ஏஐ விவாதங்களில் முதலில் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சம்!

ஏஐ தொடர்பான வரையறைகளையும், விளக்கங்களையும் தொடர்ந்து ஆர்வத்தோடு படித்து வருகிறேன். ஏஐ தொடர்பாக பேசும் போது, இந்த நுட்பம் எதைக் குறிக்கிறது எனும் தெளிவு வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். ஏஐ என்பதை நாம் எப்படி புரிந்து கொள்கிறோம் என்பது முக்கியம்.

ஏஐ என்றால் என்ன? என்பதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒற்றை வரையறை என்று எதுவும் இல்லாதது என்பது மட்டும் அல்ல, பலவித வரையறைகளும் ஏஐ நுட்பத்தை பலவிதங்களில் புரிந்து கொள்ள வைப்பதாக இருப்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

அதே நேரத்தில் ஏஐ தொடர்பான விளக்கங்களிலும், அதன் சாத்தியங்களையு, பலன்களையும் மட்டும் பேசாமல், விமர்சனம், போதாமைகள், வர்த்தக நோக்கு, சார்பு உள்ளிட்ட அம்சங்களையும் மனதில் கொள்ள வேண்டும். அந்த வகையில், அண்மையில் படித்த இந்த விளக்கம், ஏஐ நுட்பத்திற்கான மிகச்சரியான விளங்களில் ஒன்றாக தோன்றுகிறது.

நந்தகுமார் எனும் மென்பொருள் வல்லுனர் எழுதிய இந்த  விளக்கம், இப்படி அமைகிறது:

மிகைத்தன்மை இல்லாத ஏஐ

“செயற்கை நுண்ணறிவு என்பது, மிகை, தவறான வாக்குறுதிகள் மற்றும் தவறான விளக்கங்களால் அமைந்திருக்கிறது. மற்றபடி நம்பகமானவை என கருதக்கூடிய இடங்களில் இருந்து பெறக்கூடிய செய்திகளும், வளங்களும் கூட, ஏஐ என வரும் போது தவறாக வழிகாட்டும் வகையிலும், பிழை தகவல்கள் கொண்டதாகவும் இருக்கின்றன. சோகம் என்னவென்றால், கம்ப்யூட்டர் அறிவியல் துறையில் உள்ளவர்கள் கூட இதில் சிக்கி கொண்டிருக்கின்றனர் என்பது தான். ஏஐ தொடர்பாக பணியாற்றும் கம்ப்யூட்டர் வல்லுனர்கள் பலரும், அதிக திறன் கொண்ட ஏஐ கருவிகளை அவற்றின் உள் செயல்பாடு தொடர்பான புரிதல் இல்லாமல் பயன்படுத்துவதே இதற்கான காரணம் என தனிப்பட்ட முறையில் கருதுகிறேன். இந்த கருவிகளும், நுட்பங்களும் மாய அற்புதம் போல தோன்றினாலும் அவற்றின் மிகைத்தன்மையில் இருந்து வெகு தொலைவு இருக்கின்றன”.

செயற்கை நுண்ணறிவுக்கான எதிர் நிலை எடுக்காமல், அதன் வரம்புகளையும், போதாமைகளையும் சுட்டிக்காட்டும் அருமையான விளக்கமாக இது அமைகிறது. ஏஐ தொடர்பான உரையாடல்களில் நாம் முதலில் மனதில் கொள்ள வேண்டிய அம்சம் அதன் மிகைத்தன்மை.

ஏஐ விளக்கங்களில் அதன் மிகைத்தன்மையை அகற்றிவிட்டு பார்ப்பது அடிப்படைத்தேவை.

நந்தகுமார் பதிவு: AI Without Hype

ஏஐ. என்பது சமையல் குறிப்புகளின் அறிவியல்

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *