எழுத்தாளர் ஜெயமோகனுக்கும், அமெரிக்க கம்ப்யூட்டர் அறிஞரான காஸ்மோ ஷாலிசிக்கும் (Cosma Shalizi) எந்த தொடரும் இல்லை. இருந்த போதிலும், ஷாலிசி தொடர்பான ரெட்டிட் கேள்வி பதில் சரட்டை படித்த போது, ஜெயமோகனை மேற்கோள் காட்டத்தோன்றியது.
காஸ்மா ஷாலிசியை இணைய தேடலில் தான் தற்செயலாக தெரிந்து கொண்டேன். புள்ளியியல் பேராசிரியரான ஷாலிசி, தரவுகள் அலசல் தொடர்பான துறைகளில் வல்லுனராக இருக்கிறார். இத்துறைகளில் தனக்குள்ள புரிதலை தொடர்ந்து எழுதியும் வருகிறார்.
ஷாலிசியின் எழுத்துக்கள் அடர்த்தியானவை என்றாலும், அவரது இணையதளம் லேசானது. இந்த தளம் பற்றி தனியே எழுத வேண்டும் என்று குறித்து வைத்திருப்பதால், மீண்டும் ஷாலிசி பற்றி இணையத்தில் தேடிய போது, தொடர்புடைய ரெட்டிட் பதிவு ஒன்று கண்ணில் பட்டது.
காஸ்மா ஷாலிசியின் முன்னணி பத்து பதிவுகள் என்ன? எனும் தலைப்பிலான அந்த பதிவு கவனத்தை ஈர்க்கவே, உள்ளே சென்று பார்த்தால், பதில்களும் சுவாரஸ்யமாகவே இருந்தன.
இந்த பதிவை எழுதியவர், காஸ்மா ஷாலிசியையும், அவரது வலைப்பதிவையும் அண்மையில் தான் தெரிந்து கொண்டேன். அவை வியக்க வைக்கின்றன. ஆனால் தகவல்கள் அதிகம் இருப்பதால், கட்டுரைகளிடையே சரியாக உலாவ முடியவில்லை. அவரை நன்கறிந்தவர்கள் யாரேனும், முன்னணி பதிவுகள் அல்லது கட்டுரைகளை பரிந்துரைக்க முடியுமா? என கேட்டிருந்தார்.
இத்தகைய திறந்த மனம் கொண்ட கேள்விகள் தான் ரெட்டிட்டின் சிறப்பு. இந்த கேள்விக்கான பதில்கள் பெரியதொடு விவாத சரடாக வளரவில்லை என்றாலும், இருக்கும் ஒரு சில பதில்களே ரெட்டிட் விவாத சரட்டிற்கான எளிய உதாரணமாக அமைகின்றன.
முதல் பின்னூட்டம் கேள்விக்கான பதிலாக அமையாமல், பலருக்கும் அறிமுகம் இல்லாதவர் பற்றி குறிப்பிடும் போது, தொடர்புடைய இணைப்பை வழங்குவதே முக்கியம் என்று சுட்டிக்காட்டி, விடுபட்டிருந்த ஷாலிசியின் இணையதள இணைப்பை கொண்டிருந்தது.
கேள்வி கேட்ட பயனாளி, உடனே இந்த கருத்தை ஏற்றுக்கொண்டு, இப்போது இணைப்பை சேர்த்து விட்டேன் என பதில் அளித்திருந்தார்.
முதல் பின்னூட்டம் லேசாக இடித்துரைப்பது போல இருந்தாலும், அதில் சுட்டிக்காட்டப்பட்டிருந்ததை கேள்வி கேட்டவர் சரி என ஏற்றுக்கொண்டிருந்தது ரெட்டிட் நாகரீகம்.
அடுத்த பின்னூட்டத்தில், கேட்ட கேள்விக்கான பதில் இடம்பெற்றிருந்தது. பதில் அளித்தவர், ஒராண்டுக்கு மேலாக ஷாலிசி தளத்தை பார்வையிடவில்லை என குறிப்பிட்டு, முன்னணி பத்து எனும் கோரிக்கையை தவிர்த்துவிட்டு எனக்கு பிடித்த கட்டுரை இணைப்புகளை அளிக்கிறேன் என ஷாலிசியின் சிறந்த பதிவுகள் சிலவற்றை பட்டியலிட்டிருந்தார்.
புத்தக விமர்சனங்கள், குறிப்புகள் என அந்த பட்டியல் அமைந்திருந்தது.
இதற்கு சற்றே குதற்கமாக ஒருவர் பதில் அளித்து, மன்னிக்கவும், இவை எல்லாம் வெறும் புத்தக பட்டியலாக இருக்கிறது, மூல எழுத்து எதுவும் இல்லை என்பது போல தெரிவித்திருந்தவர். பட்டியலை பரிந்துரைத்தவர் இதற்கு என்ன பதில் சொல்வது எனத்தெரியவில்லை என குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், கேள்வி கேட்டவர், பட்டியல் பரிந்துரைக்கு நன்றி என தெரிவித்துவிட்டு, புத்தக விமர்சனங்கள், குறிப்புகள் தவிர பதிவுகள் ஏதேனும் உண்டா என கேட்டிருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் வேறு சில ரெட்டிட் உறுப்பினர்கள், தங்களுக்கு பிடித்தமான ஷாலிசியின் பதிவுகள் சிலவற்றை சுட்டிக்காட்டியிருந்தனர்.
ஸ்டீபன் வால்பிராம் புத்தகத்திற்கு அவர் எழுதிய கடுமையான விமர்சனத்தை படித்துப்பார்க்கவும் என்றும் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.
ஷாலிசியை எனும் மேதையை தற்செயலாக கண்டறிந்த ஒருவர், அவரது வலைப்பதிவின் அடர்த்தியான தன்மையை எதிர்கொள்ள வழி கேட்ட போது, ஏற்கனவே அவரை அறிந்தவர்கள் இதற்கு அளித்த பதில்கள் அடங்கிய இந்த விவாத சரடு, ரெட்டிட் சமூகத்தின் விவாத தன்மையை நன்கு உணர்த்துகிறது.
பொதுவாக சமூக ஊடக பரப்பில் பார்க்க கூடிய, வெட்டுக்குத்து, வம்பு வழக்கு பாணியிலான, வீண் வாதம் பாணியில் அல்லாமல், இந்த கேள்வியை இங்கு கேட்டுப்பார்க்கலாம் பதில் கிடைக்கும் எனும் நம்பிக்கையையும், அதை நிறைவேற்றும் வகையிலான பதில்களையும் கொண்டிருப்பதை உணரலாம். அப்படியே ஷாலிசி எனும் மேதை பற்றி மேலும் அறிந்து கொள்ளும் ஆர்வத்தையும் தூண்டுகின்றன.
பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள இணைப்புகளில், ’புத்திசாலித்தனம் என்றால் என்ன?… ‘ எனும் தலைப்பிலான பதிவை படிக்கும் போது, மனித அறிவாற்றலை மதிப்பிடும் ஐகியூ முறை தொடர்பாக பிளைன் எனும் மேதை எழுதிய புத்தகம் தொடர்பான ஆழமான விமர்சன பார்வையை கொண்டிருப்பதை உணர முடிந்தது. செயற்கை நுண்ணறிவு யுகத்தில், புத்திசாலித்தனம் என்பது தொடர்பான வரையறை அலசலுக்கும், ஆய்வுக்கும் உள்ளாகி வரும் சூழலில், இந்த பதிவு முக்கியமாக அமைகிறது.
ஷாலிசி பற்றி மேலும் படித்துப்பார்க்கலாம்.
ஷாலிசி தொடர்பான தேடலுக்கு நடுவே இந்த ரெட்டிட் உரையாடல் சுவாரஸ்யமாகவும், பயனுள்ளதாகவும் இருக்கிறது. ஷாலிசியெல்லாம் ஒரு மேதையா என்பது போல் எல்லாம் எவரும் கருத்து தெரிவிக்காமல், அர்த்தமுள்ள உரையாடலாக இது அமைந்திருக்கிறது. இதே போன்ற விவாதங்களும், உரையாடல்களும் தான் நமக்கும் தேவை.
நிற்க, இதில் ஜெயமோகன் எங்கிருந்து வந்தார் என கேட்கிறீர்களா? ஷாலிசி பற்றி கேட்டது போல, இங்கும் யாரேனும் ஒரு வாசகர் ஜெயமோகன் வலைப்பதிவை பார்த்து திகைத்துப்போய் வழிகாட்டதலுக்காக, ஜெயமோகனை எளிதில் அணுக உதவும் அவரது பத்து முன்னணி பதிவுகளை பரிந்துரைக்குமாறு கேட்டால் எப்படி இருக்கும்? அவரது அபிமானிகள் இதற்கு விதவிதமான பத்து பதிவுகளை பட்டியலிடலாம். ஏன் எதிர்பார்ப்பாளர்களும் கூட, ஜெயமோகன் யார் என உணர்த்தும் பத்து பதிவுகளை பட்டியலிடலாம்.
ரெட்டிட் விவாத சரடு: https://www.reddit.com/r/slatestarcodex/comments/18hk1wj/what_are_cosma_shalizis_top_ten_blog_posts/
–