#இணைய பரண் – அமேசானின் போட்டி விக்கிபீடியா

இ-காமர்ஸ் பேரரசாக வளர்ந்திருக்கும் அமேசான், அமேபீடியா – amapedia, எனும் பெயரில் ஒரு விக்கி தளத்தை கொண்டிருந்தது என்பது தெரியுமா? நுகர்வோர் பொருட்களுக்கான தகவல்களை வழங்கும் நோக்கத்துடன் அமேசான் இந்த தளத்தை அறிமுகம் செய்தது. பயனாளிகள் கூட்டு முயற்சியால் பொருட்களுக்கான விக்கிபீடியாவாக உருவாக வேண்டும் எனும் திட்டத்தோடு அமேசான் இந்த தளத்தை அமைத்தது. பயனாளிகள் தங்கள் அபிமான பொருட்கள் தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கான சமூகம் என அமேபீடியா குறிப்பிடப்பட்டிருந்தது. பொருட்களை வகைப்படுத்தவும், தேடவும், ஒப்பிட்டு பார்க்கவும் வழி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அமேசான் தளத்தின் பொருட்கள் விக்கி அம்சத்தின் அடுத்த தலைமுறை சேவை இது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

2007 ல் அறிமுகமான இந்த தளம், அதிகம் கவனத்தை ஈர்க்காமல் அடுத்த சில ஆண்டுகளில் மூடப்பட்டு விட்டது. அமேபீடியாவின் பழைய வடிவத்தை (http://web.archive.org/web/20070202023003/http://amapedia.amazon.com/) இணைய காப்பகத்தில் பார்த்த போது, பெரும்பாலான தலைப்புகள் வெறுமையாக இருந்தாலும், இந்த சேவை முழுவீச்சுடன் உருவாகியிருந்தால் எப்படி இருந்திருக்கும் எனும் வியப்பை ஏற்படுத்துகிறது.

அமேசான் ஏன் இந்த தளத்தை கைவிட்டது எனத்தெரியவில்லை. இ-காமர்ஸ் பிரிவில் ஆதிக்கம் செலுத்தும் அமேசானின் வர்த்தக நோக்கத்திற்கு, பயனர்கள் பங்களிப்போடு உருவாகும் பொருட்களுக்கான தகவல் களஞ்சியம் ஏற்பில்லாமல் இருந்திருக்கலாம்.

அதோடு, விக்கிபீடியா போன்ற சேவையை நடத்துவது அத்தனை எளிதல்ல என்பதையும் இது உணர்த்துகிறது.

நிற்க, ஏறக்குறைய இதே காலத்தில் பிராடக்ட்விக்கி (http://web.archive.org/web/20070218131123/http://www.productwiki.com/home/article/about_productwiki.html ) எனும் பெயரில் இன்னொரு பொருட்கள் விக்கி தளமும் செயல்பட்டிருக்கிறது.

அமேபீடியாவை விட, இந்த தளம் தகவல் அடர்த்தியுடனும், கூடுதல் அம்சங்களுடனும் இருந்திருக்கிறது. இந்த தளத்தில் பயனாளிகள் புதிய பொருட்களை சேர்க்கவும், ஏற்கனவே உள்ள பொருட்கள் பிரிவில் புதிய தகவல்களை எளிதாக சேர்க்கவும் வழி செய்யப்பட்டிருந்தது. பயனாளிகள் பொருட்களை விரும்பலாம், வாங்க விருப்பம் தெரிவிக்கலாம், ஏற்கனவே வாங்கிவிட்டதாகவும் தெரிவிக்கலாம். அவற்றுக்கான ஐகான்களும் இருந்தன. பொருட்கள் தொடர்பான விவாத மோதலை தவிர்க்க, ஒரு பொருளின் சாதக, பாதக அம்சங்களை பட்டியலிட்டு சக உறுப்பினர்கள் வாக்களிக்கவும் வாய்ப்பு இருந்தது. பொருட்களை ஒப்பிட்டு பார்க்கும் வசதி, தொடர்புடைய பொருட்களை அறியும் வசதி ஆகியவையும் இருந்தன.

கனடாவின் ஓமர் இஸ்மாயில் என்பவர் தனது மனைவி மற்றும் இணை நிறுவனர் ஒருவருடன் துவக்கிய ஸ்டார்ட் அப் சார்பில் இந்த தளம் இயங்கியது. இதன் பழைய வடிவத்தை பார்க்கும் போது, அடடா இந்த தளம் தொடர்ந்து இயங்காமல் போனதே எனும் ஏக்கம் உண்டாகிறது.- http://web.archive.org/web/20070218131123/http://www.productwiki.com/home/article/about_productwiki.html

* இது அமேபீடியா தொடர்பான விக்கிபீடியா பக்கம்: https://en.wikipedia.org/wiki/Amapedia

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *