Written by: "CyberSimman"

ஐந்து நிமிட பாடங்கள்

உலகின் மகத்தான ஐடியாக்களை எல்லாம் ஐந்து நிமிட சுருக்கங்களாக ஆடியோ பதிவாக கேட்க விருப்பமா? எனில், லிஸ்னபில் (https://listenable.io/ ) சேவை உங்களுக்கானது. சுய முன்னேற்றம், தகவல் தொடர்பு, ஆரோக்கியம், உளவியல், வேலைவாய்ப்பு என பல்வேறு தலைப்புகளில் இதில் பாடங்களை ஆடியோ வடிவில் கேட்கலாம். ஒவ்வொரு பாடமும் ஐந்து நிமிடங்கள் தான். வேறு ஏதேனும் வேலை பார்த்தபடியே இந்த பாடங்களை கேட்டு உங்கள் மேம்படுத்திக்கொள்ளலாம். இன்னும் நிறைய பாடங்கள் வர இருக்கிறதாம். ஆனால் ஒன்று இப்போதைக்கு ஐபோனுக்கான […]

உலகின் மகத்தான ஐடியாக்களை எல்லாம் ஐந்து நிமிட சுருக்கங்களாக ஆடியோ பதிவாக கேட்க விருப்பமா? எனில், லிஸ்னபில் (https://list...

Read More »

வலை 3.0: இணைய வலை விரித்த மேதை

இணைய வரலாற்றில் பீட்டர் கிர்ஸ்டனுக்கு (Peter Kirstein) முக்கிய இடம் இருக்கிறது. இவர் தான், இணையத்தை ஐரோப்பாவுக்கு கொண்டு வந்தவர் அல்லது கொண்டு சென்றவர். அந்த வகையில், கிர்ஸ்டன் ஐரோப்பிய இணையத்தின் தந்தை என போற்றப்படுகிறார். ஆனால், கிர்ஸ்டனின் பங்களிப்பு ஐரோப்பாவுடன் முடிவடந்துவிடவில்லை. அகில உலகிற்கும் அதை விரிவாக்கியதாக அவரது செயல் அமைந்திருக்கிறது. இணையத்தின் அடிப்படை அம்சத்தை புரிந்து கொண்டால், அதன் வையம் தழுவிய விரிவாக்கத்தில் கிர்ஸ்டனின் பங்களிப்பையும் புரிந்து கொள்ளலாம். இணையம் என்பது கம்ப்யூட்டர்களின் வலைப்பின்னல். […]

இணைய வரலாற்றில் பீட்டர் கிர்ஸ்டனுக்கு (Peter Kirstein) முக்கிய இடம் இருக்கிறது. இவர் தான், இணையத்தை ஐரோப்பாவுக்கு கொண்டு...

Read More »

கம்ப்யூட்டர் பயன்பாட்டை எளிதாக்கிய மேதை லாரி டெஸ்லர்

லாரி டெஸ்லரை (Larry Tesler ) நீங்கள் அறியாமல் இருக்கலாம். ஆனால், நீங்கள் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர் என்றால், அவரது கண்டுபிடிப்பை பயன்படுத்தாமல் இருக்க முடியாது. அந்த கண்டுபிடிப்பை தெரிந்து கொண்டால், டெஸ்லருக்கு மனதுக்குள் நன்றி சொல்வீர்கள். கட், காபி, பேஸ்ட் கட்டளை தான் அந்த கண்டுபிடிப்பு. கம்ப்யூட்டரில் டைப் செய்த உள்ளடக்கத்தை, அதே கம்ப்யூட்டரில் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல தவறாமல் பயன்படுத்தப்படும் உத்தி இது. கம்ப்யூட்டர் பயன்பாட்டை எளிமையாக்கி இருக்கும் எண்ணற்ற கட்டளைகளில் […]

லாரி டெஸ்லரை (Larry Tesler ) நீங்கள் அறியாமல் இருக்கலாம். ஆனால், நீங்கள் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர் என்றால், அவரது கண்...

Read More »

வலை 3.0: சென்னையில் செயல்பட்ட இணைய தகவல் பலகை சேவை

சென்னை ஆர்வலர்களுக்கு ஒரு கேள்வி. வரலாறு முக்கியம் நண்பர்களே. அதிலும், நாம் அதிகம் கவனம் செலுத்தாத, இணைய வரலாறு இன்னமும் முக்கியம். பாருங்கள், சமூக வலைத்தளங்களை எல்லோரும் பயன்படுத்துகிறோம். சமூக வலைத்தளம் என்றதும், பேஸ்புக்கையும், வாட்ஸ் அப்பையும் தான் நினைத்துக்கொள்கிறோம். ஆனால், பேஸ்புக்கிற்கு முன்னரே சமூக வலைத்தளங்கள் உருவாகிவிட்டன என்பதை கவனிக்க மறந்து விடுகிறோம். பிரன்ஸ்டர், மைஸ்பேஸ் போன்ற தளங்கள் தான் இன்றைய சமூக வலைப்பின்னல் சேவைகளுக்கு முன்னோடி. அதிலும் மைஸ்பேஸ் ஒரு காலத்தில் இணையத்தில் கொடி […]

சென்னை ஆர்வலர்களுக்கு ஒரு கேள்வி. வரலாறு முக்கியம் நண்பர்களே. அதிலும், நாம் அதிகம் கவனம் செலுத்தாத, இணைய வரலாறு இன்னமும்...

Read More »

வலை 3.0: இந்திய ரெயில்வேயில் நிகழ்ந்த அற்புதம்!

ஆன்லைனில் ரெயில் டிக்கெட்கள் முன்பதிவு செய்வது இன்று சர்வ சாதாரணமாகி இருக்கலாம். டிக்கெட் முன்பதிவு செய்வது மட்டும் அல்ல, ரெயிலில் பயணம் செய்யும் போது தேவையன உணவை ஆன்லைனிலேயே ஆர்டர் செய்ய உதவும் செயலிகள் இருக்கின்றன. ரெயிலின் வருகை, தற்போதைய நிலை போன்றவற்றை அறிந்து கொள்ள உதவும் செயலிகளும் இருக்கின்றன. ரெயில் பயணிகளைப்பொருத்தவரை, எல்லாமே விரல்நுனியில் சாத்தியமாகிறது. இந்த சேவைகளில் எதிர்கொள்ளக்கூடிய சின்ன சின்ன குறைகள் கூட பெரும் அதிருப்தியை உண்டாக்கிவிடுகிறது. அந்த அளவுக்கு மேம்பட்ட சேவையை […]

ஆன்லைனில் ரெயில் டிக்கெட்கள் முன்பதிவு செய்வது இன்று சர்வ சாதாரணமாகி இருக்கலாம். டிக்கெட் முன்பதிவு செய்வது மட்டும் அல்ல...

Read More »