சாட்ஜிபிடியை கொண்டு சிறப்பாக தேடுவது எப்படி?

இணையத்தில் தேடுவது என்றால் கூகுளில் தேடுவது மட்டும் என பழகியவர்களுக்கு, சாட்ஜிபிடியில் தேடுவதும் எளிதாகவே இருக்கும். சொல்லப்போனால், கூகுளில் தேடுவதை விட, சாட்ஜிபிடியிடம் கேள்விகள் கேட்டு நேரடி பதில் பெறுவது இன்னும் எளிதானது என நினைக்கலாம்.

ஆனால், இணைய தேடல் என்பது கூகுளில் தேடுவது மட்டும் அல்ல: இணைய மேற்பரப்பில் கொட்டிக்கிடக்கும் தகவல்களை கடந்து, மறைந்திருக்க கூடிய தகவல்களை தேடி எடுக்க வேண்டும் எனில் வேறு பல வழிகளை அறிந்திருக்க வேண்டும்.

உதாரணமாக, கூகுள் வாயிலாக மொத்த இணையத்தில் தேடுவதற்கு பதிலாக, குறிப்பிட்ட இணையதளத்தில் மட்டும் தேடிப்பார்த்தால், மேற்பரப்பில் கிடைக்காத பல பயனுள்ள தகவல்கள் கிடைக்கலாம். ( குறிப்பிட்ட இணையதளங்களில் தேடவும் பெரும்பாலும் கூகுள் நுட்பமே பயன்படுத்தப்படுவதை மீறி இந்த உத்தி பயன் மிகுந்தது).

இந்த உத்தி பயனளிக்க பயனாளிகள் தங்களுக்கு ஆர்வம் உள்ள துறைகளில் தன்னளவில் சிறந்த தளங்களை அறிந்திருக்க வேண்டும். அதைவிட முக்கியமாக அந்த தளம், பழைய பக்கங்களின் ஆவண காப்பகம் கொண்டிருக்க வேண்டும். அப்படி இருந்தால் அந்த தளத்தில் தேடிப்பார்ப்பது பயனுள்ளதாக இருக்கும்.

உதாரணத்திற்கு, அமெரிக்க நூலக சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் அமெரிக்கன் பைல்ரரீஸ் மேகசைன் (https://americanlibrariesmagazine.org/) தளத்தை எடுத்துக்கொள்வோம். நூலகத்துறையினர் நன்கு அறிந்திருக்க கூடிய இந்த தளத்தில், அமெரிக்க நூலகங்கள் இதழின் கட்டுரைகளை வாசிக்கலாம். நூலக போக்கு, நுட்பங்களை தெரிந்து கொள்ள உதவும் இதன் கட்டுரைகள் பொது வாசிப்பிற்கும் உரியவை தான்.

இந்த தளத்தில் பழைய இதழ்களை அணுகலாம், என்பதோடு, அதன் இன்னொரு சிறப்பம்சமாக , நூலக இணைப்புகள் பகுதியை குறிப்பிடலாம். நூலகம் சார்ந்த முக்கிய போக்குகளை சுட்டிக்காட்டும் நூலகம் சார்ந்த பிற இணைப்புகள் வாயிலாக அணுகலாம்.

இந்த இணைப்பு பகுதியில் தேடிப்பார்க்கும் வசதியும் இருக்கிறது. இதில் தேடிப்பார்த்தால், நூலகத்துறை சார்ந்து கடந்த காலங்களில் பகிரப்பட்ட இணைப்புகளில் இருந்து பயனுள்ள தகவல்களை கண்டறியலாம். கூகுள் தேடலில் கண்ணில் படாமல் போக கூடிய பல இணைப்புகளை இந்த தேடலில் பெறலாம்.

இணையதளங்கள் (websites ) என தேடி இதன் பழைய இணைப்புகளை பொறுமையாக வலம் வந்தால், பல்வேறு பயனுள்ள தளங்களை அறிய முடிகிறது. உணவு வரலாற்றின் மைல்கல்லாக அறியப்படும் புட்டைம்லைன் தளம் பற்றி இதன் இணைப்பு வாயிலாகவே அறிய முடிந்தது. 

சாட்ஜிபிடியை தேடலுக்கு பயன்படுத்தும் போது, அதன் பதில்கள் சரியாக இருப்பதாக தோன்றினாலும், அவை பெரும்பாலும் தட்டையாக, மேலோட்டமாக இருப்பதை உணரலாம். என்னதான் பிராம்ட்கள் கொண்டு பட்டைத்தீட்டினாலும், தட்டையான தன்மை தான் பளபளக்கும்.

தனித்தேடல் உத்தியை சாட்ஜிபிடியிலும் முயன்று பார்க்கலாம் என, அமெரிக்க நூலக இதழ் தளத்தின் ஆவண காப்பக பக்கங்களில் இருந்து பயனுள்ள இணையதளங்களை பட்டியலிடுமாறு கேட்ட பரிசோதித்துப்பார்த்த போது, சாட்ஜிபிடி பழைய இதழ் இணைப்புகளையும், போக்குகளுக்கான பொதுவான இணைப்புகளையும் முன்வைத்தது. ஒரு பயனுள்ள இணையதளத்தை கூட அதனால் குறிப்பிட முடியவில்லை. ஒரே ஒரு இணையதளத்தையேனும் பட்டியலிடுமாறு கேட்ட போதும் பெரிய முன்னேற்றமில்லை.

ஆக, சாட்ஜிபிடியில் தேடினால் போதும் என நினைத்துக்கொண்டிருந்தால் அதை மாற்றிக்கொள்ளுங்கள். உங்களுக்குத்தேவையான தகவல்கள் மறைந்திருக்கும் இடங்களை சாட்ஜிபிடியால் பெரும்பாலும் கண்டுபிடிக்க முடியாது. பிரெளக்சிட்டி கொஞ்சம் மேம்பட்டதாக தோன்றினாலும், அதனாலும் பெரிய அளவில் இணையதளங்களை பட்டியலிட முடியவில்லை.

எனவே தான் நான் சாட்ஜிபிடி உள்ளிட்ட ஏஐ சேவைகளை நம்புவதும் இல்லை, பயன்படுத்துவதுமில்லை.

உங்கள் பார்வைக்காக அமெரிக்க நூலகங்கள் தளத்தின் நூலக இணைப்புகள் பழைய பக்கங்கள்: https://americanlibrariesmagazine.org/latest-links/page/284/

  •  

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *