யார் இந்த ரயான் மெக்கியரி.

மிகச்சிறந்த தனிநபர் இணையதளங்கள் என்று கைகாட்டிவிடக்கூடிய தளங்களின் பட்டியலில் ரயான் மெக்கியரின் தளம்(http://ryan.mcgeary.org/ )  டாப் டென்னில் இடம் பிடிக்கும். மென்பொருள் வடிவமைப்பாளரான மெக்கியரியின் தளத்தில் அவரது சுயபுராணமோ தற்பெருமைகளோ கிடையாது. அவரைப்பற்றிய சுருக்கமான அறிமுகமும் அவர் என்ன செய்கிறார் என்பதற்கான சுருக்கமான விளக்கமும் மட்டுமே முகப்பு பக்கத்தில் இருக்கிறது.மொத்த தளமும் இந்த முகப்பு பக்கம் மட்டும் தான். இந்த ஒரு பக்கத்திலேயே அவர் தன்னைப்பற்றிய தகவல்களை முடித்து கொண்டு சாப்ட்வேர் தேவைக்காக தன்னை தொடர்பு கொள்ளலாம் என்பதற்கான இணைப்புகளையும் கொடுத்திருக்கிறார்.

நான் ரயான் மெக்கியரி,
சாப்ட்வேர் வடிவமைப்பாளர்,
குழுக்களை வழிநடத்துபவர்,
உதாரணமாக விளங்ககூடியவர்,
என்னால் உங்களுக்கு உதவ முடியும்

இப்படி தான் அமைந்திருக்கிறது அவரது அறிமுகம். அதன் கீழ் அவரது சாப்ட்வேர் நிறுவனம் பற்றிய விவரம் மற்றும் அவரை தொடர்பு கொள்வதற்கான காரணம்….! அவரைப்பற்றி கூடுதல் தகவல்கள் தேவெஇ என்றால் உதவுவதற்காக ,அவரது பேஸ்புக்,டிவிட்டர்,லின்க்டின்,ஜிபிள்ஸ்,வலைப்பதிவு, ஆகியவற்றுக்கான இணைப்புகளின் ஐகான்கள் மட்டும் தளத்தின் அடியில் கண்களை உறுத்தாத வகையில் சிமிட்டுகின்றன. இவ்வளவு தான் அவரது இணையதளம். நடுவே அவரது புன்னகைக்கும் படமும் தளத்திற்கு ஒரு அந்தரங்க தன்மையை தருகிறது.

எளிமையாக ஆனால் நச்சென்று இருக்கிறது. நல்ல இணையதளம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான அழகான உதாரணம்.

ryan.mcgearyயார் இவர்?

மெக்கியரியை உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் அவர் உருவாக்கிய எல் எம் ஜி டி பை ( http://cybersimman.wordpress.com/category/search/page/9/) தளத்தை நீங்கள் அறிந்திருக்கலாம்.மிகவும் எளிமையான ஆனால் சுவாரஸ்யமான தளம்.அழகான ஒரு செய்தியையும் சொல்கிறது.

இதே போலவே, மற்றொரு சுவாரஸ்யமான தளத்தையும் (http://timeago.yarp.com/ ) கியரி உருவாக்கியிருக்கிறார். இணையத்தில்  செய்திகள் அல்லது தகவல்களின் கால முத்திய அபத்ததை இந்த தளம் போக்குகிறது.

ஒரு நிமிடத்திற்கு முன் உருவாக்கப்பட்டது என்பது போன்ற காலமுத்திரை அந்த நிமிடத்தில் அர்த்தமுள்ளதாக இருக்கும் .ஆனால் பத்து நிடங்கள் ஆன‌ பிறகும் அந்த தகவல் ஒரு நிமிடத்தற்கு முந்தையது என காட்டிக்கொண்டால் எப்படி இருக்கும்? இதே முத்திரையோடு மறுநாள் அல்லது பல நாட்கள் கழித்து பார்த்தால் எப்படி இருக்கும்? இந்த அபத்ததை தவிருக்கும் வகையில் கால முத்திரை தகவல்களை அவை உருவாக்கப்பட்டு எவ்வளவு காலம் ஆகியிருக்கிறது என்னும் வகையில் கால முத்திரை அப்டேட் ஆகி கொண்டிருக்கும் வசதியை தரும் நிரலை இந்த தளம் முன் வைக்கிறது.

அசலும் நகலும்!

கியரி தனது நண்பருடன் சேர்ந்து உருவாக்கிய கூகுலில் உங்களுக்காக தேடவா தளத்தை போலவே இருக்கும் இன்னொரு தளம் இது.( http://googleitfor.me/  ).

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *