சமூக ஊடகம் எனும் வரையறைக்குள் வரும் சேவைகள் எப்போதும் இதே பெயரில் அறியப்படவில்லை. சமூக ஊடகம் எனும் சொல் பரவலாக பயன்பாட்டிற்கு வருவதற்கு முன், சமூதாய தளங்கள் (community sites ) என இவை குறிப்பிடப்பட்டுள்ளன. பெயர் என்னவாக இருந்தாலும், சமூக ஊடக சேவைகளின் ஆதார குணங்களில் ஒன்று பயனாளிகளுக்கு இடையிலான உரையாடலை சாத்தியமாக்குவது. இதற்கான அருமையான உதாரணமாக, ஏபிஐ (API) என்றால் என்ன என கேட்கும் இந்த பதிவு அமைகிறது.
தமிழில், ’செயலி நிராலாக்க இடைமுகம்’ என சொல்லப்படும் ஏபிஐ புரோகிராமர்களுக்கும், டெவலப்பர்களுக்கும் பரிட்சயமான தொழில்நுட்ப சொற்றொடர் சுருக்கம். பெரும்பாலும் பயனர்கள் இதன் பொருளை அறிய வேண்டியதில்லை என்றாலும், இதன் தாக்கத்தை இணையம் முழுவதும் பயனாளிகள் தங்களை அறியாமலே எதிர்கொள்கின்றனர். அதிலும் குறிப்பாக சமூக ஊடக வரலாற்றில் ஏபிஐ –க்கு முக்கிய பங்கு இருக்கிறது.
புத்தாயிரமண்டின் பிற்பகுதியில் சமூக ஊடக சேவைகள் வெகுமக்கள் மத்தியில் வேகமாக பயன்பாட்டிற்கு வந்ததற்கு ஏபிஐ துணையோடு உருவாக்கப்பட்ட துணை சேவைகள் முக்கிய காரணம். முன்னணி சமூக ஊடக சேவைகள் பரவலாக அணுக வழிசெய்த ஏரளமான துணை சேவைகளுக்கு ஏபிஐ வசதி முக்கிய காரணம். மற்ற எந்த சேவைகளையும் விட பேஸ்புக்கிற்கும், டிவிட்டருக்கும் இது பொருந்தும். ஏபிஐ வசதியை முதலில் அறிமுகம் செய்த சேவைகளில் ஒன்றான முன்னோடி சமூக ஊடக சேவையான பிளிக்கர் (flickr ) பேஸ்புக் அலையால் பின்னுக்குத்தள்ளப்பட்டதை பெரும் முரண் என்று தான் சொல்ல வேண்டும்.
ஏபிஐ என்றால் என்ன என்று பார்ப்பதற்கு முன், இதே கேள்விக்கு பதில் கோரும் வகையில் ’சிக்னல்விநாய்ஸ்’ (signalvnoise.com) வலைப்பதிவில் அமைந்த பழைய விவாதம் ஒன்றை பார்ப்பது பொருத்தமாக இருக்கும். இந்த பதிவு ஏபிஐ க்கு மிக அழகான விளக்கங்களை அளிப்பதோடு, இணைய உரையாடலுக்கான அருமையான உதாரணமாகவும் அமைகிறது.
தெளிவுபடுத்திக்கொள்ளுதலில் ஒரு பயிற்சி: API, எனும் தலைப்பிலான இப்பதிவில், ஏபிஐ என்றால் என்ன என்பதை பத்து அல்லது குறைந்த சொற்களில் விளக்கவும் என பதிவர் கேட்டிருந்தார். ஏபிஐக்கான விரிவாக்கத்தையும் அடைப்புக்குறியில் குறிப்பிட்டிருந்ததால், இந்த சொற்றொடரை புரிய வைப்பதற்கான புதுமையான, சுவாரஸ்யமான விளக்கங்களை எதிர்பார்த்திருந்தார் என புரிந்து கொள்ளலாம்.
வலைப்பதிவின் வாசகர்கள் அவரை ஏமாற்றவில்லை. பத்து வார்த்தை எனும் வரம்பை ஏற்றுக்கொண்டு விதவிதமான விளக்கங்களை தெரிவித்திருந்தனர்.
’தனி கம்ப்யூட்டர்கள் மற்றும் புரோகிராம்கள் தொடர்பு கொள்ள வழி செய்வது’ என ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.
”மற்ற புரோகிராம்களுக்கு பயன்படக்கூடிய ஒரு சில அமைப்பு முறை” என இன்னொருவர் கூறியிருந்தார்.
”டெவலப்பர்கள், தரவுகள், மென்பொருளை அணுகி, தொடர்பு கொண்டு, விரிவாக்கும் வழிமுறை” என இன்னொருவர் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, இது எதிர்பார்த்தது தான் என தெரிவித்து, “ஏபிஐ- இயந்திரங்களுக்கான சர்வதேச மொழி” என குறிப்பிட்டிருந்தார்.
இப்படி மொத்தம் 82 பதில்கள் இந்த பதிவுக்கான பின்னுட்டமாக ஏபிஐ-க்கு விதவிதமான விளக்கம் அளித்திருந்தன.
ஏபிஐ குறித்து அறியாதவர்களுக்கு கூட, இந்த மென்பொருள் பரிமாற்ற நுட்பம் குறித்து ஓரளவு புரிய வைக்க கூடிய அளவுக்கு இவற்றில் பெரும்பாலான விளக்கங்கள் அமைந்திருந்தன. அதே நேரத்தில் ஏபிஐ குறித்து தொழில்நுட்ப நோக்கில் அறிந்திருந்தவர்கள் இந்த விளக்கங்களை பார்த்து, பரவாயில்லையே புதுமையாக யோசித்து பின்னி எடுத்துள்ளனரே என்று வியந்திருப்பார்கள். அப்படியே தங்கள் பங்கிற்கு விளக்கம் அளிக்கவும் முற்பட்டிருக்கலாம்.
பின்னூட்டங்கள் இதை கச்சிதமாக உணர்த்துவதை உணரலாம்.
”மற்ற புரோகிராம்களை நுழைய வைப்பதற்கான சாக்கெட் அமைப்பு” என ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.
“உங்கள் புரோகிராம் எப்படி என் புரோகிராமுடன் செயல்படலாம் என்பதற்கான குறிப்பு” என தெரிவித்திருந்தவர், பாருங்கள் சரியாக பத்து சொற்கள் என்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்.
”இரண்டு கம்ப்யூட்டர்கள் பரஸ்பரம் பேசிக்கொள்வதற்கான ஒரு வழி ( எக்.எம்.எல்) என இன்னொருவர் கூறியிருந்தார்.
”ஒரு புரோகிராம் மற்றவர்களுக்கு அளிக்கும் கட்டளைகள் மற்றும் பதில்களின் அகராதி” என்றும் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.
”ஒரு செயலியின் செயல்பாட்டு அம்சங்களை அணுகுவதற்கான வழி” என்று இன்னொரு விளக்கம் அமைந்திருந்தது.
ஒவ்வொரு விளக்கமும் ஒரு விதத்தில் அமைந்திருந்தாலும், எல்லாமே ஏதோ ஒரு விதத்தில் ஏபிஐ என்றால் என்ன என்பதை சுட்டிக்காட்டின. இந்த விளக்கங்கள் ஏபிஐ என்பது எளித கருத்தாக்கமாக விளங்கும் அதே நேரத்தில் இன்னும் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டியது என்பதையும் உணர்த்துகின்றன.
இந்த பதிவையும், பதில்களையும் இப்போது படிக்கும் போதும் உற்சாகமாக இருக்கிறது. ஒரு தொழில்நுட்ப கேள்விக்கு எத்தனை துடிப்பான பதில்கள் என வியப்பை உண்டாகிறது. 2005 ல் இந்த பதிவு வெளியான போது நிகழ் நேரத்தில் தொடர்ச்சியாக இந்த பதில்களை வாசிப்பது எத்தகைய அனுபவமாக இருந்திருக்கும்.
இந்த வலைப்பதிவை நடத்தியவர் தொழில்நுட்ப ஆற்றலுக்காக அறியப்பட்டவர் என்பதால் அவரை ஆர்வத்தோடு பின் தொடர்ந்தவர்கள், மிகுந்த ஈடுபாட்டோடு ஏபிஐ தொடர்பான கேள்விக்கு பதில் அளித்திருந்தனர். இந்த பங்கேற்பு தன்மையும், உரையாடலும் தான் வலைப்பதிவுகள் உள்ளிட்ட சமூக ஊடகத்தின் ஆதார அம்சங்களில் ஒன்று. சமூக ஊடகத்தை பயன்மிக்கதாகவும், ஈடுபாடு கொள்ள வைப்பதும் தான்.
இந்த பதிவின் உரையாடலில் கேலியோ, வீண் விவாதமோ இல்லை என்பதையும் கவனிக்க வேண்டும். ஒருவர் மட்டும், இத்தகைய சிக்கலான கருப்பொருளை பத்து வார்த்தைக்குள் விவாதிக்க முடியாது, இந்த கேள்வி தவறு என மிகவும் பொறுப்பாக ஒரு பத்தி எழுதியிருந்தார்.
பி.கு: இப்போது செயல்பாட்டில் இல்லை என்றாலும் இந்த வலைப்பதிவு (signalvnoise.com/)முன்னோடிதன்மை கொண்டது. இது பற்றி தனியே பார்க்கலாம்.
முழு உரையாடலையும் வாசிக்க: https://signalvnoise.com/archives2/an_exercise_in_clarity_api#c12633
–