கூகுள் ஏன் விளம்பர வலை விரிக்கிறது? எனும் கேள்விக்கான பதில், வருவாய் என எளிதாக புரிந்து கொள்ளக்கூடியது. எனினும் என் கேள்வி, பயனாளிகள் ஏன் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது தான்.
இந்த கேள்விக்கான சிந்தனை உண்டான உதாரணத்தை பார்க்கலாம். இணையத்தில் உண்டான பத்தாவது இணையதளம் எது என்பதை அறிய விரும்பி, கூகுளில் தேடிய போது, இந்த கேள்விக்கு கூகுள் ஏஐ சுருக்கச் சேவை , பத்தாவது இணையதளம் என்பது வரலாற்று நோக்கில் மைல்கல்லாக பதிவு செய்யப்படவில்லை, ஏனெனில் இணையம் 1990 ல் ஒரு இணையதளத்தில் இருந்து ஆயிரக்கணக்கான இணையதளமாக வேகமாக வளர்ந்தது. எனினும், நீங்கள் எதிர்பார்க்கும் குறிப்பிட்ட மதிப்பீட்டிற்கு ஏற்ப பொருந்தக்கூடிய பதில்களில் சில என பத்தாவதாக பதிவு செய்யப்பட்ட பெல்கோர் (bellcore.com) இணைய முகவரியை குறிப்பிடுகிறது. முதலில் பதிவு செய்யப்பட்ட நன்கறியப்பட்ட சிம்பாலிக்ஸ் (symbolics.com) முகவரியையும் குறிப்பிடுகிறது.
இதை நிச்சயம் புத்திசாலித்தனமான பதில் என்றே கருதலாம். இணைய வரலாற்றில், முதல் இணையதளமாக, டிம் பெர்னர்ஸ் லீ உண்டாக்கிய செர்ன் தளம் அமைகிறது. இரண்டாவது தளமாக ஸ்டான்போர்டு சார்பிலான தளம் என அறிய முடிகிறது. மூன்றாவதாக அமைக்கப்பட்ட தளத்தை கூட விக்கிபீடியா கட்டுரை மூலம் தெரிந்து கொள்ளலாம்.
அதன் பிறகு நான்காவது, ஐந்தாவது தளம் பற்றி எல்லாம் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. வலை வரலாறு தொடர்பாக எழுதி வருவதால் முன்னோடி தளங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம் என்பதால், ஆரம்ப கால தளங்கள் தொடர்பாக தேடிக்கொண்டே இருப்பது என் வழக்கம். அந்த வகையில், பத்தாவதாக அமைக்கப்பட்ட தளம் தொடர்பாக அறிய முடிகிறதா? என முயன்று பார்த்த போது கூகுள் ஏஐ சேவை, இத்தகைய பதிவுகள் தெளிவாக இல்லை என்பதை யூகித்து, அதற்கேற்ப பொருத்தமாக பதில் அளித்துள்ளது.
பொதுவாகவே, முதல் இணையதளம், முதல் மனிதர், முதல் சாதனையாளர் போன்ற தேடலுக்கான சரியான பதிலை இணையம் மூலம் கண்டறிவது கடினம். இந்த கேள்விகளுக்கான பதில்கள் இணைய ஆவணங்களில் எங்கோ புதைந்து கொண்டிருக்கலாம். ஆனால் தேடல் பட்டியலில் தப்பும் தவறுமான பதில் வந்து கொண்டிருக்கலாம்.
இதற்கு உதாரணம் தேவை எனில், ஹாலிவுட் நடிகர் சார்பில் அமைக்கப்பட்ட முதல் இணையதளம் எது என தேடிப்பாருங்கள். அநேகமாக இந்த கேள்விக்கு அதிகாரப்பூர்வமான பதில் கிடையாது.
இதே போலவே இந்திய நடிகர்களில் முதல் சொந்த இணையதளம் யாருடையது என தேடிப்பாருங்கள்.
இவை எல்லாம் ஆய்வு சார்ந்த கேள்விகள். முறையான ஆய்வு அடிப்படையில் யாரேனும் பதிவு செய்திருந்தால் தான் இணைய தேடலில் இதற்கான பதிலை பெற முடியும். அதிலும் பல தருணங்களில் வர்த்தக நோக்கிலான பதில்கள் எஸ்.இ.ஓ உத்திகளால் முன்னிலை பெறுவதால் பிழையான பதில்கள் சுட்டிக்காட்டப்படலாம்.
நிற்க இந்த காரணத்தினாலே, ஏஐ சாட்பாட்கள் இது போன்ற கேள்விகளுக்கு அளிக்கும் பதில்களை நம்பி விடக்கூடாது. முதல் விஷயம், ஏற்கனவே பதிவு செய்யப்படவில்லை எனில், ஏஐ சாட்பாட்களால் பதில் அளிக்க முடியாது. அதோடு, ஏற்கனவே பதிவு செய்யப்படாத நிலையில், அதை ஒரு காரணியாக வைத்து ஏஐ சாட்பாட்கள் மிக உறுதியாக பிழைத்தகவலை பதிலாக அளிக்கலாம்.
சில நேரங்களில் ஓரளவு சரியாகவும் பதில் அளிக்கலாம்.
பத்தாவது இணையதளம் தொடர்பாக கூகுளின் பதில் புத்திசாலித்தனமாக தோன்றினாலும், தரவுகள் அடிப்படையில் பூசி மொழுகப்பட்டதே. இந்த தேடலுக்கு, பத்தாவது இணையதளம் தொடர்பான பதிவுகள் இல்லை என கூகுள் ஏன் நேரடியாக பதில் அளிக்க கூடாது. ( இதில் உள்ள சிக்கல்கள் தான் சாட்பாட்களின் போதமையும் கூட).
நிற்க, கூகுள் பத்தாவது இணையதளத்திற்கு ஓரளவு ஏற்றுக்கொள்ள கூடிய பதில் அளித்ததோடு, தொடர்புடைய வேறு சில முடிவுகளையும் அளிக்கிறது. இணைய போக்குவரத்து அடிப்படையில் பத்தாவது பெரிய தளம் என அடையாளம் காணக்கூடிய பட்டியலை முன் வைக்கிறது. இதை கூட ஒரளவு புரிந்து கொள்ளலாம், ஆனால் நேரடி தொடர்பே இல்லாமல், பத்தாவது தேர்வு முடிவுகள் தொடர்பான தளங்களை முன்வக்கிறது. ஏஐ சுருக்கத்திலும் இந்த முடிவுகள் பிரதிபலிக்கின்றன.
பத்தாவது என தேடும் போது, தொடர்புடைய எல்லா பத்தாவது தளங்களும் வரலாம் என்பது கீவேர்டு கால அம்சம் என்றாலும், ஏஐ யுகத்திலும் ஏன் பத்தாவது இணையதளம் எனும் போது, ஏன் பத்தாவது தேர்வு முடிவுகள் பட்டியலிடப்பட வேண்டும்?
இதே கேள்வியை இன்னும் கூர்மையாக்கி, பத்தாவதாக பதிவு செய்யப்பட்ட தளம் என கேட்ட போது, கூகுள் பெல்கோர் தளத்தை சுட்டிக்காட்டி, தேடல் முடிவுகளில் பத்தாவது தேர்வு முடிவுகள் சார்ந்த தளங்களை பட்டியலிடுகிறது.
இப்போது என் கேள்வி, ஏஐ நுட்பத்தால், பயனாளியின் தேடல் நோக்கத்தை புரிந்து கொண்டு பதில் அளிக்கும் திறன் இருக்கிறது எனில், பத்தாவது பதிவான தளம் பற்றிய தகவல் இல்லை என்பதோடு நிறுத்திக்கொண்டிருக்கலாம் அல்லவா? ஏன் தொடர்பில்லாத இக்கேள்விக்கு பயனில்லாத தேடல் முடிவுகளை இன்னமும் பழைய பாணியிலேயே பட்டியலிட வேண்டும்.
வருவாய் வலை விரிப்பதை விட, பயனர் அனுபவம் முக்கியம் இல்லயா கூகுள்!
–