பறப்பதில் உள்ள பயம்(ஃபியர் ஆப் ஃபிளையிங்) புகழ்பெற்ற பெண்ணிய எழுத்தாளர் எரிகா ஜாங்க் எழுதிய பிரசத்தி பெற்ற நாவல்.
எரிகா ஜாங்கிற்கு பறப்பதில் பயன் உண்டா என்று தெரியவைல்லை.பறப்பதில் உள்ள பயத்திற்கும் இந்த நாவலுக்கும் உள்ள தொடர்பு குறித்தும் தெரியவில்லை.ஆனால் விமானத்தில் பறப்பவர்களில் கணிசமானோருக்கு பறப்பதில் பயமிருக்கிறது.
உண்மையில் பறப்பதிலான பயம் சிக்கலான உளவியல் விவகாரம் என்கின்றனர்.இந்த அச்சத்திற்கு பலவித காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளன.விமானம் விபத்துக்குள்ளாகலாம் என்பதில் துவங்கி ,உயர்த்தினால் ஏற்படும் அச்சம் வரை எத்தனையோ காரணங்கள் சொல்லப்படுகின்றன.
30 ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு 18 சதவிதம் பேருக்கு இந்த பயம் இருப்பதாக தெரிவித்தது. சில ஆன்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட ஆய்வு அடிக்கடி விமானத்தில் பயனிப்பவர்களிலேயே பாதி பேர் ந்தாவது ஒரு சந்தர்பத்தில் பறக்கும் பயம் கொண்டிருப்பதாக தெரிவிக்கிறது.
விமான பயணம் எட்டாக்கனி என நினைப்பவர்கள் இந்த பயம் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை.ஆனால் தேவை கருதி விமான பயணம் மேற்கொள்ள இருப்பவர்கள் பறப்பதில் உள்ள அச்சத்தை நினைத்து மேலும் பயப்படுவது தவிர்க்க இயலாதது.
ஆனால் அவர்கள் அதிகம் கவலைப்பட தேவையில்லை.காரணம் இந்த அச்சத்தை போக்க உதவும் அமைப்புகளும் இணையதலங்களும் இருக்கின்றன.இவ்வளவு ஏன்? இப்போது இதற்கென்றே ஒரு செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
ஆப்பிளின் ஐபோனில் செயல்படக்கூடிய செயலியாக வர்ஜின் அட்லான்டிக் விமான சேவை நிறுவனத்தால் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.வர்ஜின் ஏற்கனவே இதற்காக பயிற்சி வகுப்பு ஒன்றை நடத்திக்கொண்டிருக்கிறது.பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள அந்த பயற்சி வகுப்பின் நீட்சியாக இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாக வர்ஜின் தெர்விக்கிறது.
மற்ற ஐபோன் செயலிகள் போல் இதனை ஐபோன் அல்லது இபோடு டாச்சில் டவுண்லோடு செய்து பயன்படுத்தலாம்.விமானத்தில் ஏறும் முன் அல்லது ஏறிய பின் பயமாக இருந்தால் இந்த செயலியை உயிர்பெறச்செய்ய வேண்டியது தான்.அதன்பிறகு விமானத்தின் உட்புறத்தை விவரிக்கும் வீடியோ விளக்கம் தோன்றுவதோடு பற்க்கும் பயம் தொடர்பான வழக்கமான கேள்விகளுக்கு விடை பெறலாம்.அதோடு மனதை சாந்தப்படுத்திக்கொள்வதற்கான வழிகளையும் காணலாம்.
ஆக உள்ளத்திலிருக்கும் அச்சத்தை உள்ளங்கையில் இருக்கும் சாதனத்தை கொண்டே விரட்டிவிடலாம்.
விர்ஜினின் அதிபர் ரிச்ச்ர்டு பிராஸ்னனின் அட்டகாசமான அறிமுக உறையோடு உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலி ஐபோனின் எல்லாம் வல்ல செயலிகளுக்கு மற்றொருஅருமையான உதாரணம்.