிருக்கிறார். தளம் அவருடையதே தவிர, அதில் செயல்படும் தொழில்நுட்பம் அவருடையது அல்ல. அந்த தொழில்நுட்பம் ’என்விடியா’ (Nvidia) எனும் சிப் தயாரிப்பு நிறுவனத்தினுடையது. ’கான்’ என சுருக்கமாக குறிப்பிடப்படும் ஜெனரேட்டிவ் அட்வர்சரியல் நெட்வொர்க் எனும் இயந்திர கற்றல் முறையை ( மெஷின் லேர்னிங்) அடிப்படையாக கொண்டு கம்ப்யூட்டர் புரோகிராம் ஒன்று, தானே பிரம்மாவாகி மனித முகங்களை உருவாக்கித்தள்ளுகிறது.

இந்த ’கான்’ தொழில்நுட்பத்தில் விஷயமே இருக்கிறது. இந்த புரோகிராம் கொஞ்சம் புத்திசாலித்தனமானது. அதாவது தகவல்களை சமர்பித்தால் அவற்றை அடிப்படையாக கொண்டு தானாக கற்றுக்கொள்ளும் திறன் படைத்தது இது. ஆனால் இந்த புரோகிராமைப்பொருத்தவரை தகவல்கள் என்பது காட்சிரீதியானது. ஆம், மனித முகங்களை பாரத்து பார்த்து கற்றுக்கொண்டு அவற்றை வைத்துக்கொண்டு புதிய முகங்களை இது உருவாக்கித்தருகிறது.

பொதுவாக, செயற்கை நுண்ணறிவால் சாத்தியமாக கூடிய விஷயங்கள் பற்றி பரபரப்பாக பேசப்பட்டு வந்தாலும், மனித ஆற்றலோடு ஒப்பிடும் போது அவை மங்கி நிற்கும் பல அம்சங்கள் இருக்கின்றன. கம்ப்யூட்டருக்கும், அதில் இயங்கும் புரோகிராம்களுக்கும் தகவல்களை தின்னக்கொடுத்து, அவற்றை பயன்படுத்துவதற்கான குறிப்புகளையும் வழங்கினால், அவை மனிதர்கள் செய்யக்கூடிய பலவற்றை செய்து காண்பிக்கும். இதே முறையில் கம்ப்யூட்டர் புரோகிராம் கொண்டு, செயற்கையான மனித முகங்களை உருவாக்கலாம் தான். ஆனால், என்ன பிரச்சனை எனில், இவை செயற்கை என்பது அப்படமாக தெரிந்துவிடும். என்ன இருந்தாலும் , படைப்பாற்றலில் இன்னமும் கம்ப்யூட்டர்கள் மனிதர்களுக்கு நிகராக வர முடியவில்லை.

இந்த எண்ணத்தை தகர்க்கும் முயற்சிகளில் ஒன்றாக தான், கான் அல்கோரிதம் முறை அமைகிறது. ஏனெனில், இது தனக்குத்தானே சோதனை வைத்துக்கொண்டு, அதில் தேர்ச்சி பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது தான். இந்த முறை மனித முகங்கள் உருவாக்க எப்படி செயல்படுகிறது? என கொஞ்சம் விரிவாக பார்க்கலாம்.

வழக்கமான செயற்கை நுண்ணறிவு அல்கோரிதம்கள் போல் அல்லாமல், கான் முறை, இரண்டு பகுதிகளை கொண்டது. ஒரு பகுதி மனித முகத்தை உருவாக்கும். ஆனால் இந்த முகம் உடனே வெளியிடப்படாது. அதில் இருக்கும் இன்னொரு பகுதி இந்த முகத்தை பரிசோதித்து அது நிஜத்தன்மையுடன் இருக்கிறதா? என ஆராய்ந்து சொல்லும். முகம் பொய்யாக இருக்கிறது என இந்த பகுதி தீர்ப்பளித்தால், அல்கோரிதம் மீண்டும் தன்னை திருத்திக்கொண்டு அந்த முகத்தை முதலில் இருந்து உருவாக்கும். சரி பார்க்கும் அல்கோரிதம் எப்போது பச்சைக்கொடி காட்டுகிறதோ அப்போது முகம் வெளியிடப்படும்.

இப்படி அல்கோரிதமே இரண்டாக பிரிந்து, செயற்கை முகங்களின் நிஜத்தன்மையை சோதித்துப்பார்த்து தன்னை செப்பனிட்டுக்கொண்டு, முகங்களை உருவாக்குவதால் தான் அவை நிஜ மனிதர்கள் போலவே இருக்கின்றன. இப்படி தான் என்விடியா சிப் கம்பெனியின் அல்கோரிதம் புதிய மனித உருவங்களை உருவாக்கும் திறன் பெற்றிருக்கிறது. இந்த முகங்களை உருவி அளிக்கும் இணையதளத்தை தான் மென்பொருள் வல்லுனர் பிலிப் வாங் அமைத்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

இதனால் ஏற்படக்கூடிய பலன்களையும், வில்லங்களையும் பார்ப்பதற்கு முன், இயான் குட்பெலோ என்பவரை பற்றி தெரிந்து கொண்டுவிடலாம். கூகுள் வல்லுனரான குட்பெலோ தான் உண்மையில், கான் தொழில்நுட்பத்தை உருவாக்கிய பிரம்மா. இவரது நுட்பத்தை அடிப்படையாக கொண்டு என்விடியா இதை மேலும் மேம்படுத்தியிருக்கிறது. அதோடு இதை ஓபன் சோர்ஸ் அடிப்படையில் பகிர்ந்து கொள்ளவும் செய்திருக்கிறது. அதை வைத்துக்கொண்டு தான் வாங், இல்லாத மனிதர்கள் தளத்தை அமைத்திருக்கிறார்.

இன்னொரு முக்கிய விஷயம், மனித முகங்கள் மட்டும் அல்ல, பொதுவாக எதை வேண்டுமானாலும் உருவாக்க இந்த நுட்பத்தை பயன்படுத்தலாம். ஏற்கனவே இந்த முறையில் பூனைகள், அனிமேஷன்களை எல்லாம் உருவாக்கி கொண்டிருக்கின்றனர்.

ஏ.ஐ உருவாக்கித்தரும் மனித உருவங்களை விண்ணப்பங்களில் ஓட்ட எல்லாம் பயன்படுத்த முடியாது என்றாலும், இணைய உலகில் புதுமையான முறையில் பயன்படுத்தலாம் என்கின்றனர். இவற்றை கொண்டு மெய் நிகர் உலகத்தை உருவாக்கலாம். இந்த வகை படங்களை கொண்டு புதிய கலைப்படைப்புகளை உருவாக்கும் போக்கும் தலையெடுத்துள்ளது.

ஆனால் அதே நேரத்தில் இவை வில்லங்கமாக பயன்படுத்தப்படும் வாய்ப்பும் இருக்கிறது. இவற்றால் என்ன எல்லாம் விபரீதம் ஏற்படலாம் என்பதை இப்போது யூகிப்பது சிக்கலாக இருக்கிறது. ஆனால் செயற்கை நுண்ணறிவு திறம் மேம்பட்டு வரும் நிலையில் எதிர்கால சாத்தியங்கள், மற்றும் வில்லங்களுக்கான சாம்பிளாக இது அமைகிறது.

நிற்க, இதே போல அண்மையில் ஓபன் ஏஐ எனும் ஆய்வுக்குழு ஒன்று, மனிதர்கள் போலவே எழுதக்கூடிய செயற்கை எழுத்தாளரை உருவாக்கியதாக ஒரு செய்தி தெரிவிக்கிறது. ஆனால் இதனால் ஏற்படக்கூடிய வில்லங்கம் கருதி, இந்த நுட்பம் இன்னமும் பொதுவெளிக்கு வரவில்லை.

பிகு 1: இந்த செயற்கை நுண்ணறிவு நுட்பம் பற்றி இன்னும் அறிய விருப்பமா, இந்த கட்டுரையை படித்துப்பாருங்கள்: https://thenextweb.com/artificial-intelligence/2018/07/03/a-beginners-guide-to-ai-neural-networks/

பிகு 2: டிவிட்டரில் # ThispersondoesnoAtexist எனும் ஹாஷ்டேகில் பகிரப்படும் படங்களை பார்த்தால் செயற்கை மனிதர்களின் வியக்க வைக்கும் தோற்றங்கள் பார்க்கலாம். ஒரு சில படங்கள் போலியாக இருப்பதற்காக கழுவி ஊற்றப்படுவதையும் பார்க்கலாம்.

உங்கள் ஏஐ அறிவை சோதிக்கும் இணையதளம்!

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.