பாலிவுட் பாதுஷா ஷாருக் கானுக்கு ஷாயென்ஷா அமிதாப் அவரது டிவிட்டர் சாதனைக்காக வாழ்த்து தெரிவித்துள்ளார்.டிவிட்டரில் 4 லட்சம் பிதொடர்பாளர்கள் என்னும் மைல்கலை ஷாருக் எட்டிப்பிடித்ததை முன்னிட்டு அமிதாப் தனது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் வேண்டுமானால் அமிதாப் சீனியராக இருக்கலாம் ஆனால் டிவிட்டர்வெளியை பொருத்தவரை ஷாருக் தான் அவருக்கு சீனியர்.ஆம் நேர்டி மற்றும் உடனடி தகவல் பதிவு சாதனமான டிவிட்டரின் மகிமையை ஆரம்பத்திலேயே புரிந்து கொண்ட நட்சத்திரங்களீல் ஒருவரான ஷாருக் எப்போதோ டிவிட்டரில் தனக்கென தனி பக்கத்தை துவங்கி ரசிகர்களோடு தொடர்பு கொண்டு வருகிறார்.
மெகா ஸ்டாரான அமிதாப் கொஞ்சம் தாமதமாக தான் டிவிட்டரில் நுழைந்தார். அமிதாப் டிவிட்டரில் அடியெடுத்து வைத்தது சமீபத்தில் தான்.வலைப்பதிவு உலகில் தீவிராமாகவும் சுறுசுறுப்பாகவும் செயல்பட்டு வரும் அமிதாப் தன்னுடைய தவப்புதல்வன் அபிஷேக்கின் வேண்டுகோளை ஏற்று அன்மையில் டிவிட்டர் செய்யத்துவங்கினார்.
அமிதாப் தனது முதல் பதிவில் தனது மகன் அபிஷேக்கின் செய்த்திக்கு பதில் அளித்து குழந்தாய் நான் டிவிட்டருக்கு வந்துவிட்டேன் என்று குறிப்பிட்டிருந்தார்.அதன் பிறகு அமிதாப் சீரான வேகத்திலேயே டிவிட்டர் செய்து வருகிறார்.முதல் ஒரு வாரத்தில் 400 செய்திகள் வரை அவர் பதிவு செய்துள்ளார்.
அமிதாப் டிவிட்டருக்கு வந்ததை கேள்விப்பட்டு அவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தோடு டிவிட்டரில் பின்தொடர்பாளர்களாகி வருகின்றனர்.
இதனிடையே ஷாருக் கான் டிவிட்டரில் 4 லட்சம் பின்தொடர்பாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளார். பெரிய சாதனை தான்.இதனை அமிதாப் முதல் நபராக அங்கீகரித்து பாராட்டியுள்ளார்.இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் நீங்கள் 4 லட்சம் எண்ணிக்கையை கடந்து விட்டீர்கள் என்று அமிதாப் குறிப்பட்டுள்ளார். அதோடு என வண்டி கொஞ்சம் மெதுவாக தான் செல்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
தனது பின்தொடர்பளர்கள் எண்ணிக்கையை தான் இப்படி நகைச்சுவையோடு அவர் குறிப்பிட்டிருந்தார்.
அமிதாப்பின் இந்த மனம் திறந்த பாராட்டு இணைய உலகில் உலா வந்த வீண் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
அதாவது அமிதப்பிற்கும் ஷாருக்கிற்கும் இடையே டிவிட்டரில் ஒரு பனிப்போர் நிலவுவதாக கூறப்பட்டு வந்தது.ஷாருக், அமிதாப் இடையே மோதல் இருப்பதாக செய்தி வெளியிடுவது பாலிவுட் மீடியாவுக்கு பிடித்தமான பொழுது போக்கு.
இதனை டிவிட்டருக்கும் கொண்டு சென்று இருவரிடையே ரகசிய மோதல் இருப்பதாக பரபரப்பாக செய்திகல் வெளியிடப்பட்டன.
அமிதாப் டிவிட்டரில் வந்திருப்பது தெரிந்தும் ஷாருக் அவருக்கு வரவேற்பு தெரிவித்து வழ்த்து கூறாததையும் அமிதாப் தனது பதிவில் ஷாருக் பற்றி எதுவும் குறிப்பிடாததையும் சுட்டிக்காட்டி இவ்வாறு பேசப்பட்டது.
டிவிட்டரில் சக நட்சத்திரம் வந்தால் மகிழலாம்.வெளிப்படையாக வரவேற்காலாம்.அது அவரவரது விருப்பம்.ஷாருக் டிவிட்டருக்கு வந்த போது கரண் ஜோகர் ,போன்றோர் அவரை உற்சாகமாக் வரவேற்ற்னர்.யாரையாவது வரவேற்காமல் விட்டால் அதில் குறை காண ஒன்றும் இல்லை. ஆனால் டிவிட்டரில் பரஸ்பரம் வாழ்த்து தெரிவிப்பதும் வரவேற்பதும் எதோ மீறப்படாத பொன்விதி போலவும் கூறி புதிய டிவிட்டர் கலாச்சாரத்தை உருவாக்க மீடியா முயன்றிருக்கிறது.
நல்லவேளையாக திருவாளர் பிக் பி ஷாருக் சாதனையை வாழ்த்தி தங்களிடையே பிணக்கு எதுவும் இல்லை என உணர்த்தியுள்ளார்.
ஷாருக் 4 லட்சம் பின்தொடர்பாளர்களை பெற்றது ஒருபுறம் இருக்கட்டும் சச்சின் 3,62,650 பின்தொடர்பாளர்களோடு அவரை நெருங்கி கொண்டிருக்கிறார்.

0 Comments on “டிவிட்டர் சாதனை;ஷாருக்கிற்கு அமிதாப் வாழ்த்து”
கிரி
பின்தொடர்பவர்கள் பிரச்சனை இந்த பிரபலங்களுக்கு கூட உள்ளதா! பதிவர்கள் தான் இப்படி என்றால் இவர்களுமா! என்ன கொடுமை சார்!