எவர் ஒருவரையும் நோக்கி ‘நீங்கள் நாயா?’ என கேட்பது அநாகரீகம் மட்டும் அல்ல அநியாயமும் தான். ஆனால், இணையத்தில் இதே கேள்வி கேட்பது பொருத்தமானது என்பது மட்டும் அல்ல, மிகவும் பொருள் பொதிந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா?
இணைய நாய் உணர்த்தும் இந்த அர்த்தத்தை உணர வேண்டும் என்றால், இணைய நாய் கார்ட்டூன் தொடர்பான விக்கிபீடியா கட்டுரை வழிகாட்டும். இந்த கார்ட்டூன் தொடர்புடைய ரெட்டிட் விவாத சரடு இதை இன்னும் அழகாக உணர்த்துகிறது.
நிற்க, இணைய நாய் கார்ட்டூன் தொடர்பாக தனிக் கட்டுரை எழுத உத்தேசித்திருக்கிறேன். தவிர ஏற்கனவே முந்தைய பதிவிலும், இந்த கார்ட்டூன் இடம்பெற்றுள்ளது. இணைய வரலாற்றை விளக்கும் முன்னோடி கார்ட்டூன் என்பதே முக்கிய காரணம்.
“இணையத்தில் நீங்கள் யார் என்பது யாருக்கும் தெரியாது” எனும் வாசகம் கொண்ட, கம்ப்யூட்டர் முன் அமர்ந்திருக்கும் நாய் இன்னொரு நாயிடம் சொல்வது போன்ற இந்த கார்ட்டூன், இணையத்தின் அதார அம்சங்களில் ஒன்றான அனாமதேய தன்மையை உணர்த்துகிறது. 1994 ல் நியூயார்க்கர் பத்திரிகையில் வெளியான பிறகு இந்த கார்ட்டூன் அது சுட்டிக்காட்டும் இணைய தன்மைக்காக எண்ணற்ற முறை மேற்கோள் காட்டப்பட்டு விவாதிக்கப்பட்டு, சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த 30 ஆண்டுகளில் இணையம் எத்தனையோ முன்னேறி, மாற்றம் அடைந்திருந்தாலும் இந்த கார்ட்டூன் பொருத்தமானதாகவே அமைகிறது.
இந்த கார்ட்டூனின் காலத்தை மீறிய தன்மையை பலவிதங்களில் உணரலாம் என்றாலும் இப்போதைக்கு தொடர்புடைய ரெட்டிட் பதிவை பார்க்கலாம்.
கார்ட்டூன் வாசகத்தை குறிப்பிட்டு, இந்த வாசகம் இணையத்தில் இன்னமும் பயன்பாட்டில் இருக்கிறதா? என கேட்கும் வகையில் இந்த பதிவு அமைந்துள்ளது.
இந்த பதிவுக்கான விவாத சரட்டின் முதல் பதிலில், இந்த கார்ட்டூனை ஊக்கமாக கொண்டு ஒரு நாடகம் நிகழ்த்தப்பட்டுள்ள தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிலுக்கான பதிலாக அமையும் அடுத்த பின்னூட்டம் தான் கவனத்தை ஈர்க்கிறது:
“கொஞ்சம் இருங்கள், நீங்கள் நாயா” (Hey, wait a minute. Are you a dog?) என்பதாக அந்த பின்னூட்டம் அமைகிறது.
“நீங்கள் நாய் இல்லையே’ என கேட்பதாகவும் புரிந்து கொள்ளலாம்.
இதன் தொடர்ச்சியாக வரும் அடுத்த பின்னூட்டல், ‘ யாருக்கும் தெரியாது” என்கிறது.
மூல கார்ட்டூன் உணர்த்தும் இணைய அனாமதேய தன்மை, நகைச்சுவை மிக்க இந்த பின்னூட்டங்களில் மீண்டும் சுட்டிக்காட்டப்படுவதை உணரலாம்.
இணையத்தில் உலாவும் போது, ஒருவரின் அடையாளம் மற்றவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை என்பதை, இணையத்தில் நீங்கள் நாய் என்பது யாருக்கும் தெரியாது எனும் நாய் பேசும் வாசகம் மூலம் உணர்த்தும் இந்த கார்ட்டூனின் பொருத்தம் பற்றிய விவாதத்தில், பதில் அளிக்கும் ஒருவர் , நீங்கள் நாயா? என கேட்பதும், அதற்கு இன்னொருவர் ”யாருக்கும் தெரியாது” என பதில் அளிப்பதும் கவனிக்கத்தக்கது.
தொடரும் இந்த விவாதத்தில் இன்னொருவர் ” இணையத்தின் கடந்த கால அனாமதேய தன்மையை நினைத்து பெருமூச்சு விடும் வகையில் கருத்து தெரிவித்திருக்கிறார். இணையத்தின் போக்கும், தன்மையையும் மாறிவிட்டது என்பதை உணர்த்தும் வகையில், அந்த இணைய நாய்க்கு இப்போது பேஸ்புக் மற்றும் ஸ்னேப்சாட் கணக்குகளும் இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
அதோடு, இணைய விளம்பரதாரர்களுக்கு மறுமுனையில் இருப்பது நாய் என்பதை அறிவார்கள் என்பது மட்டும் அல்ல, அதன் ஜாதகத்தையே அறிவார்கள் என்றும் குறிப்பிட்ட்டுள்ளார்.
இணையத்தில் அனாமதேய தன்மை பின்னுக்குத்தள்ளப்பட்டு, வர்த்தக நோக்கில் முன்னிறுத்தப்படும் தரவுகள் அறுவடை சார்ந்த கண்காணிப்பு போக்கை இந்த பின்னூட்டம் நகைச்சுவை இழையோட சுட்டிக்காட்டுகிறது.
இந்த ரெட்டிட் பதிவு 9 ஆண்டுகள் பழமையான நிலையிலும் பொருத்தமாக இருப்பது, 30 ஆண்டுக்கு பின்னும் இணைய நாய் கார்ட்டூன் பொருள் பொதிந்ததாக இருப்பதை உணர்த்துகிறது அல்லவா!
–