Written by: "CyberSimman"

காலுறைகளுக்கான இணையதளம்.

    ஒரே மாதிரியான காலுறைகளை (சாக்ஸ்)வாங்கி அலுத்து போய் விட்டதா?கொஞ்சம் வண்ணமயமான அழகான வடிவமைப்பு கொண்ட காலுறைகள் கிடைத்தால் ந‌ன்றாக இருக்கும் என்ற எண்ணம் இருக்கிறதா?அப்படியென்றால் ஃபூட்ஸி.இன் இணையதளம் பக்கம் போய் பாருங்கள்,அசந்து போய் விடுவீர்கள்.அந்த அளவுக்கு வித்தியாசமான வடிவமைப்பில் வண்ணமயமான காலுறைகள் வரவேற்கின்றன.   சிறுவர்கள்,பெண்கள்,ஆண்கள் என எல்லோருக்கும் ஏற்ற அசத்தலான காலுறைகள் இந்த தளத்தின் மூலம் வாங்கி கொள்ளலாம்.காலுறைகள் மட்டும் அல்ல லேஸ் மற்றும் காலில் அணியக்கூடிய இன்னும் பிறவற்றையும் வாங்கலாம்.   […]

    ஒரே மாதிரியான காலுறைகளை (சாக்ஸ்)வாங்கி அலுத்து போய் விட்டதா?கொஞ்சம் வண்ணமயமான அழகான வடிவமைப்பு கொண்ட காலுறைகள் கிடைத...

Read More »

தூக்கத்தை அறிய ஒரு இணையதளம்.

  தினமும் தூங்குகிறோம்.லீவு நாள் என்றால் இன்னும் கூடுதல் நேரம் தூங்கி மகிழ்கிறோம்.தூங்குவது என்பது ஆனந்தமான விஷயம் தான்.ஆனால் நாம் ஏன் தூங்கிறோம் என்று தெரியுமா?தூக்கம் நமக்கு ஏன் அவசியம் தெரியுமா?   இந்த கேள்விக்கெல்லாம் பதில் தெரிய வேண்டும் என்றால் ‘ஸ்லீப் பார் கிட்ஸ்’இணையதளம் பக்கம் போய் பார்க்கலாம்.   தூங்குவது மிகவும் முக்கியமானது என்று சொல்லும் இந்த தளம் தூக்கம் தொடர்பான விஷயங்களை சிறுவர்களுக்கு புரிய வைப்பதற்காக என்றே உருவாக்கப்பட்டுள்ளது.   சின்ன பூச்சி […]

  தினமும் தூங்குகிறோம்.லீவு நாள் என்றால் இன்னும் கூடுதல் நேரம் தூங்கி மகிழ்கிறோம்.தூங்குவது என்பது ஆனந்தமான விஷயம் தான்....

Read More »

டிவிட்டரில் சந்தித்தவர்களை நினைவில் கொள்ள.

நிஜ உலகில் நண்பர்கள் இருப்பது போல இப்போது பேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் நண்பர்கள் கிடைக்கின்றனர். இவர்களில் பேஸ்புக் நண்பர்கள் ஒருவிதம் என்றால் டிவிட்டர் நண்பர்கள் இன்னொரு விதம்.பேஸ்புக்கில் நண்பர்கள் மூலம் நண்பர்கள் கிடைக்கின்றனர்.நண்பராக ஏற்க சம்மதமா என்று கேட்டு அது ஏற்றுக்கொள்ளப்பால் நண்பர்களாகலாம். டிவிட்டரில் அப்படி இல்லை,ஒருவருடைய‌ குறும்பதிவுகள் பிடித்திருந்தால் அல்லது பயனுள்ளதாக இருக்கும் என்று நினைத்தால் அவரது டிவிட்டர் கணக்கை பின்தொடர ஆரம்பித்து விடலாம்.அந்த நொடியில் இருந்து அவர் டிவிட்டர் நண்பராகி விடுவார். டிவிட்டரில் தான் சந்திக்க […]

நிஜ உலகில் நண்பர்கள் இருப்பது போல இப்போது பேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் நண்பர்கள் கிடைக்கின்றனர். இவர்களில் பேஸ்புக் நண்ப...

Read More »

இந்த இணைய‌தளம் உதவி சங்கிலி!.

  லட்சிய இணையதளமாக ‘சைன்.லே’ உருவாக்கப்பட்டுள்ளது.இந்த இணையதளத்தை உதவிகளுக்கான வலைப்பின்னல் என்று சொல்லலாம்.உதவி தேவைப்படுபவர்களையும் உதவிட தயாராக இருப்பவர்களையும் இணைத்து வைக்கும் பாலமாக இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.உதவிகளால் உலகை இணைப்பதும் உலகை இணைப்பதன் மூலம் உதவுகளை சாத்தியமாக்குவதும் தான் இந்த தளத்தின் நோக்கம்.   நீங்கள் நேரடியாக கூட உதவ வேண்டும் என்றில்லை;உதவக்கூடியவ‌ர்களை பரிந்துரைத்தால் போதுமானது.உங்கள் நண்பர்கள் உதவலாம்,நண்பர்களின் நண்பர்கள் உதவலாம்.இந்த உதவி சங்கிலையை ஏற்படுத்தி தருவதன் மூலம் தேவையான உதவி கிடைக்க வழி செய்கிறது சைன்.லே. […]

  லட்சிய இணையதளமாக ‘சைன்.லே’ உருவாக்கப்பட்டுள்ளது.இந்த இணையதளத்தை உதவிகளுக்கான வலைப்பின்னல் என்று சொல்லலாம்....

Read More »

இலவச இ புத்தகங்கள்.

இ புக்குகளை இலவசமாக படிக்க உதவும் இணையதளங்கள் பல இருக்கின்றன.புதிய இ புக்குகளை கட்டணம் செலுத்தி டவுன்லோடு செய்து கொள்வதற்கான தளங்களும் இருக்கின்றன. ஆனால் புத்தம் புதிய இ புக்குகள் சிலவும் கூட இணையத்தில் இலவசமாக கிடைக்கின்றன என்பது பலரும் அறியாத விஷயம்.அதுவும் பெஸ்ட் செல்லர் ரக புத்தகங்கள்.இப்படி இலவசமாக இபுக் வடிவில் கிடைக்கும் புத்தகங்களை பட்டிய‌லிடுகிறது ஹன்ட்ரட் ஜீரோஸ் இணையதளம். இ காமர்ஸ் தளங்களின் மகாராஜாவான அமேசான் டாட் காம் தளத்தில் அவப்போது பெஸ்ட் செல்லர் […]

இ புக்குகளை இலவசமாக படிக்க உதவும் இணையதளங்கள் பல இருக்கின்றன.புதிய இ புக்குகளை கட்டணம் செலுத்தி டவுன்லோடு செய்து கொள்வதற...

Read More »