#நியூஸ், #இணைய செய்தி கையேடு

பிரெஷ்நியூஸ் – கம்போடிய செய்தி தளம்

பிரெஷ் நியூஸ் எனத்தேடினால், கம்போடியாவில் இருந்து வெளியாகும் பிரெஷ்நியூஸ் செய்தி தளத்தை கூகுள் முதல் பக்க பட்டியலில் சுட்டிக் காட்டுகிறது. கம்போடிய மொழியில் அமைந்திருக்கும் இந்த செய்தி தளத்தின் ஆங்கில பதிப்பும் இருக்கிறது. சீன மொழி பதிப்பும் இருக்கிறது.

மிக எளிதான இடைமுகத்துடன் பிரெஷ்நியூஸ் ஆசியா (https://en.freshnewsasia.com/index.php/en/ ), எனும் முகவரியில் அமைந்துள்ள ஆங்கில பதிப்பை, கம்போடியா நாட்டின் செய்திகளை அறிவதற்கான தளம் என்று கருதலாம். மேலோட்டமாக பார்க்கும் போது, இந்த செய்திகளின் தன்மையையோ, ஆசிரியர் குழு அணுகுமுறை அல்லது சார்பு நிலை குறித்து அறிய முடியவில்லை.

ஆனால், பிரெஷ் நியூஸ் தொடர்பாக இணையத்தில் தகவல்களை தேடிய போது, இதன் தோற்றம், வளர்ச்சி பற்றி அறிய முடிகிறது. இணையத்தை முதன்மையாக கொண்ட டிஜிட்டல் செய்தி தளமான பிரெஷ் நியூஸ், 2011 ம் ஆண்டு பேஸ்புக் பக்கமாக துவங்கப்பட்டு, பின்னர் இணைய பதிப்பு கண்டு வெற்றிகரமான செல்வாக்கு மிக்க செய்தி தளமாக உருவாகி இருக்கிறது. பேஸ்புக், யூடியூப், டிக்டாக் உள்ளிட்ட மேடைகளிலும் செயல்பட்டு வரும் பிரெஷ்நியூஸ் நவீன ஊடக செயல்பாட்டிற்கான சிறந்த உதாரணமாகவும் அமைகிறது.

வெற்றிகரமான ஊடகம் என்பதில் சதேகம் இல்லை என்றாலும், கம்போடிய நிலப்பரப்பிலும், அரசியல் சூழலிலும் இதன் இடம் சர்ச்சைக்குறியதாக இருப்பதை உணர முடிகிறது. கம்போடியா நாட்டில் ஊடக சுதந்திரத்தின் மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, கருத்து சுதந்திரம் பெரும் சோதனைக்கு உள்ளாகி இருக்கும் சூழலுக்கு மத்தியில் அரசு ஆதரவு நிலை மூலம் பிரெஷ் நியூஸ் வேகமாக வளர்ந்திருக்கிறது.

கம்போடியாவில் ஜனநாயகத்திற்கான குரல் நெரிக்கப்படுவதற்கு மத்தியில் பிரெஷ் நியூஸ் அரசுக்கு நெருக்கமான போக்கால் வளர்ந்து, அரசு ஆதரவு செய்திகளை, வளர்ச்சிக்கான ஆதரவு என வாதிடுவதையும் அறிய முடிகிறது. அதிலும் குறிப்பாக சில ஆண்டுகளுக்கு முன் எதிர்கட்சித் தலைவர் கைது செய்யப்பட்டதிலும், அந்த செய்தி வெளியிடப்பட்ட விதத்திலும் இந்த தளம் முக்கிய பங்கு வகித்திருக்கிறது.

அதே போல, ஆசிய வல்லரசான சீன ஆதரவு நிலையும் கொண்டிருக்கிறது.

பிரெஷ்நியூஸ் நிறுவனர் Lim Cheavutha அரசு ஆதரவு நிலையை, வளர்ச்சிக்கான ஆதரவு என வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார். பாரம்பரிய ஊடகங்களும், சுயேட்சை ஊடகங்களும் தடுமாறிக்கொண்டிருக்கும் நிலையில், சர்வாதிகார போக்கிற்காக விமர்சனத்திற்கு உள்ளாகும் கம்போடிய அரசின் ஆதரவு நிலையோடு, புதுமையான முறையில் செய்திகளை வழங்கி வெற்றி பெற்றிருக்கும் பிரெஷ் நியூஸ் தளம் சமகால செய்தி பரப்பை பற்றி பல செய்திகளை சொல்லாமல் சொல்கிறது.

கம்போடியா நாட்டின் பாரம்பரிய இதழான போம்பேம் போஸ்ட், இந்த தளத்தை அரசின் ஊதுகுழல் என விமர்சித்துள்ளது.: https://phnompenhpost.com/national/politics/government-aligned-fresh-news-seemingly-bludgeon-ruling-party/

பிரெஷ் நியூஸ் மீதான விமர்சன பார்வை: https://www.codastory.com/authoritarian-tech/fresh-news-and-the-future-of-the-fourth-estate-in-cambodia/

இணைய செய்தி உலகிற்கான வழிகாட்டி: இணைய செய்தி கையேடு

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *