’பெர்ப்லக்சிட்டி’ உள்ளிட ஏஐ தேடியந்திரங்களுக்கு எல்லாம் ’ஆஸ்க் ஜீவ்ஸ்’ (Ask Jeeves ) தான் முன்னோடி. கூகுள் அறிமுகமாவதற்கு மூன்றாண்டுகளுக்கு முன் 1994 ல் அறிமுகமான ஆஸ்க்ஜீவஸ் தேடியந்திரம், இயற்கை மொழியில் கேள்விகள் கேட்டால் பதில் அளிக்கும் வகையில் அமைந்திருந்தது.
1990 களில், இவ்விதம் பயனாளிகள் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையிலான தேடல் முடிவுகளை அளிப்பது என்பது, பெரும் கனவு என்று தான் சொல்ல வேண்டும். ஆஸ்க்ஜீவ்ஸ் துணிந்து அதை மேற்கொண்டது.
அப்போதைய அதன் தொழில்நுட்பம் (என்.எல்.பி -Natural Language Processing ) இந்த கனவுக்கு போதுமானதாக இல்லை என்பதை மீறி, ஆஸ்க்ஜீவ்ஸ் தேடியந்திர வரலாற்றில் காலத்தை முந்தைய மைல்கல் என்பதயும் மறுப்பதற்கில்லை.
இப்போதைய ஏஐ தேடியந்திரங்களை இயக்கும் மொழி மாதிரி நுட்பத்தை தான் ஆஸ்க்ஜீவ்ஸ் 1990 களில் எதிர்பார்த்திருந்தது என்றும் சொல்லலாம். நிற்க, இந்த தொழில்நுட்ப போதாமையை மீறி, ஆஸ்க்ஜீவ்ஸ் தனது இலக்கை அடைய பின்பற்றிய நுட்பத்தையும் தெரிந்து கொள்வது சுவாரஸ்யமாக இருக்கும்.
1994 ல் ஆஸ்க்ஜீவ்ஸ் அறிமுகமான போது வெளியான வயர்டு இணைய இதழ் கட்டுரையில், ஆஸ்க்ஜீவ்ஸ் எப்படி இயற்கை மொழியில் பதில் அளிக்கும் சேவையை வழங்கியது என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆஸ்க்ஜீவ்ஸ் பொதுவாக கேட்கப்படும் கேள்விகளை எல்லாம் தொகுத்து ஒரு பட்டியலாக்கி நாலட்ஜ் பேஸ் எனும் அறிவுத்தொகுப்பை உருவாக்கியிருந்தது. 50 லட்சத்திற்கும் மேலான கேள்விகளுக்கான பதில்களை இந்த தொகுப்பு கொண்டிருந்தது. பயனாளிகள் கேள்விகளுக்கு ஏற்ப இந்த தொகுப்பில் இருந்து பதில் அளித்தது. பட்டியலுக்குள் அடங்காத கேள்வி எனில், குறிச்சொல்லுக்கு ஏற்ப தேடல் முடிவை வழங்கியது.
ஒருவிதத்தில், கேள்விகளுக்கான தொகுப்பை கொண்டு பதில் அளித்த நுட்பத்தில் இருந்து தான் இன்றைய மொழி மாதிரிகளும் உருவாகி வந்திருக்கின்றன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அதாவது மொழி மாதிரிகள் (Large language models (LLMs ) வானத்தில் இருந்து குதித்து விடவில்லை.
ஆஸ்க்ஜீவ்ஸ் பற்றிய வயர்டு கட்டுரை: https://www.wired.com/1997/06/jeeves-finds-the-way/