Written by: "CyberSimman"

வாட்ஸ் அப் புதிய நிபந்தனைகள் சர்ச்சைக்கு காரணம் என்ன?

முன்னணி மெசேஜிங் சேவையான வாட்ஸ் அப் விதிகள் மற்றும் நிபந்தனைகள் புதுப்பிக்கப்பட்டிருப்பது இணைய உலகில் பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வாட்ஸ் அப் புதிய நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் மட்டுமே இந்த சேவையை தொடர்ந்து பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பயனாளிகளின் தரவுகளை வாட்ஸ் அப் கையாளும் விதம் தொடர்பான தகவல்களும் அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, தரவுகளை தாய் நிறுவனமான பேஸ்புக்குடன் பகிர நிர்பந்திப்பதால், வாட்ஸ் அப்பை விட்டு வெளியேற வேண்டும் என்ற கருத்தும் சமூக […]

முன்னணி மெசேஜிங் சேவையான வாட்ஸ் அப் விதிகள் மற்றும் நிபந்தனைகள் புதுப்பிக்கப்பட்டிருப்பது இணைய உலகில் பெரும் சர்ச்சையையு...

Read More »

புதுமையான மேசேஜிங் சேவை – ரியல் டைம் உரையாடலுக்கான ஹாங்க் செயலி

இணைய உலகில் புதிதாக ஒரு மேசேஜிங் செயலி அறிமுகம் ஆகியிருக்கிறது. மெசேஜிங் சேவையா? ஏற்கனவே வாட்ஸ் அப் இருக்கிறது. டெலிகிராம் இருக்கிறது, மெசஞ்சரும், ஹைக்கும் இருக்கின்றனவே … இவை போதாது என்று புதிதாக ஒரு மெசேஜிங் சேவையா என அலுத்துக்கொள்ளத்தோன்றினாலும், அட அப்படியா என கேட்க வைக்கும் புதுமையான அம்சங்களுடன் அறிமுகம் ஆகியிருக்கிறது ஹாங்க். ஆம், ஹாங்க்- இந்த பெயரில் தான் புதிய மேசேஜிங் செயலி அறிமுகம் ஆகியிருக்கிறது. மேசேஜிங் செயலியில் என்ன புதுமை இருந்துவிட முடியும் […]

இணைய உலகில் புதிதாக ஒரு மேசேஜிங் செயலி அறிமுகம் ஆகியிருக்கிறது. மெசேஜிங் சேவையா? ஏற்கனவே வாட்ஸ் அப் இருக்கிறது. டெலிகிரா...

Read More »

மெய்நிக தேநீர் அருந்துவோம் வாருங்கள்!

கொரோனா காலத்தில் அமைக்கப்பட்ட பலவித இணையதளங்கள் பற்றி எழுதி வருகிறேன். இவை எல்லாமே அக்கரையில் அமைக்கப்பட்ட அக்கறை தளங்கள். விதிவிலக்காக அமைந்த ஜன்னலோர காட்சிகளை பார்த்து ரசிக்க உதவும் இணையதளம் தவிர, ( ஒருசிலவற்றை நான் தவறவிட்டிருக்கலாம்),இந்தியாவில் கொரோனா சூழலை எதிர்கொள்ள ஆசுவாசம் அளிக்கும் இணையதளங்கள் அமைக்கப்படவில்லை. இந்தக்குறையை போக்கும் வகையில் அமைகிறது கிராப்சாய்.ஆன்லைன் (https://www.grabchai.online/ ) இணையதளம். சாய் என இந்தியில் குறிப்பிடப்படும் தேநீர் இந்தியர்களின் தேசிய பானம் போன்றது. அதிலும் பணியிடத்தில் இருக்கும் போது […]

கொரோனா காலத்தில் அமைக்கப்பட்ட பலவித இணையதளங்கள் பற்றி எழுதி வருகிறேன். இவை எல்லாமே அக்கரையில் அமைக்கப்பட்ட அக்கறை தளங்கள...

Read More »

தனிமை சூழலில் நட்பு வளர்க்கும் இணையதளம்

கொரோனா சூழலில் அமைக்கப்பட்ட இணையதளங்களின் பட்டியலில்  வருகிறது குவாரண்டைன் பட்டி (https://www.qtinebuddy.com/ ) இணையதளம். கொரோனாவை கட்டுப்படுத்த அமல் செய்யப்பட்ட பொதுமுடக்க சூழலில், தனிமை தோழமையை தேடிக்கொண்டு ஆறுதல் அடைய வழி செய்தது இந்த தளம். அந்த வகையில், கொரோனா கொடுஞ்சூழலில் பெரும் ஆசுவாசம் அளித்த இணையதளமாக இது அமைகிறது. இணையத்தில் நட்பு வளர்க்க உதவும் இணையதளங்களு குறைவில்லை. நன்கறியப்பட்ட பேஸ்புக் வகை வலைப்பின்னல் தளங்கள் முதல், திடிர் உரையாடலுக்கு வழி செய்யும் சாட்ரவுளெட் ( ) […]

கொரோனா சூழலில் அமைக்கப்பட்ட இணையதளங்களின் பட்டியலில்  வருகிறது குவாரண்டைன் பட்டி (https://www.qtinebuddy.com/ ) இணையதளம்...

Read More »

கழுத்தை நெறிக்கும் டிஜிட்டல் கடன் வலை !

இந்தியாவில் இப்போது பணபரிவர்த்தனையை டிஜிட்டல் முறையில் மேற்கொள்வது எளிதாகி இருக்கிறது. மொபைல் செயலிகள், டிஜிட்டல் வாலெட்கள், யுபிஐ சார்ந்த சேவைகள் வாயிலாக, டிஜிட்டல் முறையில் பணம் அனுப்பவும், பெறவும் முடிகிறது. இப்படி டிஜிட்டல்மயமாகி இருப்பது பண பரிவர்த்தனை மட்டும் அல்ல, கடன் வசதியும் தாம். ஆம், இப்போது டிஜிட்டல் கடன் பெறுவது எளிதாகி இருக்கிறது. பல்வேறு இணையதளங்கள் மற்றும் மொபைல் செயலிகள் டிஜிட்டல் கடன் வழங்குகின்றன. அடிப்படையில் பார்த்தால், டிஜிட்டல் முறையில் விண்ணப்பிக்கப்பட்டு, டிஜிட்டல் முறையில் வழங்கப்படும் […]

இந்தியாவில் இப்போது பணபரிவர்த்தனையை டிஜிட்டல் முறையில் மேற்கொள்வது எளிதாகி இருக்கிறது. மொபைல் செயலிகள், டிஜிட்டல் வாலெட்...

Read More »